அட்டைப்படக் கட்டுரை | ஊழல் இல்லாத அரசாங்கம் வருமா?
கடவுளுடைய அரசாங்கம் —ஊழல் இல்லாத அரசாங்கம்
“எல்லா மனுஷங்களும் தப்பு செய்றவங்கதான். அவங்கள்ல ஒருத்தர் அரசாங்க அதிகாரியா வந்தா ஊழல்தான் செய்வாங்க”னு நிகாராகுவா அரசாங்கத்தோட தலைமை ஆடிட்டரா இருந்தவர் சொன்னார். அதனாலதான் அரசாங்கத்தில நடக்கிற ஊழலை ஒழிக்கவே முடியாதுனு அவர் நினைக்கிறார்.
மனித சமுதாயம் முழுசும் ஊழல் நிறைஞ்சதுதான். அப்போ, மனுஷங்க ஆட்சி செய்ற அரசாங்கமும் அப்படிதானே இருக்கும்! அப்படினா, எந்த அரசாங்கத்தால ஊழலை ஒழிக்க முடியும்? கடவுளுடைய அரசாங்கத்தால மட்டும்தான் ஊழலை ஒழிக்க முடியும்னு பைபிள் சொல்லுது. அந்த அரசாங்கம் சீக்கிரம் வரணும்னு இயேசுகூட ஜெபம் செய்ய சொன்னார்.—மத்தேயு 6: 9, 10.
கடவுளுடைய அரசாங்கம் பரலோகத்தில இருந்து ஆட்சி செய்யும். அது சீக்கிரமா எல்லா மனித அரசாங்கத்தையும் நீக்கிட்டு முழு பூமியையும் ஆட்சி செய்யும். (சங்கீதம் 2:8, 9; வெளிப்படுத்துதல் 16:14; 19:19-21) அந்த அரசாங்கம் நமக்கு நிறைய நல்லது செய்யப்போகுது; முக்கியமா, ஊழலை நீக்கப்போகுது. அதை நம்புறதுக்கான ஆறு காரணங்களை இப்போ பார்க்கலாம்.
1. பணம்
பிரச்சினை: மக்கள் கட்டுற வரிப் பணத்தை வெச்சுதான் அரசாங்கமே நடக்குது. அரசாங்கத்தில இப்படி அதிகமா பணம் புழங்குறதை பார்க்கும்போது, அதை அதிகாரிகள் எடுத்துக்கணும்னு நினைக்கிறாங்க. அரசாங்கத்துக்கு கட்ட வேண்டிய வரியை குறைக்க சில மக்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கிறாங்க. இதனால அரசாங்கத்துக்கு சேர வேண்டிய பணம் கிடைக்காம போகுது. அதை சரிசெய்றதுக்கு அரசாங்கம் வரியை ஏத்துறாங்க. பணம் இன்னும் அதிகமா புழங்குறதை பார்க்கிற அதிகாரிகள் இன்னும் அதிகமா கொள்ளை அடிக்கிறாங்க. இது ஒரு முடிவே இல்லாம போயிட்டு இருக்கு. நேர்மையா இருக்கணும்னு நினைக்கிற பொது மக்கள் இதனால ரொம்ப பாதிக்கப்படுறாங்க.
* பார்த்துக்குவார். ஏன்னா, அவர் எல்லாருக்கும் கொடுக்கிறதுல வள்ளல். அவருக்கு “மகா வல்லமை” இருக்கு.—வெளிப்படுத்துதல் 11:15; ஏசாயா 40:26; சங்கீதம் 145:16.
தீர்வு: கடவுளுடைய அரசாங்கம் செயல்படுறதுக்கு மக்களோட வரிப் பணம் தேவையில்லை. அதனால, மக்கள் வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய எல்லா தேவைகளையும் யெகோவா2. ஆட்சி செய்றவர்
பிரச்சினை: “முதல்ல, உயர் அதிகாரிகள்” செய்ற ஊழலை தடுத்து நிறுத்த அரசாங்கம் முயற்சி செய்யணும்னு, போன கட்டுரையில பார்த்த சூசன் ரோஸ்-ஆக்கர்மேன் சொல்றாங்க. போலீசும் கஸ்டம்ஸ் அதிகாரிகளும் செய்ற ஊழலை மட்டும் தடுத்து நிறுத்திட்டு உயர் அதிகாரிகள் செய்ற ஊழலை அரசாங்கம் கண்டுக்காம விட்டுடுறாங்க. இதனாலதான் மக்களுக்கு அரசாங்கத்தின் மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு. ரொம்ப நேர்மையா ஆட்சி செய்யணும்னு நினைக்கிறவங்ககூட சில சமயம் தப்பு செய்ய வாய்ப்பு இருக்கு. ஏன்னா, “பாவமே செய்யாமல் எப்பொழுதும் நல்லதையே செய்துகொண்டிருக்கிற மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை”னு பைபிள் சொல்லுது.—பிரசங்கி 7:20, ஈஸி டு ரீட் வர்ஷன்.
