இளைஞர் கேட்கின்றனர்
நாங்க வெறும் நண்பர்கள்தானா, இல்லை... !? பகுதி 1
இந்தக் கேள்வியைப் படித்ததும் சட்டென உங்கள் மனதிற்கு யாராவது வருகிறார்களா?
ஆம் இல்லை
↓ ↓
உடனே இந்தக் கட்டுரையைப் இருந்தாலும், இந்தக் கட்டுரையைப்
படியுங்கள். உங்களுக்குப் படித்துப் பாருங்கள். எதிர்பாலாரோடுள்ள
பேருதவியாக இருக்கும். உங்கள் நட்பு எல்லை
மீறாதிருக்க உதவும்.
சரியா தவறா:
கல்யாணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் ஒருவரோடு பழக நான் தயாராகும்வரை எதிர்பாலார் யாரையும் என் நண்பராக்கிகொள்ள மாட்டேன்.
___ சரி ___ தவறு
கவனியுங்கள்: திருமணம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் இயேசுவுக்கு இருக்கவில்லை. என்றாலும், அவருக்குத் தோழிகள் இருந்தார்கள். (மத்தேயு 12:46-50; லூக்கா 8:1-3) மணமாகாத தீமோத்தேயுவும் அப்படித்தான். அதனால், ‘இளம் பெண்களைத் தூய உள்ளத்தோடு தங்கைகள் போல கருதி அன்புடன் நடத்து’ என்று அப்போஸ்தலன் பவுல் அவருக்கு அறிவுரை கூறினார்.—1 தீமோத்தேயு 5:1, 2.
தீமோத்தேயு பல சபைகளில் சேவை செய்து வந்ததால் நிறைய இளம் பெண்களோடு பழக வேண்டியிருக்கும் என்று பவுலுக்குத் தெரிந்திருந்தது. (மாற்கு 10:29, 30) அந்தச் சகோதரிகளோடு தீமோத்தேயு நட்பாக பழகுவது தவறா? இல்லை. என்றாலும், திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் அப்போது அவருக்கு இல்லாததால் பெண்களோடு பழகுவதில் அவர் சில வரம்புகளை வைக்க வேண்டியிருந்தது. ஆம், காதல்வயப்படாமலும் பெண்களிடம் வழியாமலும் அவர்களுடைய உணர்ச்சிகளோடு விளையாடாமலும் இருப்பதற்கு தீமோத்தேயு கவனமாக இருக்க வேண்டியிருந்தது.—லூக்கா 6:31.
உங்களைப் பற்றி என்ன? திருமணம் செய்யத் தயாராக இருக்கிறீர்களா?
ஆம் ⇨ என்றால் எதிர்பாலாரோடுள்ள உங்கள் நட்பு, காலமெல்லாம் சேர்ந்து வாழும் திருமண பந்தத்திற்கு ஒருவேளை வழிநடத்தலாம்.—நீதிமொழிகள் 18:22; 31:10.
இல்லை ⇨ என்றால் உங்களுக்கென்று வரம்புகளை வைத்துக்கொள்ள வேண்டும். (எரேமியா 17:9) அது என்ன அவ்வளவு கஷ்டமானதா? ஆம்! “வெறும் ஃப்ரெண்டா இருக்கிறது ரொம்ப கஷ்டம். ஏன்னா, பசங்களோட எந்தளவுக்கு பழகுறதுனு ஒரு எல்லை வெச்சுக்கிறது ஈஸியே இல்ல” என்கிறாள் 18 வயது நவிஷா. *
வரம்புகள் வைப்பது ஏன் ரொம்ப முக்கியம்? இல்லையென்றால், உங்கள் மனம் காயப்பட்டுவிடும் அல்லது எதிர்பாலாரின் மனம் காயப்பட்டுவிடும். காரணத்தைக் கவனியுங்கள்:
வாழ்க்கையின் நிஜம்: திருமணத்திற்குத் தயாராவதற்கு முன்பே நெருக்கமாகப் பழக ஆரம்பித்துவிட்டால் இருவரில் ஒருவருக்கு வேதனை மிஞ்சுவது உறுதி. “ரெண்டு தடவை எனக்கு இந்த மாதிரி நடந்திருக்கு. ஒரு தடவை நான் ஒரு பையனை விரும்பினேன், இன்னொரு தடவை ஒரு பையன் என்னை விரும்பினான். ரெண்டு தடவையும் ரெண்டு பேர்ல ஒருத்தர் மனதளவில காயப்பட்டது உண்மை. அந்தக் காயம் இன்னிக்கு வரைக்கும் ஆறவே இல்ல” என்கிறாள் 19 வயது சுமானா.
