Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

சகித்திருக்க யெகோவாமீது இருந்த அன்பு எனக்கு உதவியது

சகித்திருக்க யெகோவாமீது இருந்த அன்பு எனக்கு உதவியது

அது 1970-வது வருஷம். அமெரிக்காவுல, பென்ஸில்வேனியாவுல இருக்குற ஒரு ஆஸ்பத்திரியில நான் உயிருக்கு போராடிட்டு இருந்தேன். எனக்கு அப்போ 20 வயசுதான். நான் ராணுவத்துல வேலை செஞ்சிட்டு இருந்தேன். அந்த சமயத்துல, ஒரு மோசமான தொற்றுநோய் எனக்கு வந்துச்சு. ஒரு நர்ஸ் (ஆண்) அரைமணி நேரத்துக்கு ஒருமுறை வந்து என் ரத்த அழுத்தத்தை (BP) சோதிச்சு பார்த்திட்டு இருந்தார். என்னைவிட அவருக்கு 4-5 வயசுதான் அதிகமா இருக்கும். என்னோட ‘BP’ குறைஞ்சிட்டே இருந்ததை பார்த்து அவருக்கு ரொம்ப பதட்டமா இருந்துச்சு. ‘உங்க கண்ணு முன்னாடி ஒருத்தர் செத்து போறதை நீங்க பார்த்ததே இல்லையா’னு அவர்கிட்ட கேட்டேன். அப்போ அவரோட முகமே மாறிடுச்சு. ‘நான் பார்த்ததே இல்லை’னு சொன்னார்.

நான் வாழ்வேனா சாவேனானு எனக்கே தெரியாம இருந்தது. எனக்கு ஏன் இந்த நிலைமைனு யோசிக்கிறீங்களா? என் வாழ்க்கையில நடந்ததை இப்போ உங்களுக்கு சொல்றேன்.

போரின் கொடூர முகம்

அப்போ வியட்நாம்ல போர் நடந்துட்டு இருந்துச்சு. அடிப்பட்ட ராணுவ வீரர்களுக்கு ஆப்ரேஷன் செய்ற அறையில நான் வேலை செஞ்சிட்டு இருந்தேன். அங்க வேலை செஞ்சதுனாலதான் எனக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. எனக்கு அடிப்பட்டவங்களையும் வியாதிப்பட்டவங்களையும் கவனிச்சிக்கணும்னா ரொம்ப பிடிக்கும். அதனால ஒரு டாக்டரா ஆகணும்னு ஆசைப்பட்டேன். அதுக்காகத்தான் நான் 1969-ல வியட்நாமுக்கு வந்தேன். புதுசா வர்றவங்களுக்கு, அந்த இடம் பழக்கமாகணும்னு அங்க நடக்குற வேலைகளை பத்தியெல்லாம் முதல் வாரத்துல சொல்லித்தருவாங்க.

சீக்கிரத்திலயே நான் டாங் டாம்ல, மேகாங் டெல்டா என்ற இடத்துல இருக்குற ஆஸ்பத்திரியில வேலைக்கு சேர்ந்தேன். அப்போ, அடிப்பட்ட ராணுவ வீரர்கள் நிறைய பேரை ஹெலிக்காப்டர்கள்ல கொண்டு வந்தாங்க. எனக்கு தேசப்பற்றும் வேலை செய்யணுங்கிற துடிப்பும் இருந்ததுனால அவங்களுக்கு உடனே உதவி செய்யணும்னு விரும்புனேன். அடிப்பட்டவங்களோட காயத்தை எல்லாம் துடைச்சதுக்கு அப்புறம் அவங்களை ஆப்ரேஷன் செய்ற இடத்துக்கு நாங்க எடுத்துட்டு போவோம். ‘ஏசி’ பொறுத்தப்பட்ட ‘மெட்டல் கன்டெய்னர்லதான்’ ஆப்ரேஷன் செய்வாங்க. அந்த சின்ன இடத்துல, ஒரு டாக்டரும் மயக்க மருந்து கொடுக்குறவரும் ரெண்டு நர்ஸுகளும் இருப்பாங்க. வீரர்களோட உயிரை காப்பாத்துறதுக்காக அவங்களும் போராடுவாங்க. சிலசமயம், ஹெலிக்காப்டர்ல இருந்து பெரிய கறுப்பு பைகளை மட்டும் இறக்க மாட்டாங்க. அதுல என்ன இருக்குனு கேட்டப்போ, போர்ல சிதறிப்போன ராணுவ வீரர்களின் உடல் பாகங்கள் இருக்குனு சொன்னாங்க. போரோட கொடூர முகத்தை நான் அப்போதான் பார்த்தேன்!

