விழிப்புடன் இருங்கள்!
இனவெறி இல்லாத ஒரு உலகம், வெறும் கனவா?—பைபிள் என்ன சொல்கிறது?
வெவ்வேறு இனத்தை சேர்ந்த மக்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் நடத்தப்படுவது இன்று வெறும் கனவாகவே இருக்கிறது.
”இனவெறி ஒவ்வொரு நிறுவனத்தையும் சமூகத்தையும் அன்றாட வாழ்க்கையையும் விஷமாக்குகிறது. இது, சமூக பாகுபாடு ஏற்படுவதற்கு தொடர்ந்து காரணமாக இருந்துவருகிறது.“—அன்டோனியோ குட்டரெஸ், ஐ.நா. பொதுச் செயலாளர்.
இனவெறியின் சுவடுகளே இல்லாத ஒரு காலம் வருமா? பைபிள் என்ன சொல்கிறது?
இதை கடவுள் எப்படி பார்க்கிறார்?
வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்களை கடவுள் எப்படி பார்க்கிறார் என்று பைபிள் சொல்கிறது:
”[கடவுள்] ஒரே மனுஷனிலிருந்து எல்லா தேசத்து மக்களையும் உண்டுபண்ணி, அவர்களைப் பூமி முழுவதும் குடியிருக்க வைத்திருக்கிறார்.“—அப்போஸ்தலர் 17:26.
“கடவுள் பாரபட்சம் காட்டாதவர் . . . அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.”—அப்போஸ்தலர் 10:34, 35.
எல்லா மனிதர்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் எல்லா இனத்தை சேர்ந்தவர்களையும் கடவுள் ஏற்றுக்கொள்கிறார் என்றும் பைபிள் காட்டுகிறது.
இனவெறி எப்படி சரியாகும்?
பரலோகத்தில் இருந்து ஆட்சி செய்யும் கடவுளுடைய அரசாங்கம் இன பாகுபாட்டை வேரோடு பிடுங்கி எறியும். அந்த அரசாங்கம், எல்லாரையும் நல்ல விதத்தில் நடத்த மக்களுக்கு சொல்லிக்கொடுக்கும். மனதின் ஆழத்தில் இருக்கிற இனவெறியை எடுத்துப்போட மக்களும் கற்றுக்கொள்வார்கள்.
“ஜனங்கள் நீதியைக் கற்றுக்கொள்கிறார்கள்.”—ஏசாயா 26:9.
“உண்மையான நீதியின் விளைவாக சமாதானம் உண்டாகும். உண்மையான நீதியின் பலனாக நிம்மதியும் பாதுகாப்பும் என்றென்றும் கிடைக்கும்.”—ஏசாயா 32:17.
மற்றவர்களை மதிப்பு மரியாதையோடு நடத்துவது எப்படி என்று லட்சக்கணக்கானவர்கள் இன்றே பைபிளிலிருந்து கற்றுக்கொண்டு வருகிறார்கள்.
இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள, “என்று ஒழியும் இந்தப் பாகுபாடு?” என்ற தலைப்பில் வந்த விழித்தெழு! பத்திரிகையை பாருங்கள்.
இந்த விஷயத்தைப் பற்றி பிள்ளைகளிடம் பெற்றோர் எப்படி பேசலாம் என்று தெரிந்துகொள்ள, “இனவெறியைப் பற்றி பிள்ளைகளிடம் பேசுவது” என்ற கட்டுரையை பாருங்கள்.