Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சகோதர அன்பு

சகோதர அன்பு
  1. 1. உலகில் எந்த இடமானாலுமே,

    உறவென்று அழைக்க அருமை நண்பர் உண்டு!

    குடும்பமாய், அன்பினால் ஒன்றிணைந்தோமே!

    இணைந்தோமே! ஓ...

  2. 2. சகோதரிகள் சகோதரர்கள்

    உடன்பிறவா அன்பு சொந்தங்கள்தான்.

    மழை போல பொழிகின்றார் அன்பு பாசத்தை,

    நம்மீதிலே! ஓ...

    (பல்லவி)

    யெகோவா பராமரிப்பார்,

    அன்னை போலவே!

  3. 3. காடுமேடுகளோ தீவுகளோ

    குக்கிராமமோ நகரமோ மாமலையோ,

    எங்கு நாம் வாழ்ந்தாலும் தேவனால் இணைந்தோம்!

    குடும்பமாய்! ஓ...

    (பல்லவி)

    யெகோவா பராமரிப்பார்,

    ஓர் அன்னை போலவே!

    (பிரிட்ஜ்)

    உலகமோ யுத்த தேசம்,

    சுட்டெரிக்கும் பாலைவனம்.

    அதில் காண்கிறோம் பூங்காவனம்,

    யெகோவாவின் மக்கள் வசம்! ஓ...

  4. 4. ஏசு கற்றுத் தந்தார் அன்பின் வழி.

    லட்சோப லட்ச மக்களே நம்மீதிலே,

    யெகோவா போல், மனதார அன்பை காட்டுவார்.

    குடும்பமாய், இணைந்தோமே! ஓ...