இஸ்ரவேலும் அதன் சுற்றுப்புறங்களும்
இஸ்ரவேலும் அதன் சுற்றுப்புறங்களும்
‘மெசொப்பொத்தாமியாவில் உள்ள ஊர் என்கிற பட்டணத்தை விட்டு நான் உனக்கு காண்பிக்கிற தேசத்துக்கு போ’ என ஆபிரகாமிடம் யெகோவா சொன்னார். அந்தத் தேசத்தில் ஏற்கெனவே மக்கள் குடியிருந்தனர், அதைச் சுற்றிலும் பிற தேசத்தாரும் வாழ்ந்து வந்தனர்.—ஆதி 12:1-3; 15:17-21.
கடவுளுடைய ஜனங்கள் எகிப்தை விட்டு வந்தபோது, ‘மோவாபின் பராக்கிரமசாலிகள்’ போன்ற பல விரோதிகளோடு போரிட வேண்டியிருக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். (யாத் 15:14, 15) அமலேக்கியரும் மோவாபியரும் அம்மோனியரும் எமோரியரும் வாழ்ந்து வந்த பகுதிகள் வழியாகவே வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்கு இஸ்ரவேலர் பயணிக்க இருந்தனர். (எண் 21:11-13; உபா 2:17-33; 23:3, 4) கடவுள் வாக்குறுதி அளித்திருந்த தேசத்திலும் எதிரிகளான மற்ற ஜாதியாரை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
‘எண்ணிக்கையில் மிகுந்த மக்களாகிய’ ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு ஜாதிகளை இஸ்ரவேலர் ‘விரட்ட’ வேண்டுமென கடவுள் சொன்னார். அந்த ஜாதியினர் அழிவுக்குப் பாத்திரராக இருந்தார்கள். ஒழுக்க ரீதியில் சீர்குலைந்தவர்களாகவும் மத ரீதியில் கறைபடிந்தவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுடைய கடவுட்களில் பாகாலும் (லிங்க உருவிலான கல் தூண்களுக்கு பேர்போனது) மோளேகும் (இதற்கே பிள்ளைகளை பலி கொடுத்தார்கள்) கருவள தேவதையாகிய அஸ்தரோத்தும் (அஸ்டார்ட்) அடங்கும்.—உபா 7:1-4, பொது மொழிபெயர்ப்பு; 12:31; யாத் 23:23; லேவி 18:21-25; 20:2-5; நியா 2:11-14; சங் 106:37, 38.
சில சமயங்களில், இஸ்ரவேலருக்கு யெகோவா கொடுப்பதாக சொன்ன முழு பகுதியும், அதாவது வடக்கே சீதோன் தொடங்கி “எகிப்தின் நதிப் பள்ளத்தாக்கு” வரையுள்ள பகுதியும் “கானான்” என அழைக்கப்பட்டது. (எண் 13:2, 21; 34:2-12, NW; ஆதி 10:19) இன்னும் சில சமயங்களில் அங்கிருந்த பல்வேறு தேசங்களை, சிற்றரசுகளை, அல்லது ஜாதிகளை பைபிள் பெயர் சொல்லி குறிப்பிடுகிறது. சில ஜாதியினர் குறிப்பிட்ட இடங்களில் வாழ்ந்தனர்; உதாரணமாக, பெலிஸ்தர் கடலோரமாகவும் எபூசியர் எருசலேமுக்கு அருகேயுள்ள மலைகளிலும் வாழ்ந்தனர். (எண் 13:29; யோசு 13:2, 3) இன்னும் சில ஜாதியினரோ அவ்வப்போது வேறு இடத்திற்கு அல்லது பிராந்தியத்திற்கு மாறி சென்றனர்.—ஆதி 34:1, 2; 49:30; யோசு 1:4; 11:3; நியா 1:16, 23-26.
எகிப்திலிருந்து இஸ்ரவேலர் விடுதலை பெற்று வந்த சமயத்தில் எமோரியரே செல்வாக்குமிக்க இனத்தவராக இருந்திருக்கலாம். a (உபா 1:19-21; யோசு 24:15) அவர்கள் தெற்கே அர்னோன் நதிப் பள்ளத்தாக்கு வரையிருந்த மோவாபியரின் தேசத்தை கைப்பற்றியிருந்தனர். என்றாலும் எரிகோவிற்கு மறுபுறம் அமைந்த பகுதி, ‘மோவாபின் சமனான வெளிகள்’ என்றே அழைக்கப்பட்டு வந்தது. பாசானையும், கீலேயாத்தையும்கூட எமோரிய ராஜாக்கள் ஆண்டனர்.—எண் 21:21-23, 33-35; 22:1; 33:46-51.
