யெஸ்ரயேலில் கண்டுபிடித்தது என்ன?
யெஸ்ரயேலில் கண்டுபிடித்தது என்ன?
யெஸ்ரேல்—நூற்றாண்டுகளாகவே பாழாய் கிடக்கும் ஒரு பண்டைய நகரம். இது, ஒரு காலத்தில் பைபிள் சரித்திரத்தில் சீரும் சிறப்புமாக விளங்கியது. இன்றோ சுவடு தெரியாமல் போய்விட்டது. முன்பிருந்த புகழ்மங்கி, இப்பொழுது சிறு மண் மேடாக காட்சியளிக்கிறது! சமீப வருடங்களில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்களின் பார்வை யெஸ்ரயேலின் இடிபாடுகளின்மீது விழுந்திருக்கிறது. பைபிள் பதிவுகளைப் பற்றி இந்த இடிபாடுகள் எதை வெளிப்படுத்துகின்றன?
பைபிளில் யெஸ்ரயேல்
யெஸ்ரயேல் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது யெஸ்ரயேல். இது, பூர்வ இஸ்ரவேல் தேசத்தின் செழிப்புமிக்க பகுதிகளில் ஒன்று. அந்தப் பள்ளத்தாக்கிற்கு வடக்கே அமைந்திருப்பது மோரே என்ற குன்று. அங்கேதான் நியாயாதிபதியாகிய கிதியோனையும் அவருடைய சேனையையும் தாக்குவதற்காக மீதியானியர்கள் முகாமிட்டிருந்தார்கள். அதற்கு சற்று கிழக்கே கில்போவா மலையின் அடிவாரத்தில் ஆரோத் நீரூற்று சுரக்கிறது. இங்குதான் யெகோவா, பலத்த ராணுவ சேனையின் உதவியின்றி தம்முடைய ஜனங்களை விடுவிக்க வல்லமை இருப்பதை நிரூபித்தார்: ஆயிரங்களாக இருந்த கிதியோனின் சேனையை வெறும் 300 பேர் கொண்ட சேனையாக குறைத்தார். (நியாயாதிபதிகள் 7:1-25, NW; சகரியா 4:6) இந்தக் கில்போவா மலையருகில் இஸ்ரவேலின் முதல் ராஜாவாகிய சவுல் பெலிஸ்தருடன் யுத்தம் செய்தபோது தோற்றுப்போனான். அந்தச் சமயத்தில் யோனத்தானும் சவுலின் மற்ற இரண்டு குமாரர்களும் கொல்லப்பட்டார்கள். சவுலும்கூட தற்கொலை செய்துகொண்டான்.—1 சாமுவேல் 31:1-5.
பூர்வ யெஸ்ரயேல் நகரத்தைப் பற்றிய பைபிள் விவரிப்புகளில் மிகவும் வித்தியாசமான சம்பவங்கள் வருகின்றன. ஒருபுறம் அதிகார துஷ்பிரயோகம், இஸ்ரவேல் ஆட்சியாளர்களின் விசுவாசதுரோகம். மறுபுறம் யெகோவாவின் ஊழியர்கள் காண்பித்த விசுவாசமும் வைராக்கியமும் மிக்க சம்பவங்கள். இஸ்ரவேலின் பத்து கோத்திர வடக்கு ராஜ்யத்தின் ராஜாவாகிய ஆகாபின் தலைநகர் சமாரியா. இருந்தாலும், அவன் தன்னுடைய வீட்டை யெஸ்ரயேலில் கட்டினான். அவன் பொ.ச.மு. பத்தாம் நூற்றாண்டின் கடைசியில் இஸ்ரவேலில் ஆட்சி புரிந்தான். (1 இராஜாக்கள் 21:1) யெஸ்ரேலில் இருந்த ஆகாபின் புறஜாதி மனைவியாகிய யேசபேலிடமிருந்து யெகோவாவின் தீர்க்கதரிசி எலியாவுக்கு கொலை மிரட்டல் செய்திகள் வந்தன. ஏனெனில் யார் மெய் கடவுள் என்பதை கர்மேல் மலையில் நிரூபித்து காட்டிய எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை தைரியமாக வெட்டி வீழ்த்தினார். அதனால் அவள் அதிக ஆத்திரமடைந்தாள்.—1 இராஜாக்கள் 18:36–19:2.