கடவுளைத் தேடி...

யெகோவாவின் சாட்சிகள் சொல்லிக்கொடுத்த பைபிள் விஷயங்களை பத்தி நான் சின்ன வயசுலயே கேள்விப்பட்டு இருக்கேன்

யெகோவாவின் சாட்சிகள் சொல்லிக்கொடுத்த பைபிள் விஷயங்களை பத்தி நான் சின்ன வயசுலயே கேள்விப்பட்டிருக்கேன். ஏன்னா, என்னோட அம்மாவுக்கு யெகோவாவின் சாட்சிகள் பைபிள் படிப்பு நடத்துனாங்க. அப்போ நானும் அவங்களோட உட்காருவேன். அவங்க சொன்ன விஷயங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, என் அம்மா ஞானஸ்நானம் எடுக்குற அளவுக்கு முன்னேறல. ஒரு நாள், என் அப்பாவோட (வளர்ப்பு தந்தை) நடந்துபோயிட்டு இருந்தப்போ ஒரு ராஜ்ய மன்றத்தை பார்த்தேன். “அது என்ன”னு அவர்கிட்ட கேட்டப்போ, “நீ அவங்களோட எந்த சகவாசமும் வைச்சிக்க கூடாது”னு சொன்னார். என் அப்பாவை ரொம்ப பிடிக்குங்கிறதால அவர் சொன்னத அப்படியே கேட்டேன். அதனால யெகோவாவின் சாட்சிகளோட எனக்கு எந்த தொடர்பும் இல்லாம போயிடுச்சு.

வியட்நாம்ல நடந்த சம்பவங்கள் என் நெஞ்சையே உருக்கிடுச்சி. அங்க இருந்து வந்ததுக்கு அப்புறம்தான் கடவுளை பத்தி தெரிஞ்சுக்கணும்னு ஏங்குனேன். அங்க நடக்குற கொடூரமான விஷயங்கள் யாருக்குமே தெரியலையானு யோசிச்சேன். ஒரு பாவமும் அறியாத குழந்தைகளைக்கூட அமெரிக்க ராணுவ வீரர்கள் சாகடிச்சதா செய்திகள் வெளிவந்தது. அவங்க ஈவிரக்கமே இல்லாதவங்கனு போராட்டக்காரர்கள் கோஷம் போட்டுட்டு போனது எனக்கு இன்னுங்கூட ஞாபகம் இருக்கு.

கடவுளை பத்தி தெரிஞ்சுக்கணுங்கிற ஏக்கத்துல நான் நிறைய சர்ச்சுகளுக்கு போனேன். ஆனா அங்க நடந்த விஷயங்களை பார்த்தப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. கடைசியா 1971 பிப்ரவரி மாசத்துல, ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்துக்கு போனேன். அது, ப்ளோரிடாவுல இருக்குற டெல்ரே பீச் என்ற இடத்துல இருந்தது.