இஸ்ரவேலருக்கு கடவுளுடைய ஆதரவு இருந்தபோதிலும், தண்டனைக்குப் பாத்திரரான எல்லா ஜாதியாரையும் அவர்கள் துரத்திவிடவில்லை. இந்த ஜாதிகளே பிற்பாடு இஸ்ரவேலருக்கு கண்ணியாயினர். (எண் 33:55; யோசு 23:13; நியா 2:3; 3:5, 6; 2இரா 21:11) ஆம், “உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக” என கடவுள் எச்சரித்திருந்தும் அந்த ஜாதிகளின் கண்ணிக்குள் இஸ்ரவேலர் வீழ்ந்து போயினர்.—உபா 6:14; 13:7.
[அடிக்குறிப்பு]
a “கானானியர்” என்ற பதத்தைப் போலவே “எமோரியர்” என்ற பதமும் அந்த தேசத்தின் மக்களை மொத்தமாக குறிக்கலாம் அல்லது குறிப்பிட்ட இனத்தவரை குறிக்கலாம்.—ஆதி 15:16; 48:22.
[பக்கம் 11-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து துரத்தப்பட வேண்டிய ஜாதிகள்
பெலிஸ்தியா (D8)
C8 அஸ்கலோன்
C9 காசா
D8 அஸ்தோத்
D8 காத்
D9 கேரார்
கானான் (D8)
B10 அமலேக்கியர்
C12 ஆத்சார்அதார் (ஆதார்?)
C12 காதேஸ் (காதேஸ்பர்னேயா)
D8 லாகீஸ்
D9 பெயெர்செபா
D10 எமோரியர்
D11 நெகெப்
E4 தோர்
E5 மெகிதோ
E5 தானாக்
E6 ஆப்பெக்
E6 ஏவியர்
E7 எபூசியர்
E8 பெத்ஷிமேஸ்
E8 எப்ரோன் (கீரியாத்அர்பா)
E9 ஏத்தியர்
E9 தெபீர்
E10 ஆராத் (கானானியர்)
E10 கேனியர்
E11 அக்கராபீம்
F4 கிர்காசியர்
F6 சீகேம்
F7 பெரிசியர்
F7 கில்கால்
F7 எரிகோ
F8 எருசலேம்
G2 ஏவியர்
G2 தாண் (லாயீஸ்)
G3 ஆத்சோர்
பெனிக்கே (F2)
E2 தீரு
F1 சீதோன்
ஏதோம் (F12)
F11 சேயீர்
G11 போஸ்றா
எமோரியர் (சீகோன்) (G8)
G6 கீலேயாத்
G7 சித்தீம்
G7 எஸ்போன்
G9 ஆரோவேர்
சீரியா (H1)
G1 பாகால்காத்
G2 ஏவியர்
I1 தமஸ்கு
மோவாப் (H10)
எமோரியர் (ஓக்) (I5)
G6 கீலேயாத்
H3 பாசான்
H4 அஸ்தரோத்
H4 எத்ரேயி
அம்மோன் (I7)
H7 ரப்பா
[பாலைவனங்கள்]
H12 அரபி பாலைவனம்
[மலைகள்]
E4 கர்மேல் மலை
E11 ஓர் மலை
G1 எர்மோன் மலை
G8 நேபோ மலை
[நீர்நிலைகள்]
C6 மத்தியதரைக் கடல் (பெருங்கடல்)
F9 உப்புக் கடல்
G4 கலிலேயாக் கடல்
[நதிகள்]
B11 எகிப்தின் நதிப் பள்.
F6 யோர்தான் நதி
G6 யாபோக் நதிப் பள்.
G9 அர்னோன் நதிப் பள்.
G11 சேரேத் நதிப் பள்.
[பக்கம் 10-ன் படங்கள்]
வலது: காளைகளுக்கும் செம்மறியாடுகளுக்கும் பெயர்போன பாசானை எமோரிய ராஜாவாகிய ஓக் அரசாண்டான்
கீழே: உப்புக் கடலுக்கு ஒருபுறம் மோவாபும் மறுபுறம் யூதாவின் வனாந்தரமும்
[பக்கம் 11-ன் படம்]
பாகால், மோளேகு, கருவள தேவதையாகிய அஸ்தரோத் (படத்தில் காட்டப்பட்டுள்ளது) போன்ற பொய்க் கடவுட்களை வணங்கி வந்த ஜாதியாரை துரத்திவிடும்படி இஸ்ரவேலரிடம் யெகோவா கட்டளையிட்டார்