Skip to content

புகைப்படத் தொகுப்பு—பிள்ளைகள் ஆசை ஆசையாகப் பார்க்கும் வீடியோக்கள்

புகைப்படத் தொகுப்பு—பிள்ளைகள் ஆசை ஆசையாகப் பார்க்கும் வீடியோக்கள்

கேலப், சோஃபியா என்ற அனிமேஷன் கதாபாத்திரங்களின் அட்டகாசமான நடிப்பையும், அருமையான பாடல்களையும் சிறப்பித்துக் காட்டுகிற யெகோவாவின் நண்பனாகு! என்ற வீடியோ தொடர் பெருமளவு வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்தத் தொடரின் பல்வேறு வீடியோக்களைப் பாராட்டி பெற்றோர்களும் பிள்ளைகளும் ஏராளமான கடிதங்களை எழுதியிருக்கிறார்கள். பிள்ளைகள் எழுதி அனுப்பிய பாராட்டு மடல்களில் இதோ சில:

  • “‘கேட்போம், கடைப்பிடிப்போம், ஆசி பெறுவோம்’-ங்கற டிவிடிக்கு தேங்க்யூ. நானும் என் புலிக்குட்டி பொம்மையும் தினமும் அத பார்க்கறோம்.”​—ஸக், 5 வயது.

  • “யெகோவாவுக்கு என்னை ரொம்பப் படிக்கும்னு... எப்போ வேணாலும் நான் அவருகிட்ட ஜெபம் செய்யலாம்னு... புதுப் பாட்டுல இருந்து தெரிஞ்சுகிட்டேன்.”​—மிக்காரையா, 6 வயது.

  • “அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிய கத்துக்கிட்டேன், அழுக்கு பண்ணினா அத சுத்தம் செய்யணும்னு கத்துக்கிட்டேன். இந்தக் குழந்தைங்க படத்த தயாரிச்சு தந்ததுக்கு நன்றி!”​—நீக்கோல், 8 வயது.

  • “இந்த வீடியோவுக்காக ரொம்ப தேங்க்ஸ்! இத பாக்க ரொம்ப ஜாலியா, சந்தோஷமா இருந்துச்சு. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு!”​—மெக்கன்ஸீ, 5 வயது.

  • “யெகோவாவின் நண்பனாகு! வீடியோக்கள்னா எனக்கு ரொம்ப இஷ்டம். ஒரு நாள்கூட விடாம பாக்கறேன். யெகோவாதான் உங்களுக்கு இந்த சூப்பரான ஐடியா குடுத்திருக்காரு!”​—ஆவா, 8 வயது.

  • “இந்த வீடியோக்கள பாக்க எனக்கு ரொம்பப் புடிக்கும். எல்லா பாட்டையும் பாடக் கத்துக்கிட்டு இருக்கேன். இந்த வீடியோக்கள பாக்க பாக்க யெகோவா மேல அன்பு அதிகமாகுது.”​—டீவன், 4 வயது.

  • “அடுத்த கேலப் வீடியோ எப்ப வரும்னு ஆசையா காத்துட்டு இருக்கேன்! இந்த மாதிரி நல்ல வீடியோக்கள இன்னும் நிறைய தாங்க!”​—வன்ஸ், 8 வயது.

ஆஸ்திரேலியா​—ஷைலோ, 6 வயது

பாடம் 12: கேலபும் சோஃபியாவும் பெத்தேலைச் சுற்றிப் பார்க்கிறார்கள்

ஆஸ்திரேலியா​—ஸீயனா, 8 வயது

பாடல் 106: யெகோவாவின் நண்பராய் ஆகுங்கள்

பிரேசில்​—எட்வார்டோ, 10 வயது

பாடம் 13: தைரியமா பேச யெகோவா உதவுவார்

ஜெர்மனி​—மெஷல், 11 வயது

பாடம் 10: விட்டுக்கொடு பாசமா இரு

ஜெர்மனி​—ப்ரிசில்லா, 8 வயது

பாடம் 11: மன்னிக்கணும்

ஜப்பான்​—மீக்கூ, 7 வயது

பாடம் 13: தைரியமா பேச யெகோவா உதவுவார்

ஜப்பான்​—டொமொஆக்கி, 10 வயது

பாடம் 6: ப்ளீஸ் & தேங்க்யூ சொல்லணும்

மெக்சிகோ​—சாம்வெல், 7 வயது

பாடம் 9: “யெகோவாதான் எல்லாத்தையும் படைச்சார்”

ஐக்கிய மாகாணங்கள்​—ஆட்ரியானா, 6 வயது

பாடல் 92: “வார்த்தை பிரசங்கி!”

ஐக்கிய மாகாணங்கள்​—ஆந்தனி, 11 வயது

பாடம் 2: யெகோவாவுக்கு கீழ்ப்படி