புது மொழியைக் கற்றுக்கொள்ளலாம்!
டவுன்லோட்:
1. புதிய பாஷை ஒன்றைக்
கற்றுக்கொள்ளட்டுமா?
கெஞ்சி கேட்கின்றேனே
யெகோவா உம்மிடமே!
ஓர் நொடி யோசித்தாலே,
முடிவெடுக்கலாமே!
புதிதாய் கற்றால்தானே
அடடா ஆனந்தமே!
(பல்லவி)
முயன்றால் கற்றுக்கொள்வாய்!
பயத்தை விட்டுத்தள்ளு!
புதிதாய் கற்றுக்கொண்டால்
அடடா சந்தோஷமே!
ஓ... கற்றுக்கொள்வாய்!
கற்றுக்கொள்வாய், புதிய மொழியைத்தான்!
2. வெற்றி நிச்சயம் காண்போமே!
பிரசங்க வேலையிலே!
மக்களின் வரவேற்பில்
இதயம் துள்ளிடுமே!
தினமும் நெருங்கி போவோம்
யெகோவாவிடமே!
ஆம், கற்றுக்கொள்ளவே கை கொடுப்பாரே
ஒவ்வொரு நாளுமே!
(பல்லவி)
முயன்றால் கற்றுக்கொள்வாய்!
பயத்தை விட்டுத்தள்ளு!
புதிதாய் கற்றுக்கொண்டால்
ஆஹா, சந்தோஷமே!
தோல்வியை நினைத்துதானே
தயங்கி நிற்கலாம்!
(பல்லவி)
ஓ... முயன்றால் கற்றுக்கொள்வாய்!
அள்ளுவாய் ஆசிகளை!
ஓ... கற்றுக்கொள்வாய்!
கற்றுக்கொள்வாய்!
முயன்றால் கற்றுக்கொள்வாய்!
புதிய மொழியைத்தான்!