யெஸ்ரயேலில் மற்றொரு குற்றச்செயலும் நிகழ்ந்தது—யெஸ்ரயேலன் நாபோத் கொலை செய்யப்பட்டான். நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தின் மீது ஆகாபுக்கு ஒரு கண். அந்த நிலத்தைத் தரும்படி ராஜா அதிகாரத்தோடு கேட்டபோது, நாபோத் உரிமையோடு இவ்வாறு பதிலளித்தான்: “நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக.” நாபோத்தின் நியாயமான இந்தப் பதிலைக் கேட்டதும் ஆகாப் பொங்கியெழுந்தார். ராஜா முகம் வாட்டமாயிருப்பதைக் கண்ட அரசி யேசபேல், போலி விசாரணைக்கு ஏற்பாடு செய்து நாபோத் தேவ தூஷணம் செய்ததாக குற்றம் சாட்டினாள். குற்றமற்ற நாபோத் குற்றவாளியாக தீர்க்கப்பட்டு கல்லெறிந்து கொல்லப்பட்டான். இவ்வாறு, நாபோத்தின் திராட்சை தோட்டத்தை ராஜா தனக்கு சொந்தமாக்கிக் கொண்டான்.—1 இராஜாக்கள் 21:1-16.
இந்தக் கொடும் செயலால் எலியா இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “நாய்கள் யேசபேலை யெஸ்ரயேலின் மதில் அருகே தின்னும்.” தீர்க்கதரிசி மேலுமாக கூறினார்: “ஆகாபின் சந்ததியில் பட்டணத்திலே சாகிறவனை நாய்க[ள்] . . . தின்னும் . . . தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் 1 இராஜாக்கள் 21:23-29) எலியாவுக்குப் பின்வந்த எலிசாவின் நாட்களைப் பற்றி பைபிள் விவரிக்கிறது. அப்போது, இஸ்ரவேலின் ராஜாவாக யெகூ அபிஷேகம் செய்யப்பட்டார். அவர் யெஸ்ரயேலுக்குச் சென்றபோது, அரண்மனை ஜன்னல் வழியே பார்த்த யேசபேலை கீழே தள்ளிப்போடும்படி கட்டளையிட்டார். அவள் குதிரைகளின் கால்களில் மிதிபட்டாள். நாய்களின் வாய்க்குப் போக மிஞ்சியவை அவளுடைய மண்டையோடும் கால்களும் உள்ளங்கைகளுமே. (2 இராஜாக்கள் 9:30-37) யெஸ்ரயேல் தேசத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்ட கடைசி பைபிள் சம்பவம் ஆகாபின் 70 குமாரர்களுடைய கொலை. அவர்களுடைய தலைகளை யெஸ்ரயேலின் ஒலிமுக வாசலில் இரண்டு குவியலாக குவித்து வைத்தார் யெகூ. அதன்பின் அவர் ஆகாபின் விசுவாசதுரோக ஆட்சியை ஆதரித்த மற்றவர்களையும் ஆசாரியர்களையும் கொன்று போட்டார்.—2 இராஜாக்கள் 10:6-11.
பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை.” ஆனால், யெகோவாவின் நியாயத்தீர்ப்பு செய்தியை ஆகாபிடம் எலியா உரைத்தபோது, ஆகாப் தன்னை தாழ்த்தினதால் இந்தத் தண்டனை அவனுடைய நாட்களில் வருவதில்லை என்று யெகோவா அறிவித்தார். (புதைபொருள் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு
யெஸ்ரயேல் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்யும் கூட்டுத் திட்டம் 1990-ல் ஆரம்பமானது. இதில் பங்கெடுத்த இரண்டு அமைப்புகள்: இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்க்கியாலஜி ஆஃப் டெல் அவிவ் யுனிவர்ஸிட்டி (அதன் பிரதிநிதி டேவிட் உஸிஷ்கின்), பிரிட்டிஷ் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கியாலஜி இன் ஜெரூசலம் (அதன் பிரதிநிதி ஜான் வுட்ஹெட்). 1990-96-ன் இடைப்பட்ட வருடங்களில் ஆய்வு செய்யப்பட்ட ஏழு காலப்பகுதிகளில் (ஒவ்வொரு காலப்பகுதியும் ஆறு வாரங்கள் நீடித்தது) 80 முதல் 100 தொண்டர்கள் அங்கு வேலை செய்தனர்.
