உன்னைச் சுற்றிப் பார்!
1. பார், கண் திறந்து பார்!
உன்னைச் சுற்றிப் பார்!
ஓர் போனுக்குள் சிறை கிடக்காதே!
நாளெல்லாம் ஃபிரெண்ட் ரிக்வெஸ்டுகளும்
லைக்ஸ்சும் போட்டு நீ
ஆன்லைனில் உன்னை தொலைக்காதே!
நண்பா, இயற்கையின் இனிமையைக் கொஞ்சம் பார்த்தால் என்ன?
செயற்கையை விட்டு நீ வந்திடு!
(பல்லவி)
வா நண்பா!
உன்னை நீ சுற்றிப் பார்!
சந்தோஷமான உன் குடும்பத்தை கொஞ்சம் பார்!
என்னோடு வா, நண்பா
ஓர் போன் வேண்டாம் என் நட்பை ருசித்திட வா!
2. பார், நேரம் எடுத்து நண்பர்களைப் பார்!
நல்நட்பை ஃபோனால் நீ இழக்காதே.
உண்மையாய் உன்னோடிருக்கும் உன் நண்பர்களை பார்.
உறவுகள் போனால் கிடைக்காதே!
நண்பா, இதயம் காட்டும் ஆப்ஸ் எதுவும் ஃபோனில் கிடையாதே!
உண்மை நட்பை இன்று நாம் பார்ப்போமா,
(பல்லவி)
வா நண்பா!
உன்னை நீ சுற்றிப் பார்!
சந்தோஷமான உன் குடும்பத்தை கொஞ்சம் பார்!
என்னோடு வா, நண்பா
ஓர் போன் வேண்டாம் என் நட்பை ருசித்திட வா!
(இடையில் வரும் வரி)
என் நட்பை ருசித்திட வா!
(பிரிட்ஜ்)
ஃபோனுக்குள் மூழ்கிவிடாதே
பயனற்ற செய்திகளும் அங்கிருக்குமே.
ஆன்லைனில் ஆழ்ந்திடாதே
உண்மை உலகத்துக்கு வா, நேரில் பழகு நண்பரோடு!
3. வை, ஃபோனை கீழே வை! குடும்பத்தை நினை!
சந்தோஷ நேரங்கள் திரும்பாதே!
பார், உன்னை நேசிக்கும் நல்நெஞ்சங்களை பார்.
உன் உள்ளம் திறந்து பேசு நண்பரோடே!
இதயத்தில் உள்ளதெல்லாம் ஃபோனில் தெரியுமா?
உண்மை நட்பை இன்று நாம் பார்ப்போமா?
(பல்லவி)
வா நண்பா!
உன்னை நீ சுற்றிப் பார்!
சந்தோஷமான உன் குடும்பத்தை கொஞ்சம் பார்!
என்னோடு வா, நண்பா
ஓர் போன் வேண்டாம் என் நட்பை ருசித்திட வா!
உன்னை நீ சுற்றிப் பார்!
சந்தோஷமான உன் குடும்பத்தை கொஞ்சம் பார்!
என்னோடு வா, நண்பா
ஓர் போன் வேண்டாம் என் நட்பை ருசித்திட வா!