பொதுப்பேச்சு முடியுற சமயத்துல அங்க போனதுனால காவற்கோபுர படிப்புக்குத்தான் இருக்க முடிஞ்சது. அப்போ, எதை பத்தி படிச்சோம்னு எனக்கு ஞாபகம் இல்லை. ஆனா, சின்ன பிள்ளைங்ககூட பைபிளை திறந்து வசனங்கள பார்த்தது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. நான் அங்க உட்கார்ந்து எல்லாத்தையும் அமைதியா கவனிச்சிட்டு இருந்தேன். நான் கிளம்புற சமயத்துல, சுமார் 80 வயசுல இருந்த சகோதரர் என்கிட்ட வந்து, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்தை கொடுத்தார். அவரோட பேர் ஜிம் கார்டனர். ‘பைபிள் படிப்பு படிக்க விருப்பமா’னு என்கிட்ட கேட்டார். அந்த வாரம் வியாழக்கிழமை காலையிலயே பைபிள் படிப்பு படிக்கலாம்னு நாங்க முடிவு செஞ்சோம்.

அந்த ஞாயிற்றுக்கிழமை ராத்திரி எனக்கு வேலை இருந்தது. நான் ப்ளோரிடாவுல, போக்கா ராட்டான்-ல இருந்த ஒரு ஆஸ்பத்திரியில, அவசர சிகிச்சை பிரிவுல வேலை செஞ்சிட்டு இருந்தேன். என்னோட வேலை, ராத்திரி 11 மணிக்கு ஆரம்பிச்சு காலையில 7 மணிக்கு முடியும். அன்னைக்கு ராத்திரி ரொம்ப வேலை இல்லாததுனால அந்த சகோதரர் கொடுத்த புத்தகத்தை படிச்சுட்டு இருந்தேன். அப்போ ஒரு சீனியர் நர்ஸ் என் கையில இருந்த புத்தகத்தை பிடுங்கி அதோட அட்டைய பார்த்துட்டு, “நீ ஒரு யெகோவாவின் சாட்சியா மாறிட மாட்டயில்ல?”னு கோபமா கேட்டாங்க. நான் அவங்க கையில இருந்த புத்தகத்தை பிடுங்கி, “நான் பாதிதான் படிச்சிருக்கேன், இருந்தாலும் ஒரு யெகோவாவின் சாட்சியா ஆகணும்னு நான் ஏற்கெனவே முடிவு பண்ணிட்டேன்”னு சொன்னேன். அவங்க போனதுக்கு அப்புறம் அந்த ராத்திரியே முழு புத்தகத்தையும் படிச்சு முடிச்சேன்.

எனக்கு பைபிள் படிப்பு எடுத்த சகோதரர் கார்டனர் பரலோக நம்பிக்கை உள்ளவர். அவருக்கு, சி. டி. ரஸலை நல்லா தெரியும்

அப்புறம் வியாழக்கிழமை காலையில நாங்க பைபிள் படிப்புக்காக உட்கார்ந்தப்போ சகோதரர் கார்டனர்கிட்ட, “இப்போ என்ன படிக்கப் போறோம்”னு கேட்டேன். “உங்ககிட்ட கொடுத்த புத்தகத்துல இருந்துதான்”னு அவர் சொன்னார். “நான்தான் அந்த புத்தகத்தை ஏற்கெனவே படிச்சிட்டேனே”னு சொன்னேன். அதுக்கு அவர், “பரவாயில்லை, நாம முதல் அதிகாரத்தை மட்டும் இப்போ படிக்கலாம்”னு சொன்னார். ஆனா அவரோட படிச்சதுக்கு அப்புறம்தான் நான் எவ்ளோ விஷயங்களை கவனிக்காம விட்டுட்டேன்னு தெரிஞ்சது! என் பைபிள்ல இருந்தே நிறைய வசனங்களை வாசிக்க சொன்னார். உண்மை கடவுளான யெகோவாவை பத்தி நான் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்க ஆரம்பிச்சேன். கடவுளை பத்தி தெரிஞ்சுக்கணுங்கிற என் ஏக்கம் கடைசியா நிறைவேறிடுச்சு. எனக்கு சகோதரர் கார்டனரை ரொம்ப பிடிக்கும். அவரை பாசமா ‘ஜிம்’னு கூப்பிடுவேன். அன்னைக்கு காலையிலயே நாங்க 3 அதிகாரங்களை படிச்சு முடிச்சோம். இப்படி ஒவ்வொரு வாரமும் 3 அதிகாரங்களை படிச்சோம். பைபிள் படிப்பை நான் ரொம்ப ஆர்வமா படிச்சேன். சகோதரர் கார்டனருக்கு, சி. டி. ரஸலை நல்லா தெரிஞ்சிருந்தது. பரலோக நம்பிக்கை இருந்த சகோதரர் கார்டனரோட சேர்ந்து பைபிள் படிச்சது எனக்கு கிடைச்ச மிகப் பெரிய பாக்கியம்!