ஏற்கெனவே இருக்கும் கருத்துக்களையும் கோட்பாடுகளையும் ஓரங்கட்டிவிட்டு, அந்நிலப் பகுதிக்கே உரிய தனிச்சிறப்புகளின் அடிப்படையில் கிடைக்கும் ஆதாரங்களை ஆய்வு செய்வதே நவீன புதைபொருள் ஆராய்ச்சியின் அணுகுமுறை. ஆகவே பைபிள் தேசங்களை ஆய்வுசெய்யும் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே பைபிளில் காணப்படும் பதிவுகளை தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு முடிவான அத்தாட்சியாய் ஏற்கமாட்டார்கள். மற்ற எல்லா அத்தாட்சிகளையும் கண்ணால் காண முடிந்த சான்றுகளையும் கவனமாக ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். என்றாலும், பைபிளில் சில அதிகாரங்களில் மட்டுமே யெஸ்ரயேலை பற்றிய பதிவுகள் காணப்படுவதாகவும் பூர்வ புத்தகங்கள் வேறெதிலும் காணப்படுவதில்லை எனவும் ஜான் வுட்ஹெட் சொல்கிறார். ஆகவே, எந்த ஆராய்ச்சியாக இருந்தாலும்சரி, பைபிள் விவரப் பதிவுகளுக்கும் காலக்கணிப்பு அட்டவணைக்கும் அதில் முக்கிய பங்கு உண்டு. அப்படியானால் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் என்ன கண்டுபிடித்திருக்கின்றனர்?
இந்த இடிபாடுகள் உலோக காலத்திற்கே, அதாவது பைபிளில் சொல்லப்பட்டுள்ள யெஸ்ரயேலின் காலப்பகுதிக்கே உரியது என்பதை தோண்டி எடுக்கப்பட்ட கோட்டைச் சுவர்களின் பகுதிகளும் மண்பாண்டங்களும் சுட்டிக்காட்டின. ஆனால் தோண்டத் தோண்ட எண்ணற்ற வியப்பூட்டும் உண்மைகள் தெரியவந்தன. முதல் வியப்பு: அந்த நிலப்பகுதியின் அளவும் அதன் பெரிய மதில்களும். மதில் சூழ்ந்த இந்த நிலப்பரப்பு இஸ்ரவேலின் தலைநகரான பூர்வ சமாரியாவைப் போல் இருக்கும் என புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் தொடர்ந்து தோண்டியபோதுதான் யெஸ்ரயேல் அதைவிட மிகப் பெரிய நகரம் என்பது தெரிய வந்தது. அதன் சுவர்களின் நீளத்தை வைத்து கணக்கிடுகையில் சுமார் 300 மீட்டருக்கு 150 மீட்டர் அளவுடைய அதன் பரப்பளவு,
இஸ்ரவேலில் கண்டுபிடிக்கப்பட்ட அந்தக் காலத்தைச் சேர்ந்த மற்ற எந்த நகரத்தையும்விட மூன்று மடங்கு பெரிதாக இருந்தது. இது, மதில்களிலிருந்து சுமார் 11 மீட்டர் ஆழமுள்ள வறண்ட அகழியால் சூழப்பட்டிருந்தது. பேராசிரியர் உஸிஷ்கின் கருத்துப்படி, இது போன்ற அகழி பைபிள் காலங்களுக்கு முன்பு இல்லை. அவர் இவ்வாறு சொன்னார், “சிலுவைப் போர்வீரர்களின் காலப்பகுதி வரை இஸ்ரவேலில் இதுபோன்ற வேறு எதையும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை.”வியப்பூட்டும் மற்றொரு அம்சம், அந்த நகரின் மையத்தில் பிரமாண்டமான கட்டிடங்கள் எதுவும் இல்லாததே. அந்நகரை நிர்மாணிக்கையில், அங்கு மேடை அல்லது தளம் ஒன்று உயரமாக எழுப்பப்பட்டது. அந்த வேலைக்காக பெருமளவில் அடர்சிவப்பு நிற மண் கொண்டுவந்து குவிக்கப்பட்டது. யெஸ்ரயேல் வெறும் அரண்மனை மட்டுமல்ல என்பதற்கு இந்தச் சிறப்புமிக்க மேடை ஆதாரம் அளிக்கலாம் என டெல் ஜெஸ்ரீலில் செய்யப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சியின் த செக்கண்ட் ப்ரிலிமினரி ரிப்போர்ட் குறிப்பிட்டது. அது இவ்வாறு சொன்னது: “உம்ரியின் அரச பரம்பரையினர் காலத்தில் இஸ்ரவேல் ராஜாக்களின் முக்கிய ராணுவ மையமாக யெஸ்ரயேல் இருந்திருக்க வேண்டும் என்று நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம் . . . அங்குதான் போர் ரதங்களுக்கும் குதிரைப்படைக்கும் பயிற்சியளிக்கப்பட்டது.” உயர்ந்த மேடையின் அளவையும் அந்த நகரத்தின் அளவையும் வைத்து பார்க்கையில், அப்போது மத்திய கிழக்கிலிருந்த மிகப் பெரிய ரத சேனையின் ராணுவ வலிமையைக் காட்டும் ஒருவித அணிவகுப்புக்கான சதுக்கமாக இது இருந்திருக்கலாம் என்பதாக வுட்ஹெட் கருதுகிறார்.
