Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம் எல்லாருக்குமே தேவை பாராட்டு

நம் எல்லாருக்குமே தேவை பாராட்டு

நம் எல்லாருக்குமே தேவை பாராட்டு

அந்தச் சிறுமிக்கு அது இனிய நாளாக இருந்தது. ஏனென்றால் குறிப்பாக அன்றைக்கு அவள் எந்த சேட்டையும் செய்யாததால் மற்ற நாட்களைப் போல அவளை கண்டிக்க அவசியம் ஏற்படவில்லை. ஆனால், அன்று இரவு அவளுடைய அம்மா அவளை தூங்க வைத்த பிறகு அவள் அழுகிற சத்தம் கேட்டது. எதற்காக வருத்தப்படுகிறாள் என அவளிடம் அம்மா விசாரித்தபோது, அவள் தேம்பியவாறே, “நான் இன்னிக்கு நல்ல பிள்ளையா நடந்துக்கலையா?” என்று கேட்டாள்.

அந்தக் கேள்வி அம்மாவுக்கு ரொம்ப மனவேதனையை கொடுத்தது. காரணம் அவள் சேட்டை செய்யும் போதெல்லாம் அவளை கண்டிக்க அம்மா முந்திக்கொள்வார்கள். ஆனால் அன்றைக்கோ அவள் கடும் முயற்சியெடுத்து குறும்பு செய்யாமல் சமர்த்தாக நடந்துகொண்டதை அம்மா கவனித்தும், வாய் திறந்து அவளை பாராட்டி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையே.

பாராட்டையும் நம்பிக்கையையும் பெற விரும்புவது சிறுமிகள் மட்டுமல்ல. நம் அனைவருக்குமே ஆலோசனையும் திருத்தமும் எந்தளவுக்கு தேவையோ அந்தளவுக்கு பாராட்டும் தேவை.

இருதயப்பூர்வமான பாராட்டை பெறும்போது நாம் எப்படி உணருகிறோம்? அது நம் மனதிற்கு இதமூட்டி அந்த நாள் பூராவும் மகிழ்ந்திருக்க செய்கிறதல்லவா? நம்மை கவனித்து, நம்மீது கரிசனை காட்டுகிறவர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வும் ஏற்படுகிறது. நம் முயற்சி வீண்போகவில்லை என்ற நம்பிக்கையை அது நமக்கு அளிக்கிறது, மேன்மேலும் முயற்சி செய்ய வேண்டும் என்ற உந்துவிப்பும் கிடைக்கிறது. ஊக்கமூட்டும் விதமாக நாலுவார்த்தை பேசி உள்ளப்பூர்வமாக பாராட்ட நேரம் எடுத்துக்கொள்கிறவரிடம் நம் மனம் ஈர்க்கப்படுவதில் ஆச்சரியமில்லை.​—நீதிமொழிகள் 15:⁠23.

பாராட்டுவதன் அவசியத்தை இயேசு கிறிஸ்து அறிந்திருந்தார். தாலந்துகளைப் பற்றிய உவமையில், அந்த எஜமான் (இயேசுவை அடையாளப்படுத்துகிறது) உண்மையுள்ள இரண்டு ஊழியக்காரரையுமே “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே” என்று சொல்லி அன்பாக பாராட்டினார். எத்தகைய இதமான வார்த்தைகள்! அவர்கள் இருவருடைய திறமைகளும், சாதனைகளும் வித்தியாசப்பட்டாலும் அவர்கள் ஒரேவிதமான பாராட்டை பெற்றனர்.​—மத்தேயு 25:19-23.

ஆகவே நாம் அந்த சிறுமியின் அம்மாவை மறக்காதிருப்போமாக. மற்றவர்களை பாராட்டுவதற்கு அவர்கள் கண்ணீர் சிந்தும்வரை காத்திருக்க அவசியமில்லை. அதற்கு பதிலாக, பாராட்டுவதற்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களுக்காக நாம் காத்திருக்கலாம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மனதார பாராட்டுவதற்கு நமக்கு நல்ல காரணம் இருக்கிறது.