உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை வாசித்தீர்களா? அப்படியென்றால், இந்தக் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்.
டீனேஜ் பிள்ளைகள் யெகோவாவை சேவிக்க பெற்றோர்கள் என்ன முக்கியமான விஷயங்களை செய்யலாம்?
பெற்றோர்கள் தங்களுடைய டீனேஜ் பிள்ளைகள்மீது அன்பு காட்ட வேண்டும். மனத்தாழ்மையாக நடந்துகொள்ள வேண்டும். அதோடு, அவர்களுடைய உணர்ச்சிகளை புரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு எப்படிப்பட்ட உதவி தேவை என்பதையும் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.—w15 11/15, பக்கங்கள் 9-11.
நல்ல விதமாக பேசுவதற்கு நாம் என்னென்ன விஷயங்களை ஞாபகத்தில் வைக்க வேண்டும்?
மூன்று விஷயங்களை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும். (1) எப்போது பேச வேண்டும் (பிர. 3:7), (2) என்ன பேச வேண்டும் (நீதி. 12:18), (3) எப்படி பேச வேண்டும் (நீதி. 25:15) —w15 12/15, பக்கங்கள் 19-22.
ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடும் ஒருவரைப் பற்றி நாம் என்ன நினைக்க வேண்டும்?
நாம் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை அளவுக்கு அதிகமாக புகழக் கூடாது. அப்படி புகழ்வதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். (மத். 23:8-12) கடவுள் தங்களை தேர்ந்தெடுத்திருப்பதைப் பற்றி அவர்கள் மற்றவர்களிடம் தம்பட்டம் அடிக்க மாட்டார்கள்.—w16.01, பக்கங்கள் 23-24.
ஆபிரகாம் எப்படி கடவுளுடைய நண்பரானார்? இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
யெகோவாவைப் பற்றிய விஷயங்களை ஆபிரகாம் ஒருவேளை சேம் மூலமாக கற்றுக்கொண்டிருக்கலாம். வாழ்க்கையில் கிடைத்த அனுபவத்திலிருந்தும் யெகோவாவைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டார். அதேபோல் நாமும் யெகோவாவைப் பற்றி இன்னும் அதிகமாக கற்றுக்கொள்ளும்போது... வாழ்க்கையில் நிறைய அனுபவம் கிடைக்கும்போது... அவரிடம் இன்னும் நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்ள முடியும்.—w16.02, பக்கங்கள் 9-10.
இயேசுவை சாத்தான் சோதித்தபோது அவரை உண்மையிலேயே ஆலயத்துக்கு அழைத்துக்கொண்டு போனானா அல்லது ஆலயத்தை ஒரு தரிசனத்தில் காட்டினானா?
அதை நம்மால் உறுதியாக சொல்ல முடியாது. இயேசுவுக்கு அதை தரிசனத்தில் காட்டியிருக்கலாம் அல்லது ஆலயத்தின் ஒரு—உயரமான இடத்தில் அவர் நின்றிருக்கலாம் என்று —மத்தேயு 4:5 மற்றும் லூக்கா 4:9-ல் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.—w16.03, பக்கங்கள் 31-32.
நம்முடைய ஊழியம் எப்படி பனித்துளியைப் போல் இருக்கிறது?
காற்றில் இருக்கிற ஈரப்பதம் எல்லாம் ஒன்றுசேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பனித்துளிகளாக மாறுகிறது. பனித்துளி புத்துணர்ச்சியை கொடுக்கிறது, வாழ்வுக்கு வழிநடத்துகிறது. (உபா. 33:13) யெகோவாவுடைய மக்கள் செய்யும் ஊழியமும் பனித்துளியைப் போல்தான் இருக்கிறது.—w16.04, பக்கம் 4.
ரொம்ப நாட்கள் முற்றுகை போடப்படாமல் எரிகோ நகரம் கைப்பற்றப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?
பைபிள் காலங்களில் எதிரிகள் ஒரு நாட்டை நீண்ட நாட்களுக்கு முற்றுகை போட்டாலும் அதை அவர்கள் கைப்பற்றும் சமயத்தில் அந்த நாட்டில் இருக்கும் பொருள்களை எல்லாம் கொள்ளையடித்து விடுவார்கள். அதோடு, அங்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் உணவையும் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், எரிகோவில் ஏராளமான உணவு அப்படியே இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அப்படியென்றால், பைபிள் சொல்கிறபடி ரொம்ப நாட்கள் முற்றுகை போடப்படாமலேயே எரிகோ நகரம் கைப்பற்றப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.—w15 11/15, பக்கம் 13.
கிறிஸ்மஸ் கொண்டாடுவது தவறா?
மற்ற மதத்தின் பண்டிகையைத்தான் கிறிஸ்மஸ் என்று சொல்லி மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்த பண்டிகை கடவுளையும் அவருடைய மகனையும் அவமதிக்கிறது. இது ஒரு சாதாரண விஷயமா? நிச்சயமாக இல்லை. கிறிஸ்மஸ் வேறு மதத்திலிருந்து வந்த பண்டிகையாக இருப்பதால் அதை கொண்டாடக் கூடாது.—wp16.01, பக்கம் 9.