தோண்டியெடுக்கப்பட்ட அந்நகர வாயிலின் சில எஞ்சிய பாகங்கள்தான் புதைபொருள் ஆராய்ச்சியாளர்களின் கருத்தைக் கவர்ந்த முக்கிய அம்சம். அதன் நுழைவாயிலில் குறைந்தபட்சம் நான்கு அறைகள் உள்ள வாசல் இருந்ததை அவை காட்டுகின்றன. இருந்தாலும் அந்த இடத்திலுள்ள அநேக கற்கள் பல நூற்றாண்டுகளாகவே கொள்ளையடிக்கப்பட்டு வந்ததால் இவற்றை வைத்து உறுதியான முடிவுக்கு வரமுடியாது. மெகிதோ, ஆத்சோர், கேசேர் போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட இதே அளவுள்ள ஆறு அறைகளைக் கொண்ட வாயிலைத்தான் எஞ்சிய இந்தப் பாகங்களும் சுட்டிக்காட்டுகின்றன என்பதாக வுட்ஹெட் கருதுகிறார். a
இராணுவ ரீதியிலும் பூகோள ரீதியிலும் மிகச்சிறந்த இடத்தில் அமைந்திருந்த இந்த நகரம் சிறிது காலத்திற்கே நிலைத்திருந்ததை புதைபொருள் கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. இந்தப் பெரிய அரண் சூழ்ந்த பட்டணமாகிய யெஸ்ரயேல் சிறிது காலத்திற்கே, சொல்லப்போனால் ஒருசில பத்தாண்டுகளே நிலைத்திருந்ததாக வுட்ஹெட்டும் அழுத்தந்திருத்தமாக கூறுகிறார். பைபிள் காலத்திலிருந்த இஸ்ரவேலின் முக்கிய பட்டணங்களாகிய மெகிதோ, ஆத்சோர், தலைநகராகிய சமாரியா போன்றவற்றோடு ஒப்பிட இது முற்றிலும் வித்தியாசமானது. இந்தப் பட்டணங்கள் வெவ்வேறு காலப்பகுதிகளில் திரும்பவும் கட்டப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டன. ஆனால் இத்தனை சிறப்புமிக்க இந்த இடம் ஏன் இவ்வளவு சீக்கிரத்தில் பிரயோஜனமற்றதானது? ஆகாபும் அவனுடைய வம்சமும் அத்தேசத்தின் வருமானத்தை ஊதாரித்தனமாக செலவழித்ததே அதன் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாய் இருக்கலாம் என்பதாக வுட்ஹெட் ஊகிக்கிறார். யெஸ்ரயேல் நகரத்தின் அளவும் பலமுமே இதைக் காட்டுகிறது. யெகூவுடைய புதிய ஆட்சியில் ஆகாபின் பெயர் எடுபடாதபடிக்கு அந்த நகரையே கைவிட்டுவிட்டார்.
இவ்வாறாக, உலோக காலத்தின் சமயத்தில் இஸ்ரவேலின் முக்கிய ஸ்தலமாக யெஸ்ரயேல் விளங்கியது என்பதையே ஆராய்ச்சியில் கிடைத்த அனைத்து ஆதாரங்களும் உறுதி செய்கின்றன. அந்நகரின் அளவும் கோட்டைச் சுவர்களும், ஆகாப், யேசபேலின் புகழ்மிக்க அரண்மனை பற்றிய பைபிளின் விவரிப்புக்கு ஒத்திருக்கின்றன. அந்த நகரில் மக்கள் ஒரு குறுகிய காலத்திற்கே குடியிருந்தார்கள் என்பதற்கான அத்தாட்சிகளும்கூட பைபிள் பதிவுகளுடன் ஒத்திருக்கின்றன. ஆகாபுடைய ஆட்சியில் சிறப்புற்று விளங்கிய இந்த நகரம், யெகோவாவின் கட்டளைப்படி, “யெஸ்ரயேலிலும் ஆகாபின் குடும்பத்தாரில் மீதியான யாவரையும், அவனுக்கு இருந்த எல்லா மந்திரிகளையும், அவனைச் சேர்ந்த மனுஷரையும், அவனுடைய ஆசாரியர்களையும், அவனுக்கு ஒருவரையும் மீதியாக வைக்காதபடிக்கு, யெகூ கொன்றுபோட்ட”போது பொழிவை இழந்தது.—2 இராஜாக்கள் 10:11.
