Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நன்றாக யோசித்து தேர்ந்தெடு!

நன்றாக யோசித்து தேர்ந்தெடு!

டவுன்லோட்:

  1. 1. அலைகள் அடிக்கும் உள்ளத்தில்.

    என்னவள் யாரோ?

    ஆனால் பொறுமையாய் தீர்மானங்களை நான் செய்வேன்.

    வாழ்வில் வசந்தமா புயலா எனது கையில்!

    இளம் இதயத்தில் உள்ள ஆசைகள் மறையுமே நொடியிலே!

    (பல்லவி)

    காத்திரு! பொறுமையாக.

    நீ தேர்ந்தெடு!

    உன் உள்ளம் அலைபாய்ந்தாலும்தானே

    யோசி, ‘ஏற்ற துணைதானா?’

    கைகூடும், நீ காத்திருந்தாலே!

    நன்றாய் யோசி!

  2. 2. என்னை நேசிக்கும் இதயம் தேடினேன், இவன் மனதைக் கவர்ந்தான்.

    ஆனால் இதய வாசலை திறக்கவே மாட்டேன்.

    நான் நடப்பேன் யெகோவா வழியில்.

    பைபிள் படித்தேன்.

    அவர் வழியில் என்னோடு நடக்கும் துணை வர காத்திருப்பேன்.

    (பல்லவி)

    காத்திரு! பொறுமையாக.

    நீ தேர்ந்தெடு!

    உன் உள்ளம் அலைபாய்ந்தாலும்தானே

    யோசி, ‘ஏற்ற துணைதானா?’

    கைகூடும், நீ காத்திருந்தாலே!

    நன்றாய் யோசி!

    நன்றாய் யோசி!