சில வாரத்துலயே நான் ஊழியத்துக்கு போக ஆரம்பிச்சிட்டேன். சகோதரர் கார்டனர்தான் எனக்கு நிறைய விஷயங்கள்ல உதவி செஞ்சார். வீட்டுக்கு வீடு ஊழியம் போகணும்னா எனக்கு ரொம்ப பயம். அதுக்கும் அவர்தான் உதவி செஞ்சார். (அப். 20:20) அவரோட ஊழியம் செஞ்சதுக்கு அப்புறம்தான் எனக்கு ஊழியம் செய்யணுங்கிற ஆர்வமே அதிகமாச்சு. ஊழியம் செய்றதை எனக்கு கிடைச்ச பெரிய பாக்கியமா இப்போவும் நினைக்கிறேன். யெகோவாவோட ‘சக வேலையாளா’ இருக்கிறதுல கிடைக்குற சந்தோஷத்தை வேற எதுவோடும் ஒப்பிட முடியாது.—1 கொ. 3:9.

யெகோவாவை நேசிக்க ஆரம்பிச்சேன்

எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயத்தை பத்தி இப்போ சொல்ல போறேன். யெகோவாவை நான் எப்படி நேசிக்க ஆரம்பிச்சேன் என்பதுதான் அது! (வெளி. 2:4) யெகோவா மேல எனக்கு இருந்த அந்த அன்புதான் நிறைய பிரச்சினைகளை சமாளிக்க உதவி செஞ்சுது. முக்கியமா, போர்னால என் மனசுல ஏற்பட்ட காயங்கள் மறையுறதுக்கு எனக்கு உதவியா இருந்தது.—ஏசா. 65:17.

போர்னால என் மனசுல ஏற்பட்ட காயங்கள் மறையுறதுக்கு யெகோவா மேல இருந்த அன்புதான் எனக்கு உதவுச்சு

ஜூலை 1971-ல யாங்கி ஸ்டேடியத்துல நடந்த “பரிசுத்தமான பெயர்” என்ற மாவட்ட மாநாட்டில நான் ஞானஸ்நானம் எடுத்தேன்

1971-ல ஒரு நாளை, என்னால மறக்கவே முடியாது. கொஞ்சம் நாளுக்கு முன்னாடிதான் எங்க அப்பா என்னை வீட்டைவிட்டு துரத்தினார். ஏன்னா நான் ஒரு யெகோவாவின் சாட்சியா ஆனது அவருக்கு சுத்தமா பிடிக்கல. அப்போ, என் கையில அவ்வளவு பணமும் இல்லை. நான் வேலை செஞ்ச ஆஸ்பத்திரியில ரெண்டு வாரத்துக்கு ஒருமுறைதான் சம்பளம் கொடுப்பாங்க. யெகோவாவை வணங்குறவங்க நேர்த்தியா உடுத்திட்டு போகணும். அதனால ஊழியத்துக்கு போட்டுக்குறதுக்காக துணிமணி வாங்கவே அந்த பணம் சரியா இருந்துச்சு. நான் வளர்ந்த ஊரான மிச்சிகன்ல கொஞ்சம் பணத்தை பேங்க்ல போட்டிருந்தேன். ஆனா, அது ப்ளோரிடாவுல இருந்து ரொம்ப தூரமா இருந்தது. அதனால என் கார்தான் எனக்கு வீடா ஆயிடுச்சு. கார்லயே தூங்குவேன், பெட்ரோல் நிலையத்துல இருந்த பாத்ரூம்ல குளிச்சு ‘ரெடி’ ஆவேன்.

