Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு சிறப்பான எதிர்காலம் உனக்கு முன்வைக்கப்பட்டிருக்கிறது

ஒரு சிறப்பான எதிர்காலம் உனக்கு முன்வைக்கப்பட்டிருக்கிறது

அதிகாரம் 24

ஒரு சிறப்பான எதிர்காலம் உனக்கு முன்வைக்கப்பட்டிருக்கிறது

பல வழிகளில் நீ மனித சரித்திரத்திலேயே மிக அதிக ஆதரவான ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். இன்று உலக நிலைமைகள் இருக்கும் முறையின் காரணமாக அல்ல, ஆனால் நெருங்கி வந்திருக்கிற எதிர்காலம் என்ன கொண்டுவரப்போவதாயிருக்கிறதென்று பைபிள் காட்டுவதன் காரணமாகவேயாகும்.

2இங்கே, இந்தக் கிரகத்தின்மீது, காரியங்களில் ஒரு மாற்றத்துக்கு—ஒரு பெரிய மாற்றத்துக்கு—எவ்வளவு மிகத் தேவை இருக்கிறதென்று யெகோவா தேவன் அறிந்திருக்கிறார். இந்த மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய ஒரே ஒருவர் அவரே என்பது மிகத் தெளிவாயிருக்கிறது. இந்த மனிதவர்க்க உலகம் இப்பொழுது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானதாய் இருக்கிறது. என்றாலும் மனித சமுதாயத்தைத் தொடர்ந்து தொல்லைப்படுத்தி வந்திருக்கிற அதே பழைய பிரச்னைகளாகிய போர், பசி, தங்குமிடமில்லாமை, அநீதி, பொருளாதார சிக்கல்கள் ஆகியவற்றுடன் அது இன்னும் போராடிக்கொண்டிருக்கிறது.

3இந்தத் தற்போதைய உலக ஒழுங்குமுறையில் சரி செய்வதற்குத் தேவையாயுள்ள காரியங்கள் குறிப்பிடுவதற்கு மெய்யாகவே மட்டுக்கு மீறிய எண்ணிக்கையானவையாக இருக்கின்றன. நிச்சயமாகவே இதைவிட மேம்பட்ட ஒன்று கட்டாயமாக இருக்கவேண்டும், தம்மை நேசித்து சேவிக்கிறவர்களுக்கு இதைப்பார்க்கிலும் மிக மிக மேம்பட்டதை யெகோவா தேவன் மெய்யாகவே எதிர்காலத்தில் வைத்திருக்கிறாரென்று பைபிள் காட்டுகிறது. உண்மையில், முற்றிலும் புதியதாயிருக்கப்போகும் ஓர் ஒழுங்கை, ஓர் இன்பப் பரதீஸைக் கொண்டுவருவதற்கான தம்முடைய நோக்கத்தைப் படிப்படியாய்த் தெரிவிக்க, ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளை அவர் பயன்படுத்தி வந்திருக்கிறார். மகிழ்ச்சி நிரம்பிய அந்தப் புதிய காரிய ஒழுங்கில், அவர், வாழ்க்கையிலிருந்து அவ்வளவு அதிக சந்தோஷத்தை எடுத்துப்போடும் ஊழலும் வன்முறையும் தன்னலமுமான நிலைமைகளை எல்லாக் காலத்துக்கும் ஒரே தடவையாக முற்றிலும் அகற்றிப் போடுவாரென்று வாக்குக் கொடுக்கிறார்.

எப்படி, எப்பொழுது மாற்றம் வரும்

4இதை அவர் எப்படிச் செய்வார்? முதலாவதாக, இப்பொழுது இயங்கிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அரசியல் ஒழுங்குமுறைகளின் கீழ் இந்தப் பூமியின் குழப்பமான பயனற்ற ஆட்சியை ஒழித்துப்போடுவதன் மூலம் அவ்வாறு செய்வார். தாமே உண்டுபண்ணும் ஒரு தனி அரசாங்கத்தைக் கொண்டு, அதாவது, தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமான தம்முடைய ராஜ்யத்தைக்கொண்டு அவற்றினிடத்தை நிரப்புவாரென்ற தம்முடைய நோக்கத்தை அவர் அறிவிக்கிறார். தீர்க்கதரிசியாகிய தானியேல் பின்வருமாறு சொல்லி இதை முன்னறிவிக்கும்படி கடவுள் செய்வித்தார்: “அந்த ராஜாக்களின் [அல்லது ஆட்சிகளின்] நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார் [ஏற்படுத்தி வைப்பார், NW]; அந்த ராஜ்யம் . . . அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) இது எப்பொழுது சம்பவிக்கும்? இது எப்பொழுது நெருங்கி வந்துவிட்டதென்பதை அறிவதற்கு ஒரு வழி இருக்கிறது.

