Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எல்லாரும் அதை வாங்கிக் கொண்டார்கள்

எல்லாரும் அதை வாங்கிக் கொண்டார்கள்

எல்லாரும் அதை வாங்கிக் கொண்டார்கள்

மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான ஒரு பொருளில் 10 முதல் 15 நிமிட பேச்சை தயாரித்து வர வேண்டும் என ஸ்விட்ஸர்லாந்தில் பாஸ்லேயிலுள்ள ஒரு பள்ளி ஆசிரியர் அறிவித்தார். ரோஸி என்ற பதினைந்து வயது பெண், “உன் இளமை​—அதை மிக நன்றாய் பயன்படுத்துதல்” என்ற பொருளை தேர்ந்தெடுத்தாள்.

“இது எதைப் பற்றி? நீ போதைப் பொருட்களைப் பற்றி பேசப் போகிறாயா?” என வகுப்புத் தோழர்கள் கேட்டனர்.

“அதை பொறுத்திருந்துதான் பாருங்களேன்” என அவள் பதிலளித்தாள்.

அவளுடைய பேச்சின் முடிவில் மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பின்பு ரோஸி இவ்வாறு குறிப்பிட்டாள்: “ஒருவர் தன் இளமையை மிகச் சிறந்த விதத்தில் பயன்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி சொல்வதற்கு பதினைந்து நிமிடம் போதாது.” ஆகவே அவள் இவ்வாறு சொன்னாள்: “உங்கள் எல்லாருக்கும் கொடுப்பதற்கு நான் ஒரு பரிசு வைத்திருக்கிறேன்.” இளைஞர் கேட்கும் கேள்விகள்​பலன் தரும் விடைகள் என்ற புத்தகத்தில் ஒரு பிரதியை ஒவ்வொரு மாணவருக்கும் என மொத்தம் 20 பிரதிகள் கொடுத்தாள். அவற்றை அழகாக ‘பேக்’ செய்து ஒவ்வொருவருடைய பெயரையும் எழுதியிருந்தாள்.

அனைவரும் நன்றியுடன் அந்தப் பரிசைப் பெற்றுக்கொண்டார்கள்; பிற்பாடு அதிலுள்ள விஷயங்களை அலசி ஆராய்ந்தார்கள். அதில் பின்வரும் தலைப்புகளில் அதிகாரங்கள் இருந்தன: “என் பெற்றோர் எனக்கு மேலுமதிக சுதந்திரம் தரும்படி நான் எவ்வாறு செய்விப்பது?,” “நான் எவ்வாறு உண்மையான நண்பர்களை அடைய முடியும்?,” “வாழ்க்கைத்தொழிலாக எதை நான் தெரிந்துகொள்ள வேண்டும்?,” “விவாகத்துக்கு முன்னான பாலுறவு பற்றி என்ன?,” “அது உண்மையான அன்பு என்பதை நான் எப்படி அறிந்துகொள்வது?”

அந்தப் புத்தகத்தில் மொத்தம் 39 அதிகாரங்கள் உள்ளன. இந்தப் புத்தகத்தைப் பற்றி கூடுதலான தகவலைப் பெற, கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கு அல்லது இப்பத்திரிகையில் பக்கம் 5-⁠ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g02 8/22)

இளைஞர் கேட்கும் கேள்விகள்​—பலன் தரும் விடைகள் என்ற புத்தகத்தைப் பற்றி கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.

◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.