Skip to content

பைபிளில் இருப்பது வெறும் மனிதர்களின் கருத்துக்களா?

பைபிளில் இருப்பது வெறும் மனிதர்களின் கருத்துக்களா?

பைபிள் தரும் பதில்

 பைபிளை பொதுவாக பரிசுத்த வேதாகமம் என்று சொல்வார்கள். அதில், நிறைய ஞானமான அறிவுரைகள் இருக்கிறது. பைபிளில் இருக்கும் அறிவுரைகளை பற்றி பைபிளே இப்படி சொல்கிறது: “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கின்றன.” (2 தீமோத்தேயு 3:16) இந்த விஷயத்தை நம்புவதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கிறது. சில உண்மைகளை இப்போது பார்க்கலாம்:

  •   பைபிளின் வரலாற்றுத் தகவல்கள், தவறு என்று யாருமே இதுவரைக்கும் நிரூபித்தது இல்லை.

  •   பைபிளை எழுதியவர்கள் நேர்மையாக, உள்ளதை உள்ளபடியே எழுதியிருக்கிறார்கள். அதனால், பைபிளில் இருக்கும் தகவல்கள் உண்மையாக இருக்கிறது.

  •   பைபிளின் முக்கிய பொருள்: மனிதர்களை ஆட்சி செய்வதற்கு கடவுளுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. அவருடைய ஆட்சியின் மூலம் அவருடைய எல்லா விருப்பத்தையும் நிறைவேற்றுவார்.

  •   பைபிளை ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன் எழுதினார்கள். அந்த சமயத்தில் சில தவறான விஞ்ஞான கருத்துகள் பரவலாக நம்பப்பட்டது. ஆனால், அப்படிப்பட்ட எந்த தவறான விஞ்ஞான கருத்தும் பைபிளில் எழுதப்படவில்லை. அதில் உண்மைகள் மட்டுமே இருக்கிறது.

  •   பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனங்கள், அதாவது எதிர்காலத்தில் நடக்கும் என்று முன்னதாகவே சொல்லப்பட்ட விஷயங்கள், உண்மையிலேயே நடந்திருக்கிறது. இதை வரலாற்றுச் சம்பவங்கள் நிரூபிக்கிறது.