Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் யாரிடம் போவேனோ?

நான் யாரிடம் போவேனோ?

டவுன்லோட்:

  1. 1. அன்பு மேய்ப்பராய்

    ஏசு என்னை கூட்டி சென்று,

    என் பாதையெல்லாம்

    வழி காட்டுகின்றார்.

    தன் நெஞ்சோடு சேர்த்து

    என்மேல் பாசம் வைத்து,

    அளவில்லாமல்

    அன்பு காட்டுகின்றார்.

    (பல்லவிக்கு முன்)

    சிங்கத்தின் கையில் என்னை

    என்றும் இரையாக்க மாட்டேன்.

    மேய்ப்பர் குரல் கேட்பேன்

    வழிமாறி போக மாட்டேன்.

    (பல்லவி)

    நான் யாரிடம் போவேனோ?

    மேய்ப்பர் இல்லாமல் நான் வாழ்வேனோ?

    நான் வேறெங்கு போவேனோ?

    தன் உயிரை தந்து

    என் உயிரை மீட்ட

    என் மேய்ப்பர் பின்னே நான் போவேனே!

  2. 2. எங்கோ அலைந்த என்னை தேடி

    கொண்டுவந்தார்,

    என் வாழ்க்கைக்கென்று

    ஒரு அர்த்தம் தந்தார்.

    என் காயங்கள் ஆற்றும் மேய்ப்பர்

    ஏசுவிற்கே,

    என் வாழ்நாளெல்லாமே

    நான் கீழ்ப்படிவேன்.

    (பல்லவிக்கு முன்)

    யார் என்ன சொன்னாலும்,

    என் பாதையை மாற்ற மாட்டேன்.

    ஏசுவின் சொல் கேட்பேன்,

    உண்மையாக என்றும் வாழ்வேன்.

    (பல்லவி)

    நான் யாரிடம் போவேனோ?

    மேய்ப்பர் இல்லாமல் நான் வாழ்வேனோ?

    நான் வேறெங்கு போவேனோ?

    தன் உயிரை தந்து

    என் உயிரை மீட்ட

    என் மேய்ப்பர் பின்னே நான் போவேனே!

    (பல்லவி)

    நான் யாரிடம் போவேனோ?

    மேய்ப்பர் இல்லாமல் நான் வாழ்வேனோ?

    நான் வேறெங்கு போவேனோ?

    தன் உயிரை தந்து

    என் உயிரை மீட்ட

    என் மேய்ப்பர் பின்னே நான் போவேனே!

    துருவங்கள் மாறலாம்,

    எந்தன் பாதை மாற மாட்டேனே நான்!