Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அட்டைப்படக் கட்டுரை | நான் கடவுளுடைய நண்பனாக முடியுமா?

கடவுளுடைய நண்பனாக முடியுமா?

கடவுளுடைய நண்பனாக முடியுமா?

“கடவுளுக்கு நண்பரா இருந்தா நாம எதுக்கும் பயப்பட மாட்டோம். என்ன ஆனாலும் ‘கடவுள் இருக்கார், அவர் பார்த்துப்பார்’னு நிம்மதியா இருப்போம்.”—ஆப்பிரிக்கால இருக்கிற கிறிஸ்டபர் என்ற இளைஞர் இப்படி சொன்னார்.

“எந்தக் கஷ்டம் வந்தாலும் கடவுள் நம்ம கூடவே இருப்பார். நாம நினைச்சதைவிட அதிகமா உதவி செய்வார்.”—அமெரிக்கால இருக்கிற 13 வயசு ஹானா இப்படி சொன்னார்.

“கடவுளுடைய நண்பரா இருக்கிறது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா!” —மேற்கு இந்திய தீவுகள்ல இருக்கிற ஜீனா இப்படி சொன்னார் (சுமார் 45 வயது).

கிறிஸ்டபர், ஹானா, ஜீனா மாதிரியே நிறைய பேர் சொல்றாங்க. கடவுளுடைய நண்பரா இருக்கிறத நினைச்சு சந்தோஷப்படுறாங்க. நீங்க கடவுளோட நண்பரா? நாமெல்லாம் கடவுளுக்கு நண்பரா இருக்க முடியுமா? ‘கடவுள் எவ்ளோ பெரியவர்; ஒரு சாதாரண மனுஷன் எப்படி அவருக்கு நண்பரா இருக்க முடியும்’னு யோசிக்கிறீங்களா? கடவுளோட நண்பரா இருக்கிறதுக்கு என்ன செய்யனும்?

கடவுளுடைய நண்பரா ஆக முடியும்!

நாம கடவுளுடைய நண்பரா ஆக முடியும்னு பைபிள் சொல்லுது. ஆபிரகாம் என்பவரை, கடவுள் தன்னோட ‘சிநேகிதன்’னு சொன்னார். (ஏசாயா 41:8) “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்”னு பைபிள் சொல்லுது. (யாக்கோபு 4:8) அப்படினா, நாம எல்லாருமே கடவுளோட நண்பரா இருக்க முடியும்! ஆனா, கடவுள பார்க்க முடியாதே? அப்புறம் எப்படி அவர்கிட்ட “நெருங்கி” போக முடியும், அவரோட நண்பராக முடியும்?

இதை தெரிஞ்சிக்க, ஒரு உதாரணத்த பார்க்கலாம். நாம ஒருத்தர்கிட்ட பழகுறதுக்கு முன்னாடி அவரோட பேரை கேட்போம். அதுக்கப்புறம் அவரோட பேசி, பழகுவோம். போகப்போக நமக்கு பிடிச்சத அவர் செய்வார், அவருக்கு பிடிச்சத நாம செய்வோம். இப்படி, நாம அவரோட நெருங்கிய நண்பராயிடுவோம். இதே மாதிரி செஞ்சாதான் கடவுளோட நண்பராவும் ஆக முடியும். எப்படினு தெரிஞ்சிக்க அடுத்தடுத்த பக்கங்கள படிங்க.(w14-E 12/01)