ஒரு நாள், வேலை முடிஞ்சதுக்கு அப்புறம் வெளி ஊழிய கூட்டத்துக்காக ராஜ்ய மன்றத்துக்கு சீக்கிரமாவே போயிட்டேன். ராஜ்ய மன்றத்துக்கு பின்னாடி கொஞ்சம் மறைவா இருந்த ஒரு இடத்துல உட்கார்ந்துட்டு இருந்தேன். அப்போ திடீர்னு, வியட்நாம் போர்ல நடந்த விஷயங்கள் எல்லாம் என் ஞாபகத்துக்கு வந்தது. பிணம் எரியுற வாடை... ரத்த காடா இருந்த போர்க்களம்... எல்லாம் என் கண் முன்னாடி தெரிஞ்சது. உயிருக்கு போராடிட்டு இருந்த இளம் போர் வீரர்கள் என்கிட்ட, ‘நான் பிழைச்சிடுவேனா, பிழைச்சிடுவேனா?’னு அலற சத்தமும் என் காதுல கேட்டுட்டே இருந்தது. அவங்க சாகப் போறாங்கனு எனக்கு நல்லா தெரிஞ்சாலும் அதை என்னோட முகத்துல காட்டிக்காம அவங்ககிட்ட நான் ஆறுதலா பேசுனதும் என் ஞாபகத்துக்கு வந்தது. நான் எவ்ளோ முயற்சி செஞ்சும், அந்த காட்சிகள் என் கண்ணு முன்னாடி வந்துட்டே இருந்தது. அந்த நினைவுகள் என்னை அப்படியே துக்கத்துல ஆழ்த்திடுச்சு.

கஷ்டங்களும் சோதனைகளும் வரும்போது யெகோவா மேல இருக்குற அன்பு குறையாம இருக்க கடினமா முயற்சி செஞ்சேன்

அப்போ நான் யெகோவாகிட்ட உருக்கமா ஜெபம் செஞ்சேன், என் கண்ணுல தாரை தாரையா கண்ணீர் கொட்டுச்சு. (சங். 56:8) அந்த சமயத்துல, உயிர்த்தெழுதல் நம்பிக்கைய பத்தி நான் ஆழமா யோசிச்சேன். அப்போதான் ஒரு விஷயம் என் ஞாபகத்துக்கு வந்தது: உயிர்த்தெழுதல் மூலமா என் மனசுல பதிஞ்சிருக்கிற இந்த பயங்கரமான காட்சிகளை எல்லாம் யெகோவா துடைத்தழிக்க போறார். என்னோட மன வேதனையை மட்டுமில்ல எல்லாரோட மன வேதனையையும் நீக்கப் போறார். போர்ல செத்து போன எல்லாரையும் யெகோவா சீக்கிரத்துல உயிரோட எழுப்பப் போறார். அப்போ அவங்களும் யெகோவாவை பத்தி தெரிஞ்சுக்குவாங்க. (அப். 24:15) இதை எல்லாம் யோசிச்சப்போ, எனக்கு யெகோவா மேல அன்பு ஊற்றெடுக்க ஆரம்பிச்சது. சந்தோஷத்துல என் மனசு எல்லாம் நிறைஞ்சிடுச்சு. அந்த நாளை என்னால மறக்கவே முடியாது. அன்னைக்கு ஊற்றெடுத்த அந்த அன்பு கொஞ்சமும் குறையாம இருக்க நான் ரொம்ப முயற்சி செஞ்சேன். முக்கியமா, கஷ்டங்களும் சோதனைகளும் வரும்போது அந்த அன்பு குறையாம இருக்க கடினமா முயற்சி செஞ்சேன்.