மிகப் பெரிய லஞ்சத்தையே இயேசு வாங்க மறுத்துட்டார்
தீர்வு: கடவுளுடைய அரசாங்கத்தில ஆட்சி செய்ய இயேசு கிறிஸ்துவை கடவுள் தேர்ந்தெடுத்திருக்கிறார். இயேசு கிறிஸ்து மனுஷங்க மாதிரி தப்பு செய்ய மாட்டார். யாராவது அவரை தப்பு செய்ய வைக்கணும்னு நினைச்சாகூட அவர் தப்பு செய்ய மாட்டார். ஒருசமயம் என்ன நடந்ததுனு கவனிங்க. இந்த உலகத்த ஆட்சி செய்ற பிசாசு, “உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவற்றின் மகத்துவங்களையும்” இயேசுவுக்கே கொடுக்குறதா சொன்னான். அதுக்காக இயேசு அவனை ஒரே ஒரு தடவை வணங்கணும்னு சொன்னான். இதைவிட பெரிய லஞ்சம் இந்த உலகத்திலயே இல்லை! ஆனா இயேசு அதை வாங்க மறுத்துட்டார். (மத்தேயு 4:8-10; யோவான் 14:30) அவர் சாகுற நிலைமையில இருந்தப்போ என்ன நடந்ததுனு பாருங்க. அவருடைய வலியை மரத்துப்போக வைக்க சிலர் போதைப் பொருளை கொடுத்தாங்க. ஒருவேளை அதை சாப்பிட்டு கடவுளுக்கு விரோதமா ஏதாவது செஞ்சிடுவோமோனு நினைச்சு இயேசு அதையும் வாங்க மறுத்துட்டார். (மத்தேயு 27:34) இப்போ, அவர் உயிரோட எழுப்பப்பட்டு பரலோகத்தில இருக்கிறார். எந்த தவறும் செய்யாம அவரால ஆட்சி செய்ய முடியும்னு நிரூபிச்சு காட்டியிருக்கார்.—பிலிப்பியர் 2:8-11.
3. நிரந்தர ஆட்சி
பிரச்சினை: நிறைய நாட்டுல, தேர்தல் நடத்தி ஆட்சி செய்றவங்களை தேர்ந்தெடுக்கிறாங்க. இதனால ஊழல் செய்ற அரசியல்வாதிகளை ஆட்சிக்கு வராம தடுக்க முடியுது. ஆனா, பிரச்சாரம் செய்யும்போதும் தேர்தல் நடக்கும்போதும் நிறைய சமயம் ஊழல் நடக்குது. இந்த மாதிரி ஊழல்கள் பணக்கார நாடுகள்லயும் நடக்குது. எந்த அரசியல்வாதி ஆட்சிக்கு வரணும்னு பணக்காரங்க நினைக்கிறாங்களோ, அவங்களை ஜெயிக்க வைக்க முயற்சி செய்றாங்க. அதுக்கான செலவுகளுக்கு பணம் கொடுக்க தயாரா இருக்காங்க.
இந்த மாதிரி செல்வாக்கை வெச்சு ஒருத்தர் ஆட்சிக்கு வந்தா, அவருடைய ஆட்சி “முறையான ஆட்சியாவும் இருக்காது, நல்ல ஆட்சியாவும் இருக்காது. மக்களுக்கு அரசாங்கத்தின் மேல இருக்கிற நம்பிக்கையும் போயிடும்”னு அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜான் பால் ஸ்டீவன்ஸ் சொல்றார். இந்த மாதிரி நடக்கிறதுனாலதான் அரசியல் கட்சிகள் ஊழலுக்கு பேர்போனதா இருக்குனு நிறைய மக்கள் நினைக்கிறாங்க.
தானியேல் 7:13, 14) இந்த அரசாங்கம் மக்களுக்கு செய்ற நன்மைகளை யாராலும் தடுக்க முடியாது.
