நீங்கள் கடவுளுடைய நண்பராக இருக்க முடியும்
சிலர் இப்படி நினைக்கிறார்கள் . . .
கடவுளுக்கு நம்மேல் அக்கறை இல்லை. அவர் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருக்கிறார். அவர் பரிசுத்தமானவர். நம்மால் அவரிடம் நெருங்கிப்போகவே முடியாது.
பைபிள் இப்படிச் சொல்கிறது . . .
“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.”—யாக்கோபு 4:8.
“அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்.”—1 பேதுரு 5:7.
கடவுளுடைய நண்பராவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?
அவரிடம் பேசுங்கள்.—சங்கீதம் 145:18, 19.
அவர் சொல்வதைக் கேளுங்கள்.—சங்கீதம் 32:8.
அவருடைய அறிவுரைகளின்படி நடங்கள்.—நீதிமொழிகள் 3:5, 6.
முயற்சியைக் கைவிடாதீர்கள்.—மத்தேயு 7:7, 8.