சிந்தித்துப் பார்க்க:
● எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் எதிர்பாலாரோடு பழகுவது நல்லது? எப்படிப்பட்ட சூழ்நிலைகளைத் தவிர்ப்பது நல்லது?
● ஒரே நபருடன் அடிக்கடி நேரம் செலவிடுவது ஏன் நல்லதல்ல? அதை, அவன்/ள் எப்படி எடுத்துக்கொள்வான்/ள்? நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?
“சில நேரம் நானே என்னை ஏமாத்திக்குவேன், ‘நாங்க சும்மா ஃப்ரெண்ட்ஸ்தான். அவன் எனக்கு அண்ணன் மாதிரி’னு சொல்லிக்குவேன். ஆனா வேற எந்த பொண்ணுகிட்டையாவது அவன் பேசுனா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். என்கிட்ட மட்டும்தான் அவன் பேசணும்னு நினைப்பேன்.”—அனிதா.
பைபிள் சொல்லும் உண்மை: “அறிவுள்ளவர்கள் துன்பம் வருவதைப் பார்த்து அதிலிருந்து விலகிக் கொள்வார்கள். ஆனால் அறிவற்றவர்களோ நேராகத் துன்பத்தை நோக்கிப் போய் அதில் சிக்கிக் கொள்வார்கள்.”—நீதிமொழிகள் 22:3, ஈஸி டு ரீட் வர்ஷன்.
வாழ்க்கையின் நிஜம்: திருமணத்திற்குத் தயாராவதற்கு முன்பே நெருங்கிப் பழக ஆரம்பித்துவிட்டால் நல்ல நட்பை இழந்துவிடுவீர்கள். 16 வயது கேத்தி, தன் அனுபவத்தைச் சொல்கிறாள்: “நானும் ஒரு பையனும் அப்பப்போ மெஸேஜ் அனுப்பிக்குவோம்; போகப் போக தினமும் அனுப்ப ஆரம்பிச்சோம். கொஞ்ச நாள்ல அவன் என்கிட்ட வழிய ஆரம்பிச்சிட்டான். ஒருநாள், அவனுக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்குன்னும், ஃப்ரெண்ட்டைவிட மேலா என்னை நினைக்கிறதாவும் சொன்னான். ஆனா, நான் அவனை அந்த மாதிரி நினைக்கவே இல்லை. இத நான் அவன்கிட்ட சொன்னதுல இருந்து எங்களுக்குள்ள பேச்சு குறைஞ்சிடுச்சி. அப்படியே எங்க நட்பும் முறிஞ்சுபோச்சு.”
சிந்தித்துப் பார்க்க:
● கேத்தியின் விஷயத்தில் யாருடைய மனம் புண்பட்டது? ஏன்? கேத்தியோ அல்லது அந்தப் பையனோ இதை தவிர்த்திருக்க முடியுமா? ஆம் என்றால், எப்படி?
● மெஸேஜ் அனுப்பும்போது என்னென்ன விதங்களில் ஒருவர் தன்னை அறியாமலேயே மற்றொருவருக்கு, ‘நீ ஃப்ரெண்டு மட்டுமல்ல அதற்கும் மேல்’ என்ற உணர்வை ஏற்படுத்திவிடலாம்?
“பொதுவா பசங்க நல்ல ஃப்ரெண்டா இருப்பாங்க. அதுக்காக, ஃப்ரெண்ட்ஷிப்பையும் காதலையும் போட்டு குழப்பிக்க நான் தயாரா இல்லை. அதனால சில நேரம் நானே எனக்கு ‘பிரேக்’ போட்டுக்குவேன்.”—லாரா.
பைபிள் சொல்லும் உண்மை: “விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.”—நீதிமொழிகள் 14:15.
நெஞ்சில் நிறுத்த: எதிர்பாலாரோடு நட்பாகப் பழகுவதில் தப்பில்லை. ஆனால், கல்யாணம் செய்துகொள்வதற்கு நீங்கள் தயாராக இல்லையென்றால் உங்கள் நட்புக்கு எல்லை கோடு நிர்ணயிப்பது அவசியம்.
“இளைஞர் கேட்கின்றனர்” அடுத்த கட்டுரையில்...
