ஒரே பாலினத்தவரிடம் ஈர்க்கப்படுவது ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்குச் சமமா?
இல்லவே இல்லை!
உண்மை: பெரும்பாலும், ஒரே பாலினத்தவரிடம் ஏற்படும் ஈர்ப்பு தற்காலிகமாக ஏற்படும் ஒரு உணர்ச்சிதான்.
இன்னொரு பெண்ணிடம் ஈர்க்கப்பட்ட லிசெட் என்ற 16 வயது பெண்ணின் அனுபவமும் இதுதான். அவள் இப்படிச் சொல்கிறாள்: “டீனேஜ் வயசுல நம்ம உடம்புல இருக்கற ஹார்மோன்களோட அளவு மாறிகிட்டே இருக்கும்னு ஸ்கூல்ல படிச்சிருக்கேன். உடம்புல ஏற்படற மாற்றங்கள பத்தி டீனேஜ் பசங்க முதல்ல தெரிஞ்சுக்கணும். அப்பதான், பசங்கமேல பசங்களுக்கும் பொண்ணுங்கமேல பொண்ணுங்களுக்கும் வர்ற ஈர்ப்பு சீக்கிரத்துல போயிடும்னு புரிஞ்சுப்பாங்க. ஓரினச்சேர்க்கையில ஈடுபடுறவங்க போல ஆயிட்டோமேங்கற கவலையும் அவங்களுக்கு இருக்காது.”
ஒருவேளை, அப்படிப்பட்ட ஈர்ப்பு உங்களுக்குத் தொடர்ந்து இருந்தால் என்ன செய்வது? ஒரே பாலினத்தவரிடம் ஈர்க்கப்பட்ட ஒருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடக் கூடாதென்று கடவுள் கட்டளை கொடுத்திருப்பது அநியாயமாகத் தெரிகிறதா?
மனிதர்களுக்கு வரும் பாலியல் ஆசைகளை எப்படி வேண்டுமானாலும் திருப்தி செய்துகொள்ளலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்குக் கடவுளுடைய கட்டளை அநியாயமாகத்தான் தெரியும். ஆனால், மனிதர்களால் முறைகேடான பாலியல் ஆசைகளுக்கு அடிபணியாமல் இருக்க முடியும் என்ற நம்பிக்கையை பைபிள் தருகிறது.—கொலோசெயர் 3:5.
பைபிள் சொல்வது நியாயமானதுதான். எதிர்பாலாரிடம் ஏற்படுகிற ஈர்ப்பாக இருந்தாலும் சரி, ஒரே பாலினத்தவரிடம் ஏற்படுகிற ஈர்ப்பாக இருந்தாலும் சரி, “பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்” என்றுதான் பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 6:18) லட்சக்கணக்கான ஆட்கள் பைபிள் சொல்கிறபடி வாழ்வதால், தங்களுக்கு வரும் தவறான பாலியல் ஆசைகளைக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல், கடவுளுக்குப் பிடித்ததைச் செய்ய விரும்பும் ஒருவரால், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட வேண்டுமென்ற ஆசையைக் கட்டுப்படுத்த முடியும்.—உபாகமம் 30:19.