Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம் பிள்ளைகளைப் பாதுகாக்க உதவி

நம் பிள்ளைகளைப் பாதுகாக்க உதவி

நம் பிள்ளைகளைப் பாதுகாக்க உதவி

சென்ற வருடம், அமெரிக்காவிலுள்ள வர்ஜீனியா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தார்: “7, 6, 4 வயதிலிருக்கும் என் பேரன்கள் தூங்குவதற்கு முன்பு, ‘பாட்டி, இயேசு புத்தகத்திலிருந்து எங்களுக்கு ஒரு கதை வாசிச்சு காட்டுங்களேன்’ என்று கேட்பார்கள். இந்தக் கதைகளைக் கேட்பதில் அவர்களுக்கு ரொம்ப ஆர்வம்.”

அந்தப் பாட்டி இவ்வாறும் எழுதியிருந்தார்: “‘இயேசு எப்படி பாதுகாக்கப்பட்டார்’ என்ற தலைப்பில் உள்ள 32-வது அதிகாரத்தை வாசித்துக்காட்டினேன். யெகோவா எவ்வாறு இயேசுவைக் காப்பாற்றினார் என்பதை அந்த அதிகாரம் விளக்கியிருப்பதோடு, பிள்ளைகள் தங்களைத் தாங்களே எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதற்கு பின்வரும் நடைமுறையான ஆலோசனையும் அதில் கொடுக்கப்பட்டிருப்பது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது: ‘யாராவது அப்படிச் செய்ய முயன்றால், “தொடாதே! நான் காட்டிக் கொடுத்துவிடுவேன்!” என சத்தமாகவும் உறுதியாகவும் சொல்ல வேண்டும்.’”

மெக்ஸிகோவில் ஒரு தாய் தன் ஐந்து வயது மகள் பெட்சைதாவுடன் போதகர் புத்தகத்தை இரண்டாவது முறையாகப் படித்து வருவதாகச் சொன்னார். “உலகம், நாளுக்கு நாள் ரொம்ப மோசமாகிக்கொண்டே போவதால் நம் பிள்ளைகள் முன்பைவிட இப்போது ஏகப்பட்ட பிரச்சினைகளை எதிர்ப்படுகிறார்கள். என் மகள், 32-வது அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளதைப் போன்ற கெட்ட காரியங்களிலிருந்து தன்னைத் தானே எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற பாடத்தை இப்புத்தகத்தில் கற்றுக்கொண்டதற்காக மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பதாய்ச் சொல்கிறாள்” என்று தெரிவித்தார்.

கண்ணைக் கவரும் அழகிய படங்கள் கொண்ட இந்த 256 பக்க புத்தகம் இப்பத்திரிகையின் அளவில் இருக்கிறது. பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைகளின்படி பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதற்கு இது ரொம்ப உதவியாக இருக்கிறது. (நீதிமொழிகள் 22:6) இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் அடிப்படையிலான அதிகாரங்கள் மிக எளிய நடையில் இருக்கின்றன. என்றாலும் அதிலுள்ள விஷயங்கள் எல்லா வயதினருக்கும் ஏற்றவை. கீழ்க்காணும் கூப்பனைப் பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கு அல்லது இந்தப் பத்திரிகையில் பக்கம் 5-⁠ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பி இந்தப் புத்தகத்தைப் பற்றிய கூடுதலான தகவலைப் பெற்றுக்கொள்ளலாம்.

◻ பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தைப் பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.

◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.