விழித்தெழு! எண் 2 2018 | குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்கு 12 ரகசியங்கள்
குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்கு 12 ரகசியங்கள்
இன்றைய குடும்பங்களில் ஏற்படுகிற பிரச்சினைகளைப் பற்றி நாம் நிறையவே கேள்விப்படுகிறோம். உதாரணத்துக்கு . . .
அமெரிக்காவில், 50 வயதைத் தாண்டியவர்களுடைய விவாகரத்து எண்ணிக்கை 1990-லிருந்து 2015-க்குள் இரண்டு மடங்காகவும், 65 வயதைத் தாண்டியவர்களுடைய விவாகரத்து எண்ணிக்கை மூன்று மடங்காகவும் உயர்ந்தது.
பிள்ளைகளை எப்போதும் புகழ வேண்டும் என்று சில நிபுணர்கள் சொல்கிறார்கள்; வேறு சிலரோ, பிள்ளைகளின் நன்மைக்காக அவர்களிடம் கறாராக நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். அதனால், பெற்றோர்கள் குழம்பிப்போயிருக்கிறார்கள்.
இளம் பிள்ளைகள், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்வது இல்லை.
ஆனால், சில குடும்பங்கள் சந்தோஷமாக இருக்கின்றன; அப்படியென்றால் . . .
திருமண வாழ்க்கை, செழிப்பானதாகவும் நிலையானதாகவும் இருக்க முடியும்.
பிள்ளைகளை அன்போடு கண்டித்து வளர்ப்பதற்கு பெற்றோர்களால் கற்றுக்கொள்ள முடியும்.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான திறமைகளை இளம் பிள்ளைகளால் இப்போதே வளர்த்துக்கொள்ள முடியும்.
எப்படி? விழித்தெழு! பத்திரிகையின் இந்த இதழ், குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்குத் தேவையான 12 ரகசியங்களைப் பற்றிப் பேசுகிறது.
1: கடமையுணர்ச்சி
தம்பதிகள் ஒன்றிணைந்து வாழ்வதற்கு உதவுகிற மூன்று அருமையான டிப்ஸைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
2: கூட்டுமுயற்சி
நீங்களும் உங்கள் துணையும் தனித்தனி தீவுகளாக இருக்கிறீர்களா?
3: மதிப்புமரியாதை
உங்கள் மணத்துணைக்கு மரியாதை காட்ட எந்தெந்த வார்த்தைகளும் செயல்களும் ரொம்பவே முக்கியம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
4: மன்னிப்பு
உங்கள் துணையின் குற்றங்களைப் பெரிதுபடுத்தாமல் இருக்க எது உங்களுக்கு உதவும்?
5: பேச்சுத்தொடர்பு
உங்கள் பிள்ளைகளோடு நெருங்கியிருக்க உதவுகிற மூன்று முக்கியமான படிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
6: கண்டிப்பு
கண்டிப்பு ஒரு பிள்ளையின் தன்மானத்தைக் குலைத்துப்போடுமா?
7: ஒழுக்கநெறிகள்
எப்படிப்பட்ட ஒழுக்கநெறிகளை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்லித்தர வேண்டும்?
8: முன்மாதிரி
நீங்கள் சொன்னதைச் செய்கிறவராக இருந்தால்தான், நீங்கள் சொன்னதற்கு உங்கள் பிள்ளைகள் கீழ்ப்படிவார்கள்.
9: அடையாளம்
இளம் பிள்ளைகள் தங்களுடைய நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
10: நம்பகத்தன்மை
நீங்கள் முதிர்ச்சியுள்ள நபராக ஆக வேண்டுமென்றால், உங்கள் பெற்றோருடைய நம்பிக்கையைச் சம்பாதிப்பது ரொம்பவே முக்கியம்.
11: கடின உழைப்பு
இளைஞர்களே, கடினமாக வேலை செய்ய இப்போதே கற்றுக்கொண்டீர்கள் என்றால், வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்தாலும் அதில் வெற்றி பெறுவீர்கள்.
12: குறிக்கோள்கள்
குறிக்கோள்களை அடையும்போது உங்கள் தன்னம்பிக்கை அதிகமாகும், நட்பு பலப்படும், சந்தோஷம் பூத்துக்குலுங்கும்.
குடும்பத்துக்குக் கூடுதலான உதவி
வெற்றிகரமான மணவாழ்க்கைக்கும் சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கும் பைபிள் ஆலோசனைகள் உங்களுக்குக் கைகொடுக்கும்.