திருமணத்திற்குத் தயாராவதற்கு முன்பே நெருங்கிப் பழக ஆரம்பிப்பது உங்கள் நற்பெயரை கெடுத்துவிடும். எப்படி என்று பார்க்கலாம். (g12-E 06)
“இளைஞர் கேட்கின்றனர்” தொடரில் வெளியான மற்ற கட்டுரைகளை www.dan124.com என்ற வெப்சைட்டில் பாருங்கள்.
[அடிக்குறிப்பு]
^ இந்தக் கட்டுரையில் வரும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 22-ன் பெட்டி/படம்]
நீங்கள் என்ன செய்வீர்கள்?
நிஜ சம்பவம்: “எனக்கு ஒரு ஃப்ரெண்ட் இருந்தான். அவன் கிட்டத்தட்ட 1,500 கிலோ மீட்டர் தூரத்துல இருந்தான். நாங்க ரெண்டுபேரும் வாரத்துல ஒரு தடவையாவது மெஸேஜ் அனுப்பிக்குவோம், அவன் மேல எனக்கு லவ் எல்லாம் இல்ல, அவனுக்கும் அப்படியெல்லாம் இருக்காதுனு நெனச்சேன். ஆனா ஒருநாள், ‘ஹாய் டார்லிங்! உன்ன நான் ரொம்ப “மிஸ்” பண்றேன், உன்ன பார்க்காம இருக்கவே முடியல’னு ஒரு மெஸேசேஜ் அனுப்பினான். எனக்கு திக்குன்னு ஆயிடுச்சு. நான் உன்னை ஃப்ரெண்டாதான் நெனச்சேன், லவ் எல்லாம் இல்லனு சொன்னேன். ‘இஷ்டம் இல்லன்னா போ’னு பதில் அனுப்பினான். அதுக்கு அப்புறம் அவன் எனக்கு மெஸேஜே அனுப்பல.”—ஜேனட்.
● நீங்கள் கல்யாணத்திற்குத் தயாராக இல்லாதபோது ஜேனட்டிற்கு வந்ததுபோல் ஒரு மெஸேஜ் உங்களுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்?
● நீங்கள் ஒரு ஆண் என்றால், ஜேனட்டிற்கு வந்த மெஸேஜ்களில் எந்தத் தப்பும் இல்லை என்று சொல்வீர்களா? ஆம் என்றால், ஏன்? இல்லை என்றால், ஏன்?
● நேருக்கு நேர் பார்த்து பேசுவதைவிட மெஸேஜில் பேசினால் மனதளவில் நெருக்கம் ஏற்படுவது சுலபம் என்று நினைக்கிறீர்களா? ஆம் என்றால், ஏன்? இல்லை என்றால், ஏன்?
[பக்கம் 23-ன் பெட்டி]
பெற்றோரிடம் கேட்டுப் பாருங்களேன்
இந்தக் கட்டுரையில் கேட்கப்பட்ட கேள்விகளை உங்கள் பெற்றோரிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் கருத்தும் உங்கள் கருத்தும் முரண்படுகிறதா? ஆம் என்றால், எந்த விதத்தில்? அவர்கள் சொல்வதில் என்ன நல்ல விஷயங்கள் இருக்கிறது?—நீதிமொழிகள் 11:14.
[பக்கம் 23-ன் பெட்டி/படங்கள்]
உங்களைப் போன்றவர்கள் சொல்கிறார்கள்...
ஜோஷுவா—ஒரே ஆளோட எந்தளவு நேரம் செலவிடுறீங்களோ அந்தளவு அவங்களோட நெருக்கமாயிடுவிங்க.
நடாஷா—சும்மா ஃப்ரெண்டா இருக்கணும்னு நீங்க நெனைக்கலாம். ஆனா ஒரே நபரோட பொழுத போக்குனா ரெண்டு பேருக்குமே, இல்லைன்னா ஒருத்தருக்காவது கண்டிப்பா காதல் வந்துடும்.
கெல்ஸி—நீங்க ஒருத்தரோட வெறும் ஃப்ரெண்டா பழக ஆரம்பிச்சாலும், அவங்களோடவே சுத்திட்டு இருந்தா உங்க மனசு மாறுறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஃப்ரெண்டா மட்டுமே இருக்கிறது முடியாத விஷயம், அப்படி இருக்கணும்னா அறிவும் அனுபவமும் வேணும்.
[பக்கம் 22-ன் படம்]
திருமணம் செய்ய தயாராவதற்கு முன்பே நெருங்கிப் பழக ஆரம்பித்தால் வாழ்க்கை சின்னாப்பின்னாமாகிவிடும்