Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

மணத்துறவு “உலகை கவனித்தல்” பகுதியில் “மணத்துறவு—ஏன்” (செப்டம்பர் 22, 1999) என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டிருந்த கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சர்ச்சின் தர்க்கங்களுக்கு “வேதப்பூர்வ ஆதாரமில்லை” என நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். மத்தேயு 19:10-12 மற்றும் 1 கொரிந்தியர் 7:8, 26, 27-ன் படி மணத்துறவிற்கு ஆதாரம் இருக்கிறது என நான் சொல்கிறேன்.

எம். டி., ஐக்கிய மாகாணங்கள்

சிலர் விவாகமின்றி இருப்பது மேல் என பைபிள் பரிந்துரை செய்வது உண்மைதான். இருந்தாலும், கிறிஸ்தவ ஊழியர்கள் மணமாகாதிருக்க வேண்டுமென பைபிள் சொல்வதில்லை. அப்போஸ்தலன் பேதுருவும் பூர்வ கிறிஸ்தவ சபையிலிருந்த மற்ற பொறுப்புள்ள மனிதர்களும் திருமணமானவர்களே. (1 கொரிந்தியர் 9:5; 1 தீமோத்தேயு 3:2) ஆகவே, கட்டாய மணத்துறவு வேத ஆதாரமற்றது.—ED.

மூடநம்பிக்கை பன்மொழிப் புலமை பெற்ற நான், அக்டோபர் 22, 1999 விழித்தெழு! பத்திரிகையில் “மூடநம்பிக்கை—ஏன் ஆபத்தானது” என்ற கட்டுரைகளில் தவறு இருக்கிறது என உங்களுக்குச் சுட்டிக்காட்டுகிறேன்; ஒருவர் தும்மிவிட்டால் கெஷூன்டிட் என்ற ஜெர்மானிய வார்த்தையைச் சொல்வது “கடவுள் ஆசீர்வதிப்பாராக” என்பதாகும் என நீங்கள் குறிப்பிட்டிருப்பது தவறு. அந்த வார்த்தையின் ஆங்கில மொழிபெயர்ப்பு “ஆரோக்கியம்” என்பதாகும்.

கே. கே., ஐக்கிய மாகாணங்கள்

“கெஷூன்டிட்” என்ற வார்த்தையின் துல்லியமான மொழிபெயர்ப்புதான் ஆங்கிலத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று நாங்கள் அர்த்தப்படுத்தவில்லை. “கடவுள் ஆசீர்வதிப்பாராக” என்ற ஆங்கில பதத்தை பயன்படுத்துவதை “போன்ற” இரண்டு வார்த்தைகள் மற்ற மொழிகளில் இருக்கின்றன. அவற்றோடு இந்த வார்த்தையும் பட்டியலிடப்பட்டிருந்தது.—ED.

நீர்க்கட்டி நார்மிகு நோய் “நீர்க்கட்டி நார்மிகு நோயுடன் எதிர்நீச்சல்” (அக்டோபர் 22, 1999) என்ற கட்டுரையை இப்பொழுதுதான் வாசித்து முடித்தேன். ஜிம்மி காராட்ஸ்யாட்டிஸ் இந்த பயங்கர வியாதியை சமாளித்துவரும் விதம் என் மனதை தொட்டு விட்டது. தன் மனைவியை எந்தளவுக்கு மதிக்கிறார் என்பதும் உற்சாகமூட்டுவதாய் இருந்தது. இதையெல்லாம் பார்க்கும்போது, நாம் எந்தளவுக்கு கொடுத்து வைத்திருக்கிறோம் என்று நான் உணருகிறேன், நம்மால் கஷ்டமின்றி சாதாரணமாக மூச்சுவிட முடிகிறதே!