யெஸ்ரயேல் பற்றிய காலக்கணக்கு
“புதைபொருள் ஆராய்ச்சியில் சரியான காலத்தை கணிப்பது மிகவும் கடினம்” என்பதாக ஜான் வுட்ஹெட் கூறுகிறார். ஆகவே ஏழு வருட அகழ்வாராய்ச்சியின்
முடிவுகளை பரிசீலிக்கையில், வேறு இடங்களில் ஆய்வு செய்து கண்டுபிடித்தவற்றோடு ஒப்பிடுவதன்மூலம் காலத்தை நிர்ணயிக்கின்றனர். அவர்களுடைய இந்தக் கணக்கிடுதல் மறுமதிப்பீட்டிற்கும் சர்ச்சைக்கும் வழிநடத்தியுள்ளது. ஏன்? ஏனெனில் இஸ்ரேலிய புதைபொருள் ஆராய்ச்சியாளர் யீகேல் யாடின் 1960-களிலும் 1970-களின் ஆரம்பத்திலும் மெகிதோவில் ஆராய்ச்சி செய்தார். அவர் கண்டுபிடித்த கோட்டை சுவர்களும் நகர வாயில்களும் சாலொமோன் ராஜாவின் காலத்தைச் சேர்ந்தவை என புதைபொருள் ஆய்வுத்துறையில் உள்ள பலர் உறுதியாக நம்பினர். ஆனால் இப்போது யெஸ்ரயேலில் கண்டெடுக்கப்பட்ட கோட்டைச் சுவர்களும் மண்பாண்டங்களும் வாயில்களும் யீகேல் யாடினின் முடிவுகளின் பேரில் கேள்வி எழுப்புகின்றன.உதாரணமாக, சாலொமோனின் ஆட்சி காலத்திற்குரியதாக யாடின் சொன்ன மெகிதோவின் மண்பாண்டங்கள் யெஸ்ரயேலில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்டங்களுடன் ஒத்திருக்கின்றன. இந்த இரு பகுதிகளிலும் உள்ள வாயில்களின் அமைப்பு, அளவுகள் ஆகிய அனைத்தும் அச்சுவார்த்தது போல இல்லாவிட்டாலும் அதற்கொப்பாகவே உள்ளன. வுட்ஹெட் இவ்வாறு கூறுகிறார்: “யெஸ்ரயேல் நிலப்பகுதி சாலொமோன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும் அல்லது [மெகிதோ, ஆத்சோர் போன்ற] மற்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டவை ஆகாபின் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டும் என்றே கிடைத்த அனைத்து ஆதாரங்களும் காட்டுகின்றன.” யெஸ்ரயேல் நிலப்பகுதியை, பைபிள் ஆகாபின் காலத்தோடு இணைப்பதால் இந்த அகழ்வாராய்ச்சி பொருட்கள் ஆகாபுடைய ஆட்சி காலத்தவையே என ஏற்றுக்கொள்வது நியாயமானது என்று அவர் கருதுகிறார். டேவிட் உஸிஷ்கின் இவ்விதமாக ஒப்புக்கொள்கிறார்: “சாலொமோன் மெகிதோவைக் கட்டினதாக பைபிள் கூறுகிறது. ஆனால் அந்த வாயில்களை அவர்தான் கட்டினார் என அது சொல்லவில்லை.”
யெஸ்ரயேலின் சரித்திரம்—அறிந்துகொள்ள முடியுமா?