5பூமியின் மித வெப்ப மண்டலத்தில் நீ வாழ்ந்து, மரங்களின் இலைகள் பழுத்த நிறத்திற்கு மாரி உதிர்வதையும், வானங்கள் நாளுக்குநாள் மந்தாரமாகிக்கொண்டு வருவதையும், காண்கிறாயென்றால், மேலும் காற்று இதமளிப்பதாய் குளிர்ச்சியாவதை நீ உணர்ந்து பறவைக் கூட்டங்கள் பூமியின் சற்று வெப்பமான மண்டலத்தை நோக்கிப் பறந்துகொண்டு போவதை நீ காண்கிறாயென்றால்—பஞ்சாங்கத்தைப் பார்க்காமலே குளிர்காலம் வந்துகொண்டிருக்கிறதென்று நீ அறிவாயல்லவா? வெறுமென இந்தக் காரியங்களில் ஏதாவது ஒன்று மாத்திரமே இதை உனக்குத் தெரிவிக்கிறதில்லை, ஏனென்றால் கோடைகாலத்தில் ஒரு நாளிலுங்கூட வானங்கள் மந்தாரமாகக்கூடும், அல்லது மரங்கள் நோய்ப்பட்டு அவற்றின் இலைகளை இழக்கக்கூடும். ஆனால் இந்தக் காரியங்கள் எல்லாம் ஒன்றாக ஏற்படுவதைக் காண்பதே குளிர்காலம் நெருங்கி வருவதன் நிச்சய அடையாளமாகிறது.

6இதைப்போலவே, பைபிள் கொடுக்கிற பல அம்சங்கள் அடங்கிய ஓர் அடையாளம் இருக்கிறது. இந்த அடையாளமானது கிறிஸ்து இயேசுவின் மூலமான கடவுளுடைய ராஜ்யம் இந்தப் பூமியின் ஆட்சி அதிகாரத்தை ஏற்பதற்கான அந்தக் காலம் சமீபித்திருக்கிறதென்று நமக்குத் தெரிவிக்கிறது. வெறுமென செய்தித்தாள்களைப் பார்ப்பதன் மூலமும் அல்லது ரேடியோவிலும் டெலிவிஷனிலும் செய்தி நிகழ்ச்சி நிரல்களை கவனிப்பதன் மூலமும் நீ இந்த அடையாளத்தை இன்று காணக்கூடும். இது என்ன?

7ஒரு குறிப்பிட்ட சந்ததிக்குள்ளேயே, போர்கள், பசி, நோய், பூமியதிர்ச்சிகள், இவற்றோடுகூட, பூமியின்மேல் எதிர்காலம் என்ன கொண்டுவருமோ என்பதைப் பற்றிய மிகுந்த மனத்தத்தளிப்பு, நிச்சயமில்லாமை ஆகியவற்றால் முக்கியமாய்க் குறிக்கப்படும் ஒரு காலம் வருமென்று இயேசு முன்னறிவித்தார். இதே காரியங்களை இன்று நாம் தொடர்ந்து எதிர்ப்படுவதைச் செய்தி மூலங்கள் மூலமாய் அறிகிறோமல்லவா? 1914 முதற்கொண்டு பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தச் சந்ததியைப்போல் மனித சரித்திரத்தில் இதற்கு முன்பாக இருந்த எந்தச் சந்ததியும் இந்த எல்லாக் காரியங்களையும் இப்பேர்ப்பட்ட அளவில் கண்டிருக்கவில்லை. இதன் காரணமாகவே சரித்திராசிரியர்கள் 1914-ஐ மனிதவர்க்கத்தின் சரித்திரத்தில் ஒரு “திருப்பநிலை” என்றழைக்கின்றனர்.