டி. ஏ., இங்கிலாந்து

எனக்கு இதுபோன்ற பிரச்சனை இல்லாவிட்டாலும் நுரையீரல் அடைப்பாலும் வென்றிக்கிள் கோளாறாலும் அவதியுறுகிறேன். என்னை நானே திடப்படுத்திக்கொள்வதற்கு இந்த அனுபவம் உதவியது. நாம் ஆவலோடு எதிர்பார்க்கும் கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட புதிய பூமியில் அவரும் ஓடியாடி மகிழ முடியும் என கூறுகிறார். இதே ஆசை எனக்கும் இருக்கிறது.

எஃப். ஏ., இத்தாலி

டான்யூப் “டான்யூப்—வாய் மட்டும் இருந்தால்!” (அக்டோபர் 22, 1999) என்ற இந்த அருமையான கட்டுரைக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். நான் சிறுமியாக இருந்தபோது டான்யூப் நதி உற்பத்தியாகும் இடத்திற்கு அருகில் வசித்து வந்தேன். அப்போதிலிருந்தே அதன்மீது எனக்கு கொள்ளை ஆசை. நீர் ஆய்வாளரான எனக்கு ஆறுகளை ஆய்வு செய்யும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. உண்மையில் இவை யாவும் கடவுளுடைய அற்புத படைப்புகள் என்பதை நான் உணருகிறேன்.

டி. ஓ., க்ரோயேஷீயா

வியன்னா பல்கலைக்கழகம் 1365-ல் ஸ்தாபிக்கப்பட்டது எனவும் அது உலகிலேயே மிகப் பழமையான ஜெர்மன் மொழி பல்கலைக்கழகம் எனவும் குறிப்பிட்டிருந்தீர்கள். தற்போது ஜெர்மன் மொழி அதிகமாக பேசப்படும் நாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்விட்சர்லாந்தின் ஜெர்மானிய மொழி பேசும் பகுதியையும்தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்களென்றால் நீங்கள் சொன்னது சரியே. இருந்தாலும் மிகப் பழைமையான ஜெர்மன் மொழி பல்கலைக்கழகம் இன்றைய செக் குடியரசின் தலைநகரமாகிய ப்ராக்கில் 1348-ல் ஸ்தாபிக்கப்பட்டது. அச்சமயத்தில் இப்பல்கலைக்கழகம் ஆஸ்திரியாவைச் சேர்ந்ததாய் இருந்தது.

எம். இ., ஜெர்மனி

உண்மையில் ப்ராக் பொஹீமியாவின் தலைநகராயிருந்தது. அங்கு ஜெர்மன், செக் ஆகிய இரண்டு மொழிகளும் பேசப்பட்டபோதிலும் லத்தீன் மொழியே அந்த பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மொழி.—ED.

கூச்ச சுபாவம் “இளைஞர் கேட்கின்றனர் . . . என்னால் ஏன் சகஜமாக பழக முடியவில்லை?” (அக்டோபர் 22, 1999) என்ற கட்டுரைக்கு மிக்க நன்றி. இது சரியான நேரத்தில் கிடைத்த சாப்பாடு போல் இருந்தது. நான் எப்போதுமே கூச்ச சுபாவத்தால் சங்கடப்பட்டிருக்கிறேன். 17 வயதான எனக்கு பழக்கமில்லாதவர்களிடமும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வரும் புதியவர்களிடமும் பழகுவது அதிக கஷ்டமாக இருக்கிறது. இந்த ஒரு காரணத்திற்காவே, சகோதர சகோதரிகளிடம் அளவளாவி சந்தோஷமாக மகிழ்ந்தனுபவிக்கும் பல சந்தர்ப்பங்களை நான் தவற விட்டிருக்கிறேன். கூச்ச சுபாவம் சாதாரண விஷயந்தான், இக்குணத்தை போக்குவது சுலபம் என்பதை அறிந்துகொள்ள உங்கள் கட்டுரை உதவியது.

பி. எச்., ஐக்கிய மாகாணங்கள்