யெகோவா என்னை உள்ளங்கையில வைச்சு தாங்குனார்

போர் சமயத்துல, பொதுவாவே மோசமான விஷயங்கள் எல்லாம் நடக்கும். அப்போ நானும் நிறைய தப்பு எல்லாம் செஞ்சிருக்கேன். ஆனா செஞ்ச தப்ப நினைச்சு சோர்ந்துடாம இருக்க, ரெண்டு வசனம் எனக்கு உதவியா இருந்துச்சு. ஒரு வசனம், வெளிப்படுத்துதல் 12:10, 11. நற்செய்திய பிரசங்கிக்கிறது மூலமா மட்டுமில்ல இயேசுவோட ரத்தத்தின் மூலமாவும் நம்மால சாத்தானை ஜெயிக்க முடியும்னு அந்த வசனம் சொல்லுது. இன்னொரு வசனம், கலாத்தியர் 2:20. இயேசு “எனக்காக” உயிர்விட்டார்... அவரோட ரத்தத்தின் மூலமாதான் யெகோவா என்னை பார்க்குறார்... என் பாவங்களை யெகோவா மன்னிச்சிட்டார்னு... எல்லாம் நம்புறதுக்கு இந்த வசனம் உதவியா இருந்தது. இதனால சுத்தமான மனசாட்சியோட என்னால இருக்க முடிஞ்சது. இரக்கமுள்ள கடவுளான யெகோவாவை பத்தி மத்தவங்களுக்கு சொல்ல என்னால முடிஞ்ச எல்லாத்தையும் செய்ய தூண்டியிருக்கு.—எபி. 9:14.

நான் கடந்து வந்த வாழ்க்கையை கொஞ்சம் யோசிச்சு பார்க்கும்போது யெகோவா என்னை எப்போவுமே அவரோட உள்ளங்கையில வைச்சு தாங்கியிருக்கார்னுதான் சொல்லணும். நான் கார்லயே தங்கியிருக்கேன்னு சகோதரர் கார்டனருக்கு தெரிஞ்சதும் ரூம்மை (room) வாடகைக்கு விடுற ஒரு சகோதரியை எனக்கு அறிமுகப்படுத்துனார். எனக்கு உதவி செய்ய அவங்க ரெண்டு பேரோட மனசையும் யெகோவாதான் தூண்டினார்னு நிச்சயமா சொல்வேன். யெகோவா ரொம்ப நல்லவர், ரொம்ப அன்பானவர்! அவருக்கு உண்மையா இருக்குறவங்கள அவர் ஒருநாளும் கைவிட மாட்டார்!

பக்திவைராக்கியம் இருந்தாலும் சாதுரியம் ரொம்ப முக்கியம்

1971 மே மாசம், ஒரு வேலையா நான் மிச்சிகனுக்கு போக வேண்டியிருந்தது. போற வழியில எல்லாம் நற்செய்திய சொல்றதுக்காக என் வண்டியில பத்திரிகைகளை நிரப்பிட்டு போனேன். நான் பாதி தூரம்கூட போகலை, அதுக்குள்ள என் வண்டியில இருந்த பத்திரிகைகளை எல்லாம் கொடுத்து முடிச்சிட்டேன். போற வழியில எல்லாம் பேசுனேன். சிறைச்சாலையில இருக்கிறவங்ககிட்ட நற்செய்திய சொன்னேன். பொது கழிப்பிடங்கள்லகூட துண்டுபிரதிகளை கொடுத்தேன். அந்த சமயத்துல, நான் தூவுன சத்திய விதைகள் எங்கயாவது முளைச்சிருக்குமானு இப்போகூட யோசிப்பேன்.—1 கொ. 3:6, 7.

சத்தியம் படிச்ச புதுசுல மத்தவங்ககிட்ட நற்செய்திய பத்தி பக்குவமா எடுத்து சொல்லணும்னு எனக்கு தெரியாது. அதுவும் என் வீட்டுல இருக்கிறவங்ககிட்ட பேசும்போது சொல்லவே வேண்டாம், எல்லாத்தையும் பட்டுபட்டுனு பேசிடுவேன். யெகோவா மேல எனக்கு அந்தளவு அன்பு இருந்ததுனால அவரை பத்தி ரொம்ப தைரியமா பேசுவேன், அதேசமயம் நேரடியாவும் பேசிடுவேன். என்னோட அண்ணன் ஜானையும் ரானையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால, அவங்ககிட்ட சத்தியத்தை பத்தி வலுகட்டாயமா சொன்னேன். ஆனா, அப்படி நடந்துக்கிட்டதுக்காக அப்புறமா அவங்க ரெண்டு பேர்கிட்டயும் மன்னிப்பு கேட்டேன். அவங்களும் சத்தியத்தை ஏத்துக்கணும்னு இன்னைக்கு வரைக்கும் ஜெபம் செய்றேன். அந்த சமயத்துல இருந்து, சத்தியத்தை பத்தி மத்தவங்ககிட்ட எப்படி சாதுரியமா பேசணும்னு கத்துக்கிட்டேன்.—கொலோ. 4:6.

