சிட்சையை நீ எவ்வாறு நோக்குகிறாய்?
அதிகாரம் 13
சிட்சையை நீ எவ்வாறு நோக்குகிறாய்?
தவறு செய்வதையோ அல்லது