கடவுள் எங்கே?
கடவுள் எங்கே?
தேதி: செப்டம்பர் 11, 2001. நேரம்: காலை 8:46. இடம்: நியு யார்க் நகரம். உலக வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரத்தின் மீது விமானம் மோதியது. இது தீவிரவாதிகளுடைய தொடர் தாக்குதல்களின் ஆரம்பமே. அடுத்த 102 நிமிடங்களில் சுமார் 3,000 பேர் பலி.
டிசம்பர் 26, 2004
இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியால் (ரிக்டர் அளவுகோலில் 9.0) எழும்பிய ராட்சத அலைகள் 11 நாடுகளை உலுக்கின; சுமார் 5,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆப்பிரிக்காவையும் அது விட்டுவைக்கவில்லை. ஒரே நாளில் 1,50,000 பேர் மாண்டு போனார்கள்/காணாமல் போனார்கள். 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடு இழந்தார்கள்.
ஆகஸ்ட் 1, 2009: 42 வயதுடைய ஒருவர் தன் 5 வயது மகனுடன் ஜெட்-படகில் போனபோது அவர்களுடைய படகு துறைமுகத்தில் மோதி சுக்குநூறானது. சம்பவ இடத்திலேயே அப்பா உயிரிழந்தார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மகன் அடுத்த நாள் இறந்துவிட்டான். “அவன் எப்படியாவது பிழைத்துவிடுவான் என்று நினைத்தோம்” என புலம்பினார் துயரத்தில் துவண்டிருந்த உறவினர் ஒருவர்.
தீவிரவாதிகளின் தாக்குதல்கள், இயற்கை பேரழிவுகள் பற்றியெல்லாம் வாசிக்கையில் அல்லது உங்கள் வாழ்க்கையில் ஒரு கோர சம்பவத்தை அனுபவிக்கையில், ‘கடவுளுக்கு கண்ணே இல்லையா? நம்மை ஏன் கைவிட்டுவிட்டார்?’ என யோசிக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள், பைபிள் நம் மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது. அதைத் தெரிந்துகொள்ள அடுத்தப் பக்கத்துக்குப் புரட்டுங்கள். (w10-E 05/01)
[பக்கம் 3-ன் படங்களுக்கான நன்றி]
© Dieter Telemans/Panos Pictures
PRAKASH SINGH/AFP/Getty Images
© Dieter Telemans/Panos Pictures