என் அன்புக்குரியவர்கள்...

யெகோவாவுக்கு அடுத்ததா நான் நேசிக்கிற இன்னும் சிலர பத்தியும் சொல்ல ஆசைப்படுறேன். என் அன்பு மனைவி சூசனை நான் உயிரா நேசிக்கிறேன். யெகோவாவுக்கு சேவை செய்ய எனக்கு ஒரு துணை இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சப்போதான் நான் சூசனை பார்த்தேன். யெகோவாவோட அவளுக்கு நெருக்கமான பந்தம் இருக்கு. நான் அவளை காதலிச்சிட்டு இருந்த சமயத்துல ஒரு நாள் அவளோட வீட்டுக்கு போனேன். அப்போ அவள் கையில காவற்கோபுர பத்திரிகையும் பைபிளும் இருந்துச்சு. அந்த பத்திரிகையில இருந்த இதர கட்டுரையை அவள் படிச்சிட்டு இருந்தாலும் அதுல இருந்த வசனங்களைகூட பைபிள்ல பார்த்துட்டு இருந்தா. அவள் யெகோவாவையும் பைபிள் சத்தியத்தையும் எந்தளவு நேசிக்கிறானு அப்போ தெரிஞ்சிக்கிட்டேன். டிசம்பர் 1971-ல எங்களுக்கு கல்யாணம் நடந்துச்சு. அன்னையில இருந்து இன்னைக்கு வரைக்கும் அவள் எனக்கு எல்லா விஷயத்துலயும் பக்கபலமா இருந்திருக்கா. அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும், இருந்தாலும் என்னைவிட யெகோவாவைதான் அவளுக்கு ரொம்ப பிடிக்கும்! அவகிட்ட எனக்கு பிடிச்ச விஷயமே இதுதான்.

நான், என் மனைவி சூசன், மகன்கள் பவுலும் ஜெசியும்

எங்களுக்கு முத்தான ரெண்டு பசங்க பிறந்தாங்க. ஒருத்தன் பேர் ஜெசி, இன்னொருத்தன் பேர் பவுல். யெகோவா அவங்களோட எப்போவுமே இருந்திருக்கார். (1 சா. 3:19) ஏன்னா, அவங்க சத்தியத்துல நல்லா முன்னேறுனாங்க. யெகோவாவோட நல்ல பந்தத்தை வளர்த்துக்கிட்டாங்க. அவங்களை எங்க பிள்ளைங்கனு சொல்லிக்கிறதுல எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு. அவங்க ரெண்டு பேரும் 20 வருஷத்துக்கு மேல முழு நேர ஊழியம் செய்றாங்க. இதுக்கு காரணம், யெகோவா மேல அவங்களுக்கு இருக்கிற ஆழமான அன்புதான். எனக்கு அருமையான 2 மருமகள்களும் கிடைச்சிருக்காங்க. அவங்க பேர் ஸ்டெஃபானி, ராக்கல். அவங்க என்னோட மருமகள்கள் இல்ல, மகள்கள்! அவங்க ரெண்டு பேருமே யெகோவாவை முழு இருதயத்தோடு நேசிக்கிறாங்க.—எபே. 6:6.

