காவற்கோபுரம் (படிப்பு இதழ்) நவம்பர் 2013  

சாத்தானுடைய உலகம் அழிவைச் சந்திக்கும் நாளுக்காகக் காத்திருக்கும் இவ்வேளையில், கடவுளுடைய பொறுமைக்கு நாம் எப்படிப் போற்றுதல் காட்டலாம்? இன்று பூமியில் இருக்கும் தங்கள் மந்தையை யெகோவாவும் இயேசுவும் எப்படி மேய்க்கிறார்கள்?

“ஜெபம் செய்ய விழிப்புடன் இருங்கள்”

உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏன் தொடர்ந்து ஜெபம் செய்ய வேண்டும்? மற்றவர்களுக்காக நீங்கள் ஜெபம் செய்யும்போது, யார் பயனடைகிறார்கள்?

உதவிக்கரம் நீட்ட தயாரா?

யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலைக்குத் தரப்படும் நன்கொடைகள், மற்றவர்களுடைய பொருளாதார தேவையையும் ஆன்மீக தேவையையும் எப்படிப் பூர்த்தி செய்கிறதெனத் தெரிந்துகொள்ளுங்கள்.

‘காத்திருக்கும்’ மனப்பான்மையைத் தொடர்ந்து காட்டுங்கள்!

நம்முடைய காத்திருக்கும் காலம் முடிவடையப்போகிறது என்பதை என்னென்ன சம்பவங்கள் காட்டும்? கடவுளுடைய பொறுமைக்கு நாம் எப்படிப் போற்றுதல் காட்டலாம்?

வாழ்க்கை சரிதை

கடவுளுடைய சேவைதான் இவரது மருந்து!

ஓநேஸிமஸ் என்ற அந்த நபருக்கு ஆஸ்டியோஜெனிஸிஸ் இம்பெர்ஃபெக்டா என்ற நோய், அதாவது எளிதில் எலும்புமுறிவு ஏற்படும் பிறவி நோய் இருந்தது. பைபிளில் இருக்கும் கடவுளுடைய வாக்குறுதிகள் அவரை எப்படி ஊக்கப்படுத்தியது?

ஏழு மேய்ப்பர்களும் எட்டு அதிபதிகளும்—இன்று யார்?

எசேக்கியா, ஏசாயா, மீகா, எருசலேமின் பிரபுக்கள் போன்றோர் தாங்கள் சிறந்த மேய்ப்பர்கள் என்று எப்படி நிரூபித்தார்கள்? ‘ஏழு மேய்ப்பர்களும் எட்டு அதிபதிகளும்’ இன்று யாரைக் குறிக்கிறார்கள்?

யெகோவா நியமித்த மேய்ப்பர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்

கடவுளுடைய சபையை மேய்ப்பதற்கு கிறிஸ்துவ கண்காணிகள் கடவுளுடைய சக்தியால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் ஏன் அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

மூப்பர்களே, பெரிய மேய்ப்பர்களைப் பின்பற்றுங்கள்!

சபையிலுள்ள ஒருவருக்கு ஆன்மீக உதவி தேவைப்படும்போது மூப்பர்கள் எப்படி உதவலாம்? பெரிய மேய்ப்பர்களான யெகோவாவையும் இயேசு கிறிஸ்துவையும் மூப்பர்கள் எப்படிப் பின்பற்றலாம்?

நம் வரலாற்றுச் சுவடுகள்

ஆமை ஓடுபோல் என் வீடு”

1929-களின் இறுதியில் பொருளாதாரத்தில் உலகளவில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது. இக்கட்டான இந்தச் சூழ்நிலையை முழுநேர ஊழியர்கள் எப்படிச் சமாளித்தார்கள்?