Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பலன் தரும் விதத்திலும் சுவாரஸ்யமாகவும் பைபிளைப் படிப்பது எப்படி?

பலன் தரும் விதத்திலும் சுவாரஸ்யமாகவும் பைபிளைப் படிப்பது எப்படி?

யோசுவாவுக்கு முன்னால் ஒரு பெரிய வேலை காத்திருந்தது. வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேல் மக்களை அவர் வழிநடத்த வேண்டியிருந்தது. அது ஒரு சவாலான வேலைதான்! அதனால், யெகோவா அவரிடம், “தைரியமாகவும் ரொம்பவே உறுதியாகவும் இரு” என்று சொல்லி அவரைப் பலப்படுத்தினார்; உற்சாகப்படுத்தினார். திருச்சட்டத்தைப் படித்து, அதன்படி செய்தால், ஞானமான தீர்மானங்களை எடுக்க முடியுமென்றும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமென்றும் அவரிடம் யெகோவா சொன்னார்.—யோசு. 1:7, 8.

“சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக” இருக்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்வதால், நம் வாழ்க்கையும் போராட்டம் நிறைந்ததாக இருக்கலாம். (2 தீ. 3:1) யோசுவாவைப் போல நாம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால், யெகோவா அவருக்குக் கொடுத்த ஆலோசனையின்படி நாமும் செய்ய வேண்டும். அதாவது, தினமும் பைபிளைப் படிக்க வேண்டும்; படித்த விஷயங்களின் அடிப்படையில் ஞானமான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

ஆனால், நம்மில் சிலருக்கு பைபிளை எப்படிப் படிப்பதென்று தெரியாமல் இருக்கலாம். அல்லது, படிப்பதென்றாலே நமக்கு அலுப்புத் தட்டலாம். இருந்தாலும், பைபிளைப் படிப்பது ரொம்ப முக்கியம். “ இப்படிச் செய்து பாருங்கள்” என்ற பெட்டியில், பலன் தரும் விதத்திலும் சுவாரஸ்யமாகவும் பைபிளைப் படிப்பதற்கான சில குறிப்புகள் இருக்கின்றன. அவை உங்களுக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருக்கும்.

“உங்கள் கட்டளைகளின்படி நடக்க எனக்கு வழிகாட்டுங்கள். நான் அவற்றில் பிரியமாக இருக்கிறேன்” என்று ஒரு சங்கீதக்காரர் பாடினார். (சங். 119:35) அவரைப் போலவே உங்களாலும் பைபிள் படிப்பை சுவாரஸ்யமானதாக ஆக்க முடியும். நீங்கள் தொடர்ந்து பைபிளைப் படிக்கும்போது, அருமையான புதையல்களைத் தோண்டி எடுப்பீர்கள்.

யோசுவாவைப் போல நீங்கள் ஒரு தேசத்தை வழிநடத்த வேண்டியதில்லை என்றாலும், தனிப்பட்ட விதமாக உங்களுக்கு சில பிரச்சினைகள் இருக்கலாம். அதனால், யோசுவாவைப் போல கடவுளுடைய வார்த்தையைப் படியுங்கள்; அதன்படி செய்யுங்கள். அப்படிச் செய்தால், ஞானமான தீர்மானங்களை எடுப்பீர்கள்; வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்!