8இந்த “அடையாளத்தைக்” காணும் சந்ததியைப் பற்றிப் பேசுபவராய் இயேசு பின்வருமாறு கூறினார்: “இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள். இவையெல்லாம் சம்பவிக்குமுன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (லூக்கா 21:31, 32) இது, கடவுளுடைய புதிய ஒழுங்கு நெருங்கி வந்துவிட்டதென்று அர்த்தங்கொள்ளுகிறது. அது என்ன மாற்றங்களைக் கொண்டு வரும்?

மனித குடும்பத்திற்காகக் கடவுள் கொண்டுவரப்போகும் மாற்றங்கள்

9இந்தக் கிரகத்தையும் அதில் வாழ்பவர்களையும் பரலோகத்தால் வழி நடத்தப்படுகிற ஒரே ஒரு பரிபூரண அரசாங்க ஆட்சியின்கீழ் வைப்பதன்மூலம், கடவுள், இவ்வுலகத்தின் பேரளவான பொருள் வளத்தைப் பாழ்ப்படுத்தும் அரசியல் கலகங்களையும் சண்டைகளையும் எல்லாக் காலத்திற்குமாகத் தாம் நிறுத்திப் போடுவாரென்று வாக்குக் கொடுக்கிறார். இது, நாடுகளில் இளைஞரின் சிறந்த பகுதியை எடுத்து, பின்பு, அவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்களை ஊனமாக்கப்பட்டவர்களாயோ, கைகள், புயங்கள் அல்லது கால்கள் துண்டிக்கப்பட்டவர்களாயோ, ஒருவேளை குருடாக்கப்பட்டவர்களாயோ, அல்லது அதற்கும் மோசமாக உயிரற்றப் பிணங்களாகவோ திருப்பியனுப்புகிற போர்களின் முடிவைக் குறிக்கும். கடவுளுடைய புதிய ஒழுங்கில் வாழ்கிறவர்கள் எல்லாரும் ஏசாயா 2:4-ல் உள்ள பின்வரும் பைபிள் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியிருக்கிற சமாதானத்தை நேசிக்கும் ஆட்களாக இருப்பார்கள்: “அவர்கள் தங்கள் பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” பூமியெங்கும் சமாதானம் நீடித்து நிலவியிருக்க, எல்லா இடங்களிலுமுள்ள எல்லா மக்களின் நன்மைக்காகவும் அதிசயமான காரியங்கள் அப்பொழுது நிறைவேற்றப்படக்கூடும்.

10அரசியல் ஊழலும் பாழ்ப்படுத்துதலும் நிறுத்தப்பட்டு போவதுமட்டுமல்ல, பெரும்படியான வியாபார ஒழுங்குமுறைகளின் பேராசையுங்கூட நிறுத்தப்படும். இந்த ஒழுங்குமுறைகளின் பல, பூமியை அசுத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றன, காற்று, தண்ணீர், நிலம் ஆகியவற்றைத் தூய்மைக்கேடு செய்து, பூமியின் காட்டு விலங்குகளைக் கொன்று ஒழித்து வருகின்றன. ஆனால் கடவுள், “பூமியைக் கெடுக்கிறவர்களைக் கெடுக்கப்” போகிறாரென்று, வெளிப்படுத்துதல் 11:18-ல் பைபிள் நமக்குச் சொல்லுகிறது. அப்பொழுது பூமியின் காடுகளின் அழகும், அதன் நீரோடைகளும் ஏரிகளும் தெள்ளத் தெளிவான அதன் காற்றின் புத்துயிரளிக்கும் தூய்மையும் நறுமணமும், அதன் காட்டுப் பறவை, மீன், மிருகவர்க்கங்களின் ஏராளமான பற்பல வகைகளுமாகிய எல்லாம் திரும்ப நிலைநாட்டப்படும். தம்முடைய வார்த்தையில் விசுவாசம் வைத்திருக்கிறவர்களுக்குக் கடவுள் வைத்திருக்கிற இந்த மேன்மையான எதிர்காலத்தில் இக்காரியங்களை அனுபவித்து மகிழ்கிறவர்களுக்குள் நீயுங்கூட இருக்கலாம்.

