“அது சரியான ஆளிடம்தான் கிடைத்திருக்கிறது!”
“அது சரியான ஆளிடம்தான் கிடைத்திருக்கிறது!”
பாட்ரீஷியா ஒரு பிரீஃப்கேஸை கண்டெடுத்தாள்; மெக்ஸிகோவிலுள்ள குவர்நவாகா நகரத்திலுள்ள ஓர் அரசு அலுவலகத்தில் யாரோ அதை மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டார்கள். அதைத் திறந்தபோது, அதில் பல கிரெடிட் கார்டுகளும் கையொப்பமிடப்பட்ட ‘பிளாங்க் செக்’குகளும் கட்டிடக் கலைஞர் ஒருவருடைய அடையாள அட்டையும் இருந்ததை அவள் பார்த்தாள். வீட்டுக்கு வந்தவுடன், அந்த நபருக்கு ஃபோன் செய்து பிரீஃப்கேஸை தான் கண்டெடுத்த விவரத்தைப் பற்றி தெரிவித்தாள். “கடவுளே, அது சரியான ஆளிடம்தான் கிடைத்திருக்கிறது” என அவர் வியந்துரைத்தார்.
பிரீஃப்கேஸை வாங்குவதற்கு வயதான அந்த கட்டிடக் கலைஞர் பாட்ரீஷியா வீட்டுக்கு வந்தபோது, அவள் கடவுளால் அனுப்பப்பட்ட தேவதூதர் என வியந்து கூறினார். தான் ஒரு யெகோவாவின் சாட்சி என்று பாட்ரீஷியா கூறினாள். “நான் உண்மையான கடவுளாகிய யெகோவாவை வணங்குகிறேன், எப்படி நடந்துகொள்ள வேண்டுமென அவர் எனக்கு கற்றுத்தந்திருக்கிறார். அதனால்தான் இந்த பிரீஃப்கேஸை உங்களிடம் திருப்பிக் கொடுக்கிறேன். எனவே எல்லா பாராட்டும் அவருக்குத்தான் உரியது” என கூறினாள். அவளுக்கு அந்தக் கட்டிடக் கலைஞர் அன்பளிப்பு கொடுக்க வந்தபோது, பாட்ரீஷியா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, பைபிள் பிரசுரங்கள் சிலவற்றை அவருக்குக் கொடுத்து, அவற்றை அவர் வாசித்து பயனடைவதே தனக்குப் போதுமென்று கூறினாள்.
அநேக யெகோவாவின் சாட்சிகளைப் போலவே, பாட்ரீஷியாவும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தைப் படித்திருக்கிறாள். அந்தப் புத்தகத்திலுள்ள 19 அதிகாரங்களில் ஒன்று, “தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்வது ஏன் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது” என்பதாகும். “நேர்மை மகிழ்ச்சியை விளைவிக்கிறது” என்பது அதிலுள்ள ஓர் உபதலைப்பு; இந்த உண்மையை பாட்ரீஷியா அனுபவப்பூர்வமாக கண்டாள்.
192 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தைப் பற்றி கூடுதலான தகவல் பெற விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள கூப்பனை பூர்த்தி செய்து இப்பத்திரிகையில் 5-ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்புங்கள். (g03 8/22)
◻ நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.
◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.