புதைபொருள் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளும் அதனால் விளைந்த சர்ச்சைகளும் யெஸ்ரயேல் அல்லது சாலொமோனைப் பற்றிய பைபிள் பதிவுகளின் பேரில் சந்தேகத்தை எழுப்புகிறதா? புதைபொருள் ஆராய்ச்சியின் கருத்து வேறுபாடுகள் பைபிள் பதிவை எவ்வகையிலும் பாதிப்பதில்லை. புதைபொருள் ஆராய்ச்சி, வரலாற்றை பைபிள் விவரப்பதிவுகளிலிருந்து வித்தியாசப்பட்ட கோணத்தில் ஆய்வு செய்கிறது. அது பற்பல கேள்விகளை எழுப்புகிறது, வித்தியாசப்பட்ட கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆகவே, பைபிள் மாணாக்கரையும் புதைபொருள் ஆராய்ச்சியாளரையும் இணையான பாதைகளில் செல்லும் பயணிகளுக்கு ஒப்பிடலாம். ஒருவர் தெரு வழியே வண்டியோட்டிச் செல்கிறார். மற்றவரோ நடைபாதையில் நடந்து செல்கிறார். அவர்களுடைய இலக்குகளும் அக்கறைகளும் வித்தியாசப்படுகின்றன. ஆனாலும், அவர்களுடைய நோக்குநிலைகள் ஒன்றுக்கொன்று முரண்படுவதற்குப் பதிலாக இணைந்தே செல்கின்றன. இந்த இரு பயணிகளின் கருத்துக்களையும் ஒப்பிட்டால் அவை சுவாரசியமான உண்மைகளை வெளிப்படுத்தும்.
பைபிளில் பூர்வகால சம்பவங்களையும் மக்களையும் பற்றிய பதிவுகள் அடங்கியுள்ளன. புதைபொருள் ஆராய்ச்சி இத்தகைய சம்பவங்களையும் மக்களையும் பற்றிய தகவல்களை, கிடைக்கும் அனைத்து ஆதாரங்களையும் ஆராய்வதன் மூலம் பெற முயலுகிறது. என்றாலும் அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டவை பெரும்பாலும் அறைகுறையாகவே இருப்பதால் அவை பல விளக்கங்களுக்கு வழிவகுக்கின்றன. இதைக் குறித்து அமிஹி மஸார் என்பவர், ஆர்க்கியாலஜி ஆஃப் த லாண்ட் ஆஃப் த பைபிள்—10,000-586 பி.சி.இ. என்ற தன்னுடைய புத்தகத்தில் இவ்விதமாக குறிப்பிடுகிறார்: “புதைபொருள் ஆராய்ச்சியை . . . பெரும்பாலும் ஒரு கலை என்றே சொல்லலாம். அதுமட்டுமல்ல பயிற்சியும் தொழில் திறமையும் அதோடு சேர்ந்துகொள்கின்றன. கெடுபிடியான எந்தவொரு ஆய்வுமுறையும் வெற்றிக்கு உத்தரவாதமளிக்காது. மேலும் அப்பணியின் மேற்பார்வையாளர்களுக்கு வளைந்து கொடுக்கும் தன்மையும் முற்போக்கு சிந்தையும் கட்டாயம் வேண்டும். புதைபொருள் ஆராய்ச்சியாளருக்கு கிடைத்திருக்கும் பயிற்சியையும் வாய்ப்பு வளங்களையும் போலவே அவரது ஆள்தன்மை, திறமை, பொது அறிவு ஆகியவையும் முக்கியமானவையே.”
யெஸ்ரயேல், முக்கிய அரச குடும்பத்திற்கும் இராணுவத்திற்கும் மையமாக திகழ்ந்தாலும் சிறிது காலத்திற்கே அச்சிறப்பில் நிலைத்திருந்தது என புதைபொருள் ஆராய்ச்சி உறுதியளித்துள்ளது. பைபிள் விவரிக்கிறபடி அந்தக் காலப்பகுதி ஆகாபின் ஆட்சிக் காலத்துடன் ஒத்திருக்கிறது. எதிர்காலத்தில் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்வதற்கு ஆர்வத்தைத் தூண்டும் இன்னும் அநேக கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. ஆனாலும் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் பக்கங்கள் தொடர்ந்து முழுக் கதையையும் அக்குவேறு ஆணிவேறாக நமக்கு பிட்டு வைக்கிறது. புதைபொருள் ஆராய்ச்சியாளர்களுக்கோ இது முடியாத காரியம்.
[அடிக்குறிப்புகள்]
a ஆகஸ்ட் 15, 1988, ஆங்கில காவற்கோபுரம், “த மிஸ்டரி ஆஃப் த கேட்ஸ்” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 26-ன் படங்கள்]
யெஸ்ரயேலில் புதைபொருள் ஆராய்ச்சிகள்
[பக்கம் 28-ன் படம்]
யெஸ்ரயேலில் கண்டெடுத்த கானானிய சிலை