குடும்பத்தில் ஏன் மரியாதை இல்லை?
குடும்பத்தில் மரியாதை காட்டுவது ஏன் முக்கியம்?
குடும்பத்தில் இருப்பவர்களை மதிக்கும்போது வீட்டில் சமாதானம் இருக்கும். கணவன், மனைவி, பிள்ளைகள் எல்லாருமே நிம்மதியாக இருப்பார்கள்.
-
த செவன் பிரின்சிபில் ஃபார் மேக்கிங் எ மேரேஜ் வர்க் என்ற புத்தகம் (கல்யாண வாழ்க்கை சம்பந்தமான புத்தகம்) இப்படிச் சொல்கிறது: ‘கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் மரியாதை காட்டும்போது, பெரிய விஷயங்களில் மட்டுமல்ல, தினமும் அவர்கள் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களில்கூட, அவர்கள் துணையை அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று காட்டுகிறார்கள்.’
-
மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க தெரிந்த பிள்ளைகளுக்கு தங்கள் மேல் மதிப்பு அதிகமாகும், அப்பா அம்மாவோடு அவர்கள் பாசமாக இருப்பார்கள். பிள்ளைகளுக்குப் பெரிதாக மனநல பிரச்சினைகளும் வராது என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
நீங்கள் என்ன செய்யலாம்
குடும்பமாக சேர்ந்து திட்டம் போடுங்கள். முதலில், மரியாதை காட்டுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கணவன் மனைவியாக முடிவு செய்யுங்கள். இரண்டாவதாக, மரியாதையை காட்ட குடும்பத்தில் இருக்கிறவர்கள் எல்லாரும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை எழுதி வையுங்கள். மூன்றாவதாக, நீங்கள் போட்ட திட்டத்தைப் பற்றி குடும்பமாக எல்லாரும் உட்கார்ந்து பேசுங்கள். அப்படிச் செய்தால்தான், மரியாதை காட்டுவதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.
செய்து காட்டுங்கள். குடும்பத்தில் யாராவது எதையாவது தப்பாக செய்துவிட்டால் நீங்கள் கிண்டல் செய்கிறீர்களா? அவர்களுடைய கருத்துகளை சொல்லும்போது மட்டம் தட்டுகிறீர்களா? அவர்கள் உங்களிடம் பேசும்போது கண்டுக்காமல் இருக்கிறீர்களா அல்லது நீங்கள் குறுக்க குறுக்க பேசுகிறீர்களா? மரியாதை காட்டுவதில் நீங்கள் முதல் ஆளாக இருங்கள்.
டிப்ஸ்: நிறைய பேர் சொல்வதுபோல் ‘மரியாதை தானாக வராது நீங்கள்தான் சம்பாதிக்க வேண்டும்’ என்று உங்கள் கணவன்/மனைவியிடமோ பிள்ளையிடமோ சொல்லாமல், ‘மரியாதை காட்டுவது என் பொறுப்பு’ என்று நடந்துகொள்ளுங்கள்.
ஒத்துப்போக முடியவில்லை என்றாலும் மரியாதையாக பேசுங்கள். உங்களுடைய கருத்தை சொல்லும்போது, ‘நீ என்றைக்காவது இப்படி செய்திருக்கிறாயா?’, ‘நீ எப்பவுமே இப்படித்தான்’ என்றெல்லாம் சொல்லாதீர்கள். அப்படி சொல்வது அவர்களை குத்திக் காட்டுவதுபோல் இருக்கும். அது அவர்கள் மனதை காயப்படுத்தும். அதுமட்டுமல்ல, சின்னச் சின்ன பிரச்சினைகள்கூட பூகம்பமாக வெடிக்கும்.
நாங்கள் என்ன செய்கிறோம்
யெகோவாவின் சாட்சிகளாக நாங்கள், குடும்பத்தில் இருப்பவர்கள் ஒருவர்மேல் ஒருவர் மரியாதை காட்ட சொல்லிக் கொடுக்கிறோம். எங்களுடைய பத்திரிகைகள், கட்டுரைகள், புத்தகங்கள், வீடியோக்களில் இதைப் பற்றி சொல்கிறோம். இவை எல்லாமே இலவசம்தான்.
தம்பதிகளுக்கு: “குடும்ப ஸ்பெஷல்” என்ற தலைப்பில் வரும் கட்டுரைகள் கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் உதவியாக இருக்கும். உதாரணமாக,
-
காதுகொடுத்து கேட்க
-
வாக்குவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க
-
பிரச்சினைகளை தீர்க்க
(jw.org-ல் “குடும்ப ஸ்பெஷல்” என்று தேடிப்பாருங்கள்)
பெற்றோருக்கு: “குடும்ப ஸ்பெஷல்” என்ற தலைப்பில் வரும் கட்டுரைகள், பிள்ளைகளை நன்றாக வளர்க்க பெற்றோருக்கு உதவும். உதாரணமாக, உங்கள் பிள்ளைகளுக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுக்கலாம்:
-
சொன்ன பேச்சை கேட்க
-
வீட்டு வேலைகளை செய்ய
-
“ப்ளீஸ்,” “தேங்க் யூ” சொல்ல
(jw.org-ல் “பிள்ளை வளர்ப்பு” மற்றும் “டீனேஜ் பிள்ளைகளை வளர்த்தல்” என்று தேடிப்பாருங்கள்)
“அரும்புகளுக்கு ஆறு பாடங்கள்” என்ற கட்டுரையை விழித்தெழு! எண் 2, 2019 இதழிலும், “குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்கு 12 ரகசியங்கள்” என்ற கட்டுரையை விழித்தெழு! எண் 2, 2018 (பக். 8-11) இதழிலும் பாருங்கள்.
இளம் பிள்ளைகளுக்கு: jw.org-ல் இருக்கும் “டீனேஜர்கள், இளைஞர்கள்” என்ற பகுதியில் இளம் பிள்ளைகளுக்கு உதவும் கட்டுரைகள், வீடியோக்கள், வர்க் ஷீட்டுகள் இருக்கின்றன. உதாரணமாக,
-
அப்பா அம்மாவோடும் கூடப் பிறந்தவர்களோடும் எப்படி ஒத்துப்போவது
-
அப்பா அம்மா போடும் கட்டுப்பாடுகளைப் பற்றி அவர்களிடம் எப்படி பேசுவது
-
அப்பா அம்மாவின் நம்பிக்கையை எப்படி சம்பாதிப்பது
(jw.org-ல் “டீனேஜர்கள், இளைஞர்கள்” என்று தேடிப்பாருங்கள்)
jw.org-ல் எல்லாமே இலவசம்தான். நீங்கள் பணமோ சந்தாவோ கட்ட வேண்டாம். பதிவு செய்ய வேண்டாம். உங்களைப் பற்றி எந்த விவரங்களையும் கொடுக்க வேண்டாம்.