உலகம் முழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய தகவல்கள்
யெகோவாவின் சாட்சிகள்—அவர்கள் யார்?
யெகோவாவின் சாட்சிகள் என்ன செய்கிறார்கள், எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றிய தகவல்கள்.
யெகோவாவின் சாட்சிகளும் அவர்கள் வெளியிடும் பிரசுரங்களும்
யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் பிரிண்ட் மற்றும் எலக்ட்ரானிக் வடிவங்களில் கிடைக்கின்றன. மக்கள் கடவுளிடம் நெருங்கிப் போவதற்கும், பைபிள் போதனைகளை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வதற்கும் இந்தப் பிரசுரங்கள் உதவி செய்கின்றன. அதோடு, அவற்றைப் படிப்பவர்களுக்கு அவை நல்ல பலன்களைத் தருகின்றன. அவர்களுடைய வாழ்க்கை தரத்தையும் உயர்த்துகின்றன.
யெகோவாவின் சாட்சிகளும் சமூகத்தில் அவர்களின் பங்கும்
யெகோவாவின் சாட்சிகள் சமுதாயத்துக்கு உதவ நிறைய முயற்சி எடுக்கிறார்கள். பைபிள் சொல்வதுபோல் வாழ்வது அவர்களுக்கு பலன் தந்திருக்கிறது. அதனால் தாங்கள் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்கும் சொல்கிறார்கள், மனிதாபிமான உதவிகளையும் செய்கிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகளும் அவர்கள் செய்யும் பொது ஊழியமும்
யெகோவாவின் சாட்சிகள் பைபிளில் இருக்கும் நல்ல செய்தியை மற்றவர்களுக்குச் சொல்வதை தங்களுடைய வணக்கத்தின் ஒரு முக்கியமான பாகமாக நினைக்கிறார்கள். எந்தெந்த முறைகளில் அதைச் செய்கிறார்கள்? அவர்கள் செய்யும் ஊழியத்தால் சமுதாயத்தில் என்னென்ன நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன?
யெகோவாவின் சாட்சிகளும் குடும்ப வாழ்க்கையும்
யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய குடும்பங்களில் பைபிள் சொல்வதுபோல் வாழ ரொம்ப முயற்சி எடுக்கிறார்கள். நல்ல கணவர்களாக, மனைவிகளாக, பிள்ளைகளாக இருப்பதற்கு பைபிள் தரும் ஆலோசனைகள் அவர்களுக்கு உதவுகின்றன. பாதுகாப்பான, அன்பான குடும்ப சூழலை அனுபவிக்கவும் உதவுகின்றன. பைபிள் விஷயங்களை தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதை பெற்றோர்கள் முக்கியமான பொறுப்பாக நினைக்கிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் பத்து கேள்விகளுக்கான பதில்கள்.
யெகோவாவின் சாட்சிகளும் உடல்நலப் பராமரிப்பும்
யெகோவாவின் சாட்சிகள் உயிரை கடவுளிடமிருந்து கிடைத்த அருமையான பரிசாக பார்க்கிறார்கள். உயிரையும் இரத்தத்தையும் அவர்கள் புனிதமாக நினைக்கிறார்கள். தங்களுடைய குடும்பங்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். பாதுகாப்பான முறையிலும் சிறந்த முறையிலும் இரத்தமில்லாத மாற்று சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்காக மருத்துவர்களோடு அவர்கள் சந்தோஷமாக ஒத்துழைக்கிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகளும் படைத்துறை சாராத பொதுச் சேவையும்
மனசாட்சியின் காரணமாக ராணுவ சேவையைச் செய்ய மறுப்பது ஒருவருடைய அடிப்படை உரிமை என்பதை ரொம்ப காலமாகவே சர்வதேச சட்டங்கள் சொல்கின்றன. சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் வழிமுறைகளை அரசாங்கங்கள் பின்பற்றி மாற்று பொதுச் சேவைகளை செய்ய அனுமதிக்கும்போது யெகோவாவின் சாட்சிகள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். அதுவும், அந்த மாற்று சேவைகள் தண்டனை போல இல்லாமல் சமுதாயத்திற்கு உண்மையிலேயே பயன்தரும் விதத்தில் இருக்கும்போது யெகோவாவின் சாட்சிகள் அதற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகளும் அரசியல் நடுநிலைமையும்
பைபிள் போதனைகளுக்கு கீழ்ப்படிந்து யெகோவாவின் சாட்சிகள் அரசியலில் நடுநிலைமையோடு இருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் நடுநிலைமையோடு இருப்பது நாட்டின் சமாதானத்துக்கு கைகொடுப்பதை நிறைய அரசாங்கங்கள் புரிந்து வைத்திருக்கின்றன. அதோடு, யெகோவாவின் சாட்சிகள் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள், அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பும் மரியாதையும் தருகிறவர்கள் என்பதையெல்லாம் அந்த அரசாங்கங்கள் ஒத்துக்கொள்கின்றன.
யெகோவாவின் சாட்சிகளும் வணக்கத்திற்காக ஒன்றுகூடி வருவதும்
ஒன்றுகூடி வருவது தங்களுடைய நம்பிக்கைகளைப் பலமாக வைத்துக்கொள்ள ரொம்ப முக்கியம் என்று யெகோவாவின் சாட்சிகள் நினைக்கிறார்கள். அவர்கள் கூட்டங்களுக்காக கூடிவரும் கட்டிடங்களை ராஜ்ய மன்றம் என்று சொல்வார்கள். பைபிளைப் பற்றி அங்கு கற்றுக்கொள்வார்கள். பொது மக்கள் யார் வேண்டுமானாலும் அதில் கலந்துகொள்ளலாம்.
யெகோவாவின் சாட்சிகளும் பேரழிவு நிவாரண சேவையும்
பேரழிவுகள் நடக்கும்போது, யெகோவாவின் சாட்சிகள் நிவாரண வேலைகளை, அதாவது உடலளவிலும் மனதளவிலும் ஆன்மீக விதத்திலும் தேவைப்படும் உதவிகளை உடனடியாக செய்ய தயாராக இருக்கிறார்கள். அவர்கள் ஒழுங்கமைக்கப்பட்டு ஒற்றுமையாக செய்கிற இந்த வேலைகளை அரசாங்க அதிகாரிகளும் மற்ற நிவாரண பணியாளர்களும் பாராட்டியிருக்கிறார்கள்.