காவற்கோபுரம் எண் 3 2019 | வாழ்க்கை இவ்வளவுதானா?
பொதுவாகக் கேட்கப்படும் கேள்வி இது. இதற்கான பதில் ஒருவருடைய வாழ்க்கையையே மாற்றிவிடும்.
சாவின் பிடி
எவ்வளவுதான் முட்டி மோதினாலும், நம்மால் முதுமையிலிருந்தும் மரணத்திலிருந்தும் தப்பிக்க முடிவதில்லை. வாழ்க்கை இவ்வளவுதானா?
சாவில்லாத வாழ்வைத் தேடி
முதுமைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் சிலர் முயற்சி செய்கிறார்கள். அவர்களுடைய ஆராய்ச்சியின் முடிவு என்ன?
வாழத்தான் படைக்கப்பட்டோம்
என்றென்றும் சந்தோஷமாக வாழ யாருக்குத்தான் ஆசை இல்லை?
முதுமைக்கும் சாவுக்கும் காரணம்
மனிதர்கள் சாக வேண்டும் என்று கடவுள் நினைக்கவே இல்லை. முதல் மனித ஜோடியான ஆதாமும் ஏவாளும் எந்தக் குறையுமே இல்லாத மனதோடும் உடலோடும் படைக்கப்பட்டார்கள். அவர்களால் இன்றுவரை உயிர் வாழ்ந்திருக்க முடியும்.
சாவுக்கே சமாதி—எப்படி?
மனிதர்களை மரணத்திலிருந்து விடுவிப்பதற்காக மீட்புவிலை என்ற அன்பான ஏற்பாட்டை யெகோவா செய்தார்.
முடிவில்லாமல் வாழ்வதற்கு வழி
கடவுள் தன்னை நேசிக்கிறவர்களுக்குக் கொடுக்க விரும்பும் வாழ்க்கையை நீங்களும் பெற்றுக்கொள்ளலாம். அதற்கு, ஒரு ‘பாதையில்’ நீங்கள் அடியெடுத்து வைக்க வேண்டும்.
இப்போதே சந்தோஷமாக வாழ
திருப்தியோடு இருக்கவும், திருமணப் பந்தத்தைப் பலப்படுத்தவும், உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் பைபிள் ஆலோசனைகள் உங்களுக்கு எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
இறந்தவர்களுக்கு என்ன நம்பிக்கை?
பைபிள் இதற்குப் பதில் தருகிறது.