Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

Yan Zabolotnyi/stock.adobe.com

விழிப்புடன் இருங்கள்!

உலகெங்கும் அதிகரிக்கும் அக்கிரமம்—பைபிள் என்ன சொல்கிறது?

உலகெங்கும் அதிகரிக்கும் அக்கிரமம்—பைபிள் என்ன சொல்கிறது?

 ஹைட்டியில் கும்பல்களின் கொலைவெறித் தாக்குதல் தலைவிரித்தாடுகிறது. தென் ஆப்பிரிக்காவிலும் மெக்சிகோவிலும் மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் வன்முறை வெறியாட்டங்கள் தொடர்கின்றன. வன்முறை சம்பவங்கள் குறைவாக நடக்கிற இடங்களிலும்கூட, மற்றவர்களுடைய உடமைகளை சூறையாடுவது, அடித்து நொறுக்குவது, அவற்றுக்கு தீவைப்பது போன்ற சம்பவங்களை கேள்விப்படுவதால் மக்கள் பீதியிலும் பயத்திலும் இருக்கிறார்கள்.

 உலகெங்கும் அதிகரிக்கும் அக்கிரம செயல்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

அக்கிரம செயல்களைப் பற்றி பைபிள் என்ன முன்னறிவித்தது?

 அக்கிரம செயல்கள், ‘இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கான அடையாளத்தின்’ ஒரு பாகமாக இருக்கிறது என்று பைபிள் முன்கூட்டியே சொன்னது. (மத்தேயு 24:3) இந்த அடையாளத்தின் பாகமாக இருக்கும் சம்பவங்களைப் பற்றி விவரிக்கும்போது இயேசு கிறிஸ்து இப்படிச் சொன்னார்:

  •    “அக்கிரமம் அதிகமாவதால் பெரும்பாலானவர்களின் அன்பு குறைந்துவிடும்.”—மத்தேயு 24:12.

 மக்கள் “கடைசி நாட்களில் . . . சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக” இருப்பார்கள் என்றும் பைபிள் முன்கூட்டியே சொன்னது. (2 தீமோத்தேயு 3:1-5) இப்படிப்பட்ட சுயநலமான குணங்கள்தான் இன்று நடக்கிற அக்கிரம செயல்களுக்குக் காரணம்.

 ஆனால் நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். ஏனென்றால், சீக்கிரத்திலேயே அக்கிரமம் வேறோடு பிடுங்கியெறியப்படும் என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது.

  •    “இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அவர்கள் இருந்த இடத்தில் தேடினாலும் அவர்களைப் பார்க்க முடியாது. ஆனால், தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”—சங்கீதம் 37:10, 11.

 பைபிள் சொல்லும் நம்பிக்கையான செய்தியைப் பற்றியும் இன்றைக்கு நடக்கும் சம்பவங்கள் எப்படி பைபிள் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறது என்பதைப் பற்றியும் அதிகமாகத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரைகளை வாசித்துப் பாருங்கள்:

 இனிவரும் காலம் இனிய காலம்

 கடைசி நாட்களின் அடையாளம் என்ன?” (ஆங்கிலம்)

 இன்று மக்கள் எப்படி இருப்பார்கள் என்று பைபிள் அன்றே சொன்னதா?