தீர்வு: கடவுளுடைய அரசாங்கத்தில ஆட்சி செய்றவரை கடவுள்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். அதனால தேர்தலோ பிரச்சாரமோ இருக்காது, அதுல நடக்கிற ஊழலும் இருக்காது. இந்த அரசாங்கம் வேண்டாம்னு யாரும் நீக்க முடியாது. ஏன்னா, இந்த அரசாங்கம் நிரந்தரமா எப்பவும் ஆட்சி செய்யும். (4. சட்டங்கள்
பிரச்சினை: புதுப் புது சட்டங்களை போட்டா, ஊழலை தடுக்க முடியும்னு சிலர் நினைக்கலாம். ஆனா, சட்டங்கள் அதிகமாகும்போது ஊழலும் அதிகமாகுதுனு நிபுணர்கள் சொல்றாங்க. ஊழலை எதிர்க்கிறதுக்கான சட்டங்களை அமல்படுத்துறதுக்கு நிறைய பணம் தேவைப்படுது. அப்படி செஞ்சும்கூட ஊழலை ஒழிக்க முடியாம போகுது.
தீர்வு: மனுஷங்க போடுற சட்டங்களுக்கும் கடவுள் கொடுக்கிற சட்டங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ‘இதை செய், இதை செய்யாத’னு கடவுள் ஒரு பெரிய லிஸ்ட் போடுறதில்ல. அதுக்கு பதிலா நாம செய்ய வேண்டிய விஷயங்களை ஒரு வசனத்தில அழகா சொல்றார். “மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்”னு அந்த வசனம் சொல்லுது. (மத்தேயு 7:12) அதுமட்டுமில்ல, “உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் சக மனிதர்மீதும் அன்பு காட்ட வேண்டும்”னு பைபிள் சொல்லுது. (மத்தேயு 22:39) இதுலயிருந்து நாம ஒரு முக்கியமான விஷயத்தை தெரிஞ்சுக்கிறோம். கடவுள் கொடுக்கிற சட்டங்களை நாம கடமைக்காக கடைப்பிடிக்க கூடாது; அதை மனசார கடைப்பிடிக்கணும்னு கடவுள் விரும்புறார். நாம கடவுளுடைய சட்டங்களுக்கு மனசார கீழ்ப்படிறோமா இல்லையானு அவரால பார்க்க முடியும்; அப்படி கீழ்ப்படியாதவங்களை கண்டிக்கவும் முடியும்.—1 சாமுவேல் 16:7.
5. போதனை
பிரச்சினை: மனுஷங்க பேராசையோடும் சுயநலத்தோடும் நடந்துக்கிறதுனாலதான் இன்னைக்கு ஊழல் நடக்குது. சியோல் நகரத்துல இருந்த ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் இடிஞ்சு விழுந்ததை பத்தி போன கட்டுரையில பார்த்தோம். தரமான பொருள்களை பயன்படுத்தி அந்த கட்டிடத்தை கட்டுறதைவிட மட்டமான பொருள்களை பயன்படுத்துனா லாபம் கிடைக்கும்னு நினைச்சு, அந்த காண்ட்ராக்டர்கள் (contractors) அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாங்க. அதிகாரிகளும் லஞ்சம் வாங்கிட்டு அதை கண்டுக்காம விட்டுட்டாங்க.
ஊழலை ஒழிக்கணும்னா, முதல்ல மனுஷங்க மனசுல ஒட்டியிருக்கிற பேராசை, சுயநலம் போன்ற விஷத்தை எடுத்து
போடணும். இந்த மாதிரி கெட்ட குணங்களை மாத்திக்கிறதுக்கு மக்களுக்கு அரசாங்கம் சொல்லித்தரணும். ஆனா, இதை செய்றதுக்கு அரசாங்கத்துக்கு விருப்பமும் இல்ல, திறமையும் இல்ல.தீர்வு: ஊழல் செய்றதுக்கு காரணமா இருக்கிற பேராசை, சுயநலம் போன்ற கெட்ட குணங்களை எப்படி மாத்திக்கணும்னு கடவுளுடைய அரசாங்கம் சொல்லித்தருது. * இருக்கிறதை வெச்சு திருப்தியா வாழ்றதுக்கும் மக்கள் மேல அன்பு காட்டுறதுக்கும் அந்த அரசாங்கம் சொல்லிக்கொடுக்குது.—எபேசியர் 4:23; பிலிப்பியர் 2:4; 1 தீமோத்தேயு 6:6.
