Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

JenkoAtaman/stock.adobe.com

விழிப்புடன் இருங்கள்!

2023: நம்பிக்கையோடு எதிர்பாருங்கள்!—பைபிள் என்ன சொல்கிறது?

2023: நம்பிக்கையோடு எதிர்பாருங்கள்!—பைபிள் என்ன சொல்கிறது?

 புதிதாக ஆரம்பித்திருக்கும் 2023-ஆம் வருஷத்தில், நமக்கும் நம் குடும்பத்துக்கும் நல்லது நடக்கும் என்று எல்லாரும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம். ஆனால், நாம் ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம்?

பைபிள் நம்பிக்கை தருகிறது

 பைபிளில் ஒரு நல்ல செய்தி இருக்கிறது. இன்று நமக்கு வரும் கஷ்டங்கள் எல்லாம் நிரந்தரம் கிடையாது, சீக்கிரத்தில் அதெல்லாம் சரியாகிவிடும் என்பதுதான் அந்த செய்தி! சொல்லப்போனால், பைபிளில் எழுதியிருப்பது “எல்லாம் நமக்கு அறிவுரை கொடுப்பதற்காகவே எழுதப்பட்டன; அவை நமக்கு நம்பிக்கை தருகின்றன. . . நம்மை ஆறுதல்படுத்துகின்றன, சகித்திருக்க நமக்கு உதவுகின்றன.”ரோமர் 15:4.

இப்போதே கைகொடுக்கும் நம்பிக்கை

 பைபிள் கொடுக்கும் நம்பிக்கை, “நம் உயிருக்கு நங்கூரம் போன்றது.” (எபிரெயர் 6:19) அந்த நம்பிக்கைதான் நம்மை தாங்குகிறது. இப்போது வரும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது. நம்பிக்கையை விட்டுவிடாமல் எப்போதும் சந்தோஷமாக வாழவும் உதவுகிறது. உதாரணமாக,

  •   பைபிள் கொடுக்கும் நம்பிக்கை, குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்த ஒருவருக்கு எப்படி உதவியது என்பதை தெரிந்துகொள்ள, என்ன வாழ்க்கை இது? என்ற வீடியோவைப் பாருங்கள்.

  •   பைபிள் கொடுக்கும் நம்பிக்கை, அன்பானவர்களை மரணத்தில் பறிகொடுத்து தவிக்கும்போது எப்படி உதவும் என்பதை தெரிந்துகொள்ள, தாங்க முடியாத துக்கத்தைத் தாங்க... என்ற வீடியோவைப் பாருங்கள்.

உங்கள் நம்பிக்கையை பலப்படுத்துங்கள்

 நிறைய மக்கள் அவர்களுக்கு நல்லது நடக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் அது கண்டிப்பாக நடக்கும் என்று அவர்களால் நம்பிக்கையோடு இருக்க முடியவில்லை. ஆனால், பைபிள் கொடுக்கும் நம்பிக்கை நிச்சயமாக நடக்கும் என்று நாம் நம்பலாம். ஏன்? ஏனென்றால், அந்த நம்பிக்கையைக் கொடுத்தவர் யெகோவா. a அவர் “பொய் சொல்ல முடியாத கடவுள்.” (தீத்து 1:3) சொன்னதை சொன்ன மாதிரி நடத்திக் காட்டும் சக்தி யெகோவாவுக்கு மட்டும்தான் இருக்கிறது. அவரால் “தனக்குப் பிரியமான எல்லாவற்றையும்” செய்ய முடியும்.—சங்கீதம் 135:5, 6.

 பைபிள் கொடுக்கும் நம்பிக்கைகளை நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம். ‘வேதவசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்க்கும்போது’ நீங்களும் அந்த நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளலாம். (அப்போஸ்தலர் 17:11) எங்களோடு சேர்ந்து இலவசமாக பைபிள் படித்து பாருங்கள். 2023-ஐ நம்பிக்கையோடு தொடங்குங்கள்!

a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.