Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

 அட்டைப்பட கட்டுரை | ஏன் வாழ வேண்டும்?

நம்பிக்கை இருக்கிறது

நம்பிக்கை இருக்கிறது

“சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11.

வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் இருக்கும் என்று பைபிள் சொல்கிறது. (யோபு 14:1) நம் எல்லோருக்கும் ஏதோவொரு பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. சிலர் விரக்தியின் எல்லைக்கே போய்விடுகிறார்கள். வாழ்க்கையில் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லாமல் தவிக்கிறார்கள். நீங்களும் அப்படித் தவிக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள்! வாழ்க்கை நல்லபடியாக மாறும் என்று பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. உதாரணத்திற்கு:

  • நாம் சந்தோஷமாக இருக்கவே யெகோவா தேவன் நம்மைப் படைத்திருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது.—ஆதியாகமம் 1:28.

  • பூமியை ஓர் அழகிய தோட்டமாக மாற்றப்போவதாக யெகோவா தேவன் வாக்கு கொடுத்திருக்கிறார்.—ஏசாயா 65:21-25.

  • கொடுத்த வாக்கை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார். ஏனென்றால் வெளிப்படுத்துதல் 21:3, 4 சொல்கிறது:

    “கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும், அவர்களோடு அவர் குடியிருப்பார்; அவர்கள் அவருடைய மக்களாக இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார். அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்.”

இது வெறும் கற்பனை அல்ல! இதை நிச்சயம் செய்யப்போவதாக யெகோவா தேவனே சொல்லியிருக்கிறார், இதைச் செய்வதற்கான சக்தியும் ஆசையும் அவருக்கு இருக்கிறது. பைபிள் கொடுக்கும் வாக்குறுதியில் நமக்குத் துளியும் சந்தேகம் வேண்டாம். நம்பிக்கையோடு வாழ இதைவிட வேறு என்ன காரணம் வேண்டும்! ▪ (g14-E 04)

யோசித்து பாருங்கள்: வாழ்க்கையில் புயல்போன்ற பிரச்சினைகள் நம்மை சுழற்றிச் சுழற்றி அடித்தாலும் பைபிளிலுள்ள நம்பிக்கையான செய்தி நங்கூரம் போல நம்மைத் தாங்கிப் பிடிக்கும்.

இன்று நீங்கள் என்ன செய்யலாம்? பைபிளிலுள்ள நம்பிக்கையான செய்தியைத் தெரிந்துகொள்ளுங்கள். இதற்கு யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவுவார்கள். உங்கள் பகுதியிலுள்ள சாட்சிகளைத் தொடர்புகொள்ள அல்லது இதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள jw.org வெப் சைட்டைப் பாருங்கள். *

^ பாரா. 11 jw.org வெப் சைட்டில் வெளியீடுகள் > ஆன்லைன் லைப்ரரி என்ற தலைப்பை கிளிக் செய்யுங்கள். அதில் “மனச்சோர்வு” அல்லது “தற்கொலை” போன்ற வார்த்தைகளை டைப் செய்யுங்கள்.