6. குடிமக்கள்
பிரச்சினை: சிலர் என்னதான் நல்ல சூழல்ல வளர்ந்திருந்தாலும், நல்லா படிச்சவங்களா இருந்தாலும் வேணும்னே தப்பு செய்வாங்க, ஊழல் பண்ணுவாங்க. அதனாலதான் எந்த அரசாங்கத்தாலயும் ஊழலை ஒழிக்கவே முடியாதுனு நிபுணர்கள் சொல்றாங்க. ஊழல் செய்றதை மனுஷங்களால ஓரளவு தடுத்து நிறுத்த முடியுமே தவிர அதை ஒரேடியா ஒழிக்க முடியாது.
தீர்வு: ஊழலை குறைக்கணும்னா மக்கள் “உண்மையா, நேர்மையா, பொறுப்பா” நடந்துக்க முயற்சி செய்யணும்; அதுக்கு அரசாங்கங்கள் உதவி செய்யணும்னு, ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாட்டு மாநாட்டுல சொன்னாங்க. கடவுளுடைய அரசாங்கத்தில இந்த மாதிரி குணங்களை வளர்த்துக்க முயற்சி செஞ்சா மட்டும் போதாது, மக்களுக்கு இந்த மாதிரி குணங்கள் கண்டிப்பா இருக்கணும்னு கடவுள் எதிர்பார்க்கிறார். ‘பேராசைக்காரர்களும்’ ‘பொய் பேசுகிறவர்களும்’ அந்த அரசாங்கத்தில வாழ முடியாதுனு பைபிள் திட்டவட்டமா சொல்லுது.—1 கொரிந்தியர் 6:9-11; வெளிப்படுத்துதல் 21:8.
கடவுள் சொல்ற விஷயங்களை கடைப்பிடிக்கிறது ரொம்ப கஷ்டமான விஷயமில்ல. அதை கடைப்பிடிக்க முடியும்னு இயேசுவுடைய சீடர்கள் நிரூபிச்சு காட்டுனாங்க. உதாரணத்துக்கு, சீமோன் என்ற ஒருத்தர் இயேசுவுடைய சீடர்கள்கிட்ட இருந்து ஒரு வரம் கிடைக்கணும்னு எதிர்பார்த்து அவங்களுக்கு லஞ்சம் கொடுத்தார். சீடர்கள் லஞ்சம் வாங்க மறுத்துட்டாங்க. “உன் துர்குணத்தைவிட்டு மனந்திரும்பு”னு அவர்கிட்ட சொன்னாங்க. (அப்போஸ்தலர் 8:18-24) அதனால சீமோன், செஞ்ச தப்பை உணர்ந்தார். தான் திருந்தணும்னு நினைச்சு, சீடர்களை ஜெபம் செய்ய சொன்னார்.
நீங்களும் கடவுளுடைய அரசாங்கத்தோட குடிமக்களா ஆக முடியும்
நீங்க எந்த நாட்டுல வாழ்ந்தாலும் சரி, உங்களால கடவுளுடைய அரசாங்கத்தோட குடிமக்களா ஆக முடியும். (அப்போஸ்தலர் 10:34, 35) கடவுளுடைய அரசாங்கத்தோட குடிமக்களா இருக்கிறதுக்கு என்ன செய்யணும்னு, யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு சொல்லித் தருவாங்க. உலகம் முழுசும் நிறைய பேருக்கு யெகோவாவின் சாட்சிகள் இப்படி சொல்லித்தராங்க. வாரத்துல 10 நிமிஷம் படிச்சா கூட, நீங்க நிறைய தெரிஞ்சுக்கலாம். முக்கியமா, “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை” தெரிஞ்சுக்கலாம். (லூக்கா 4:43) கடவுள் ஊழலை எப்படி ஒழிக்க போறார்னும் தெரிஞ்சுக்கலாம். இதெல்லாம் நீங்க தெரிஞ்சுக்க யெகோவாவின் சாட்சிகள்கிட்ட பேசுங்க. இல்லனா, www.dan124.com என்ற வெப்சைட்டை பாருங்க. ▪ (w15-E 01/01)
^ பாரா. 8 யெகோவா என்பது பைபிளில் கடவுளுடைய பெயர்.
^ பாரா. 22 “நேர்மையாக வாழ முடியுமா?” என்ற கட்டுரையை, ஏப்ரல் – ஜூன் 2012, விழித்தெழு! பத்திரிகையில பாருங்க.