காவற்கோபுரம் எண் 4 2017 | இறந்த பிறகு வாழ்க்கை இருக்கிறதா? பைபிளின் கருத்து
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நாம் சாக வேண்டும் என்பது கடவுளின் விருப்பமா? பைபிள் தரும் பதிலைப் பாருங்கள்: மக்களுடைய “கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது.” —வெளிப்படுத்துதல் 21:4.
இறந்த பிறகு நமக்கு என்ன நடக்கிறது என்று பைபிள் சொல்கிறது? இதைப் பற்றி இந்த காவற்கோபுர பத்திரிகையில் தெரிந்துகொள்ளுங்கள்.
அட்டைப்படக் கட்டுரை
மக்கள் என்ன நம்புகிறார்கள்?
இறந்தபிறகு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி வித்தியாசமான கருத்துகள் இருக்கின்றன. ஆனால் உண்மை என்ன? அதை எங்கிருந்து தெரிந்துகொள்ள முடியும்?
அட்டைப்படக் கட்டுரை
இறந்த பிறகு என்ன நடக்கிறது?—பைபிள் தரும் பதில்
இறந்த பிறகு நமக்குள் இருக்கும் ஏதோவொன்று தொடர்ந்து வாழ்கிறதா? நமக்குள் அழியாத ஆத்துமா இருக்கிறதா? இறந்தவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
நாம் நேசிக்கும் ஒருவர் மோசமான வியாதியால் கஷ்டப்படும்போது...
மோசமான வியாதியால் கஷ்டப்படுகிறவர்களை ஆறுதல்படுத்துவதற்கும் கவனித்துக்கொள்வதற்கும் குடும்பத்தில் இருப்பவர்கள் என்ன செய்யலாம்? அவர்கள் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது நமக்கு வரும் வேதனையை எப்படி சமாளிக்கலாம்?
எலியாஸ் ஹட்டர் —அவருடைய அற்புதமான எபிரெய பைபிள்கள்
16-வது நூற்றாண்டை சேர்ந்த அறிஞரான எலியாஸ் ஹட்டர் இரண்டு எபிரெய பைபிள்களை அச்சடித்தார். இவை மதிப்புள்ளதாக கருதப்பட்டது.
மிகச் சிறிய எபிரெய எழுத்து—நமக்கு தரும் நம்பிக்கை
எபிரெய எழுத்துக்களில் இருக்கும் மிகச் சிறிய எழுத்தைப் பற்றி இயேசு ஏன் பேசினார்?
பூமியில் ஒரு பூஞ்சோலை-கற்பனையா அல்லது உண்மையா?
ஆதாம்-ஏவாள் இழந்த ஏதேன் தோட்டம் மக்களின் மனதில் நீங்காமல் இருந்தது என்று சரித்திரம் காட்டுகிறது. பூமி முழுவதும் ஏதேன் தோட்டம்போல் மாறுமா?
பைபிள் என்ன சொல்கிறது?
கவலையும் மன அழுத்தமும் மனிதர்களுடைய வாழ்க்கையின் ஒரு பாகமாக ஆகிவிட்டது. ஆனால், கவலைகளே இல்லாத வாழ்க்கை கிடைக்குமா?
ஆன்லைனில் கிடைப்பவை
மனிதர்கள் ஏன் சாகிறார்கள்?
இந்தக் கேள்விக்கு பைபிள் தரும் பதில் ஆறுதலும் அளிக்கிறது, நம்பிக்கையும் அளிக்கிறது.