அதிகம் ஊழியம் செய்யப்படாத இடங்கள்ல குடும்பமா ஊழியம் செஞ்சோம்

நான் ஞானஸ்நானம் எடுத்ததுக்கு அப்புறம் 16 வருஷம் ரோட் தீவுல சேவை செஞ்சேன். அங்க எனக்கு நிறைய நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க. அருமையான மூப்பர்களோட சேவை செஞ்ச நினைவுகளை என்னால மறக்கவே முடியாது. அதோட நிறைய பயணக் கண்காணிகளோட பழகுற வாய்ப்பும் எனக்கு கிடைச்சது. அவங்ககிட்ட இருந்து நான் நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன். யெகோவா மேல ஆழமான அன்பு வைச்சிருந்த அந்த சகோதரர்களோட பழகுனது எனக்கு கிடைச்ச பெரிய பாக்கியம். 1987-ல நாங்க குடும்பமா வடக்கு கரோலினாவுக்கு மாறிப்போனோம். அங்க தேவை அதிகமுள்ள இடத்துல சேவை செஞ்சோம். அங்கேயும் நிறைய நல்ல நண்பர்கள் எங்களுக்கு கிடைச்சாங்க. * (அடிக்குறிப்பை பாருங்க.)

பயணக் கண்காணியா சேவை செஞ்ச சமயத்துல வெளி ஊழிய கூட்டத்த நடத்திட்டு இருந்தப்போ

ஆகஸ்ட் 2002-ல, அமெரிக்காவுல இருக்குற பேட்டர்ஸன் பெத்தேல்ல சேவை செய்ய என்னையும் சூசனையும் கூப்பிட்டாங்க. அங்க நான் ஊழிய இலாக்காவுல வேலை செஞ்சேன். சூசன் லாண்டரியில (சலவை) வேலை செஞ்சா. அவளுக்கு அந்த வேலை ரொம்ப பிடிச்சிருந்தது. அதுக்கு அப்புறம் 2005-ல, ஆளும் குழு அங்கத்தினரா சேவை செய்ற பாக்கியம் எனக்கு கிடைச்சது. அந்த வேலையை செய்ய எனக்கு தகுதியில்லாத மாதிரி உணர்ந்தேன். சூசன்கிட்ட, ‘அது ரொம்ப பொறுப்பான வேலை, நிறைய ஊருக்கு போக வேண்டியிருக்கும், நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கும்’னு சொன்னப்போ அவள் ரொம்ப யோசிச்சா. விமானத்துல பயணம் செய்யணும்னா சூசனுக்கு கொஞ்சம் கஷ்டம், ஆனா நாங்க விமானத்துலதான் நிறைய பயணம் செய்றோம். மத்த ஆளும் குழு அங்கத்தினர்களின் மனைவிகள் சொன்ன அன்பான ஆலோசனை அவளுக்கு ரொம்ப உதவியா இருந்திருக்கிறதா சூசன் சொல்றா. அதனால எல்லா விஷயத்துலயும் எனக்கு பக்கபலமா இருக்க அவள் கடினமா முயற்சி செய்றா. நான் அவளை நேசிக்கிறதுக்கு இதுவும் ஒரு காரணம்!

என்னோட ஆஃபிஸ்ல நிறைய பேரோட ஃபோட்டோவை வைச்சிருக்கேன். என் வாழ்க்கைய நான் எவ்ளோ சந்தோஷமா வாழ்ந்திருக்கேன் என்பதை ஒவ்வொரு ஃபோட்டோவும் எனக்கு ஞாபகப்படுத்தும். யெகோவா மேல நான் ஆரம்பத்துல வைச்சிருந்த அன்பு குறையாம இருக்க இன்னைக்கு வரைக்கும் முயற்சி செய்றேன். அதனால எனக்கு கிடைச்ச ஆசீர்வாதங்களுக்கு அளவே இல்லை!

குடும்பத்தோட ஒண்ணா இருக்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்

^ பாரா. 31 சகோதரர் ஆன்டனி மாரிஸோட முழு நேர ஊழியத்தை பத்தி தெரிஞ்சுக்க, மார்ச் 15, 2006 காவற்கோபுரத்துல பக்கம் 26-ஐ பாருங்க.