பகுதி 7—எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு, காதல் மற்றும் எதிர்பாலினம்
பகுதி 7—எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு, காதல் மற்றும் எதிர்பாலினம்
எதிர்பாலினத்தாரை நான் கவனிக்க ஆரம்பித்திருக்கிறேன்—ஒருவேளை குறிப்பாக, தனிப்பட்ட ஒருவரை. உங்கள் சரீரத்தில் புதிய உணர்வுகளும், உணர்ச்சிகளும் ததும்பி ஓடுகின்றன. ஆனால் நீங்கள் உணர்வதுதான் என்ன? அன்பா—என்றும் நிலைத்திருக்கும் வகையானதா—அல்லது வேறு ஒன்றா? இந்த உணர்வுகளின் பேரில் நீங்கள் என்னதான் செய்யவேண்டும்? காதல் என்ற பொருளின் பேரில் உங்களுடைய கேள்விகளுக்கு அர்த்தமுள்ள சில பதில்களை நாம் இப்பொழுது ஆராய்வோம்.