அட்டைப்படக் கட்டுரை | உலக அழிவு சீக்கிரத்தில்!
உங்களால் அழிவிலிருந்து தப்பிக்க முடியும்
இந்த உலகத்திற்கு அழிவு வரும் என்று பைபிள் தெளிவாக சொல்கிறது. “அப்போது மிகுந்த உபத்திரவம் உண்டாகும்; அப்படிப்பட்ட உபத்திரவம் உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்ததில்லை, . . . சொல்லப்போனால், அந்நாட்கள் குறைக்கப்படாவிட்டால் யாருமே தப்பிப்பிழைக்க மாட்டார்கள்.” (மத்தேயு 24:21, 22) ஆனால் இந்த அழிவிலிருந்து நிறைய பேர் தப்பிப்பார்கள் என்று பைபிள் நம்பிக்கை அளிக்கிறது. ‘இந்த உலகம் ஒழிந்துபோகும்; கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் நிலைத்திருப்பான்.’—1 யோவான் 2:17.
இந்த அழிவிலிருந்து தப்பித்து ‘என்றென்றும் நிலைத்திருக்க’ வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? உயிர் வாழ்வதற்கு தேவையான பொருட்களை இப்போதே சேர்த்து வைக்க வேண்டுமா? இல்லை! கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது இதுதான்: “இவையெல்லாம் அழியப்போவதால், நீங்கள் எந்தளவுக்குப் பரிசுத்த நடத்தை உள்ளவர்களாகவும் தேவபக்திக்குரிய செயல்களைச் செய்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்! அதேசமயத்தில், யெகோவாவின் நாளை நாம் எப்போதும் மனதில் வைத்து” வாழ வேண்டும். (2 பேதுரு 3:10-12) மனித ஆட்சியாளர்களையும், கடவுளுடைய ஆட்சியை ஏற்றுக்கொள்ளாமல் மனித ஆட்சியை ஆதரிப்பவர்களையும் கடவுள் அழிப்பார் என்று இந்த வசனம் சொல்கிறது. அதனால் நாம் என்னதான் பொருள்களை சேர்த்து வைத்தாலும், உலகம் அழியும்போது அது நம்மை காப்பாற்றாது.
யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்டு அவருக்கு பிடித்தமாதிரி வாழ்ந்தால்தான் அந்த அழிவிலிருந்து தப்பிக்க முடியும். (செப்பனியா 2:3) இந்த உலகம் சீக்கிரம் அழியப்போகிறது என்பதற்கு என்னதான் ஆதாரம் இருந்தாலும் இன்று நிறைய பேர் அதை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களைப்போல் இல்லாமல், “யெகோவாவின் நாளை நாம் எப்போதும் மனதில்” வைத்து வாழ வேண்டும். இதைப்பற்றி மேலும் அதிகமாக தெரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். ▪ (w15-E 05/01)