11தம்முடைய புதிய ஒழுங்கில், பூமியின் வளமான விளைச்சல் எல்லா ஆட்களாலும், அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி, அவர்களால் அனுபவித்து மகிழப்படுமென்று நம்முடைய சிருஷ்டிகர் வாக்குக்கொடுக்கிறார். இன்று பூமியின் பல பாகங்களில் உண்மையாயிருப்பதுபோல், உப்பிய வயிற்றுடனும் சுருங்கி ஒடுங்கிய புயங்களுடனும் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும் பிள்ளைகளை, இனிமேலும் இந்தப் பூமியில் நீ காணமாட்டாய். ஏசாயா 25:6, 8-ல் பின்வரும் இந்தத் தீர்க்கதரிசனம் எழுதப்படும்படி கடவுள் செய்வித்தார்: “சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தைச் சேனைகளின் யெகோவா ஆயத்தப்படுத்துவார் . . . கொழும் பதார்த்தங்கள் . . . அவர் மரணத்தை என்றுமாக விழுங்குவார்; யெகோவாவாகிய கடவுள் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்துப்”போடுவார்.—தி.மொ.

12ஆம், எல்லாவற்றிற்கும் மிக மேன்மையாக, கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்குப் பரிபூரண ஆரோக்கியத்தைக் கடவுள் திரும்ப கொண்டுவரப்போகிறார் என்று பைபிள் காட்டுகிறது. அவருடைய குமாரனின் ராஜ்யம் மனிதரின் நோயையும் அபூரணத்தையும் நீக்கிச் சுகப்படுத்துதலைக் கொண்டு வருகையில், நோயும் வேதனையும் சாவும் கொண்டு வந்திருக்கிற எல்லாத் துக்கமும் துன்பமும் என்றுமாக முடிவடைந்துபோம். வெளிப்படுத்துதல் 21:4 நமக்கு பின்வருமாறு சொல்லுகிறது: “அவர்கள் கண்களினின்று கண்ணீர் யாவையும் [கடவுள்] துடைப்பார்; இனி மரணமிராது, துக்கமும் அலறுதலும் வேதனையும் இனி இராது முந்தினவை ஒழிந்து போயின.”—தி.மொ.

13இது மனித அபூரணத்தின் விளைவான வயோதிபமடையும் போக்கு முற்றிலுமாய் நீக்கப்படபோகிற அந்தக் காலம் வருமென்று அர்த்தங்கொள்ளுகிறது. தோலில் சுருக்கங்கள் விழுதல், நரைமயிர் அல்லது வழுக்கைத்தலை, விறைப்பான எலும்புகள், தசை ஒத்திசைவை இழத்தல், மூச்சுவாங்கல், மற்றும் வயோதிகத்தோடு இப்பொழுது வரும் மற்ற எல்லாத் தொல்லைகளிலிருந்தும் விடுதலையானதாய் இருக்கப்போகும் ஓர் எதிர்காலத்தை ஏற்பாடு செய்துகொடுப்பதானது கடவுளுடைய பங்கில் எவ்வளவு அன்புள்ள காரியமாயிருக்கிறது. ஆம், ஏற்கெனவே வயோதிபராக இருக்கும் ஆட்களுக்கு, யோபு 33:25 பின்வருமாறு விவரிக்கிறபடி கடவுள் செய்யக்கூடியவராக இருக்கிறார்: “அப்பொழுது அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப் பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வால வயது நாட்களுக்குத் திரும்புவான்.” ஆம், உண்மையில், இன்று இளைஞர் கொண்டிருக்கிறதைப் பார்க்கிலும் மேம்பட்ட சுகத்தையும் பலத்தையும் யெகோவா தேவன் கொண்டுவரக்கூடும், எப்படியெனில் இப்பொழுது இளைஞருங்கூட நோய்ப்பட்டு சிலர் எதிர்பாராத மிக இளம் வயதிலேயே செத்துப் போகின்றனர்.

எதிர்காலத்தை நீ எப்படி அனுபவித்து மகிழக்கூடும்

14பைபிள் பின்வருமாறு சொல்லுகிற பிரகாரம் நீ செய்வாயானால் அந்த மிக மேன்மையான எதிர்காலம் உன்னுடையதாக இருக்கக்கூடும்: “நீ உன் வாலிபப் பிராயத்திலே [கன்னிகைப் பருவத்தில்] உன் சிருஷ்டிகரை நினை; தீங்கு நாட்கள் வராததற்கு முன்னும், [முதுமையினால் வருந்திக் கொண்டிருக்கும் மக்கள் சொல்வதுபோல்] எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்கு முன்னும்.”—பிரசங்கி 12:1.

