தன் அப்பாவை எண்ணி பெருமைப்படுகிறாள்
தன் அப்பாவை எண்ணி பெருமைப்படுகிறாள்
‘அது என் அப்பாவை எண்ணி அதிக பெருமைப்பட வைத்தது!’ என இந்தியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் 12 வயது சிறுமி வியந்து கூறினாள். ஆகஸ்ட் 22, 1999 விழித்தெழு! இதழில் “உலகை கவனித்தல்” என்ற பகுதியில், “அப்பாக்களின் பொறுப்பு மகன்களின் பூரிப்பு” என்ற தலைப்பில் வெளிவந்திருந்த துணுக்குச் செய்தியைப் பற்றித்தான் அவள் குறிப்பிட்டிருந்தாள். அப்பாக்கள் தங்களுடைய மகன்கள் மீது தனிப்பட்ட அக்கறை காட்டும்போது, அவர்கள் பெரியவர்களாக வளருகையில் அதிக தன்னம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உடையவர்களாக ஆகிறார்கள் என்ற ஓர் ஆராய்ச்சியின் முடிவை அது அறிவித்தது.
தங்கள் மீது இப்படிப்பட்ட தனிப்பட்ட அக்கறை காட்டுகிற தகப்பன் கிடைத்ததற்காக தானும் இரட்டையரில் அடுத்தவளாகிய தன்னுடைய சகோதரியும் நன்றியுள்ளவர்களாக இருப்பதாக இந்தச் சிறுமி கூறினாள். உலக சம்பவங்களைப் பற்றி விழித்தெழு! பத்திரிகை அறிவிக்கும் விதம் தன்னை கவருகிறது என்றும், “இது இன்றைய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள பத்திரிகை” என்றும் அவள் குறிப்பிட்டாள்.
இன்று மனிதவர்க்கம் எதிர்ப்படும் விசித்திரமான பிரச்சினைகளை குடும்பங்கள் சமாளிப்பதற்கு, 192 பக்கங்களைக் கொண்ட குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தை யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்திருக்கிறார்கள். இது, குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும்—கணவன்மார், மனைவிமார், பெற்றோர்கள், பிள்ளைகள், தாத்தாபாட்டிமார் ஆகியோர் அனைவருக்கும்—பயனுள்ள வழிகாட்டி. “சிசுப்பருவத்திலிருந்தே உங்கள் பிள்ளையை பயிற்றுவியுங்கள்,” “உங்கள் பருவவயது பிள்ளை செழித்தோங்க உதவி செய்யுங்கள்,” “உங்கள் குடும்பத்தை தீங்கு விளைவிக்கும் செல்வாக்குகளிலிருந்து பாதுகாத்திடுங்கள்,” “உங்கள் குடும்பத்தில் சமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள்” போன்ற அறிவுபுகட்டும் அதிகாரங்கள் இதில் அடங்கியுள்ளன.
இப்புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலை நீங்கள் பெற விரும்பினால், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து அதிலுள்ள விலாசத்திற்கு அல்லது இப்பத்திரிகையில் 5-ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், படைப்பாளர் ஆதியில் எண்ணம் கொண்டபடியே குடும்ப வாழ்வை மகிழ்ச்சியுள்ளதாக்குவதற்கும் உதவும் திட்டவட்டமான ஆலோசனைகளிலிருந்து நீங்கள் பயனடைவீர்கள். (g01 12/22)
◻ குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்புங்கள்.
◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.