15இது, வெறுமென அவ்வப்பொழுது உன் சிருஷ்டிகரைப் பற்றிச் சிந்திக்கும் ஒரு காரியமல்ல. அவருக்குப் பிரியமான முறையிலும் அவருடைய புதிய ஒழுங்கில் வாழப் போகிறவர்களுக்குள் உன்னையும் கொண்டிருக்க அவர் விரும்புகிறபடி செய்விக்கிற முறையிலும் நீ வாழ்வதற்கு நாடி முயலுவதன் மூலம் அவரை ஒவ்வொரு நாளும் நாள் முழுவதும் நினைக்கும் ஒரு காரியமாகும். இதைச் செய்யும்படி அவர் உன்னை வற்புறுத்தமாட்டார். இதை நீயே உன் சொந்தமாய்த் தெரிந்துகொண்டு உன் சுய விருப்பத்தோடு செய்ய வேண்டும். நீ செய்ய வேண்டிய எதையோ செய்யும்படி உன் பெற்றோர் உன்னை வற்புறுத்த வேண்டியதாய் இருக்கையில், நீ அதைச் செய்வதைக் காண்பதிலிருந்து அவர்கள் உண்மையான இன்பம் எதுவும் அடைகிறதில்லை என்பது உனக்குத் தெரியும். ஆனால் அதைச் செய்வது அவர்களுக்கு மனமகிழ்ச்சியைத் தருகிறதென்று நீ தெரிந்திருப்பதன் காரணமாக நீ மனமுவந்தும் மகிழ்ச்சியுடனும் அதைச் செய்கையில், நீ அவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொண்டு வருகிறாய். அவ்வாறே, யெகோவாவுங்கூட தம்முடைய வார்த்தையில்: “என் மகனே, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து,” என்று சொல்லுகிறார்.—நீதிமொழிகள் 27:11.

16ஆம், உன் இளமையை, உன் வாழ்க்கையின் தளிர்ப்புப் பருவத்தை அனுபவித்து மகிழ்ந்து, அதை மிக நன்றாய்ப் பயன்படுத்திக்கொள். இப்பொழுதும் எதிர்காலத்திலும் மிக அதிக சந்தோஷத்தை உனக்குக் கொண்டுவரும் நற்பண்புகளை உன்னில் கட்டியமைத்து வருவாயாக. வாழ்க்கைப் பாதையில், அதாவது, செத்துக் கொண்டும் அழிவடைந்து கொண்டும் இருக்கும் இந்தத் தற்போதைய காரிய ஒழுங்குமுறையில் ஒரு சில பத்தாண்டுகள்தானே அல்ல, கடவுளுடைய பரதீஸிய பூமியில் இளமையின் உடல்நல உறுதியின் புதுமை குன்றாத நிலையில் நித்திய வாழ்க்கைக்கு வழிநடத்தும் ஜீவ பாதையில் ஒரு மிக நல்ல தொடக்கத்தை அடையும்படி உன் இளமையைப் பயன்படுத்திக்கொள்.

[கேள்விகள்]

1-3. (எ) மனித சரித்திரத்திலேயே மிக அதிக ஆதரவான ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோமென்று ஏன் சொல்லுகிறோம்? (பி) நம்முடைய நன்மைக்காகக் கடவுள் என்ன மாற்றத்தைக் கொண்டுவரப்போகிறார்?

4-8. (எ) தேவைப்படுகிற இந்த மாற்றத்தை யெகோவா எப்படிக்கொண்டு வருவார்? (பி) இது நடைபெறுவதற்கான அந்தக் காலம் வெகுவாய் நெருங்கிவிட்டிருக்கிறதென்று எது நிரூபிக்கிறது? (2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 24:7, 8, 32, 33)

9-13. (எ) கடவுளுடைய புதிய ஒழுங்கில், மனிதவர்க்கம் முழுவதற்கும் என்ன நிலைமைகள் இருக்கப்போகின்றன? (பி) இந்தக் காரியங்கள் உண்மையில் நடைபெறக்கூடும் மேலும் நிச்சயமாக நடைபெறும் என்று எது உன்னை உறுதியாய் நம்பச் செய்கிறது? (வெளிப்படுத்துதல் 21:5)

14-16. இந்த மிக மேன்மையான எதிர்காலத்தை அனுபவித்து மகிழ்வதற்கு நீ என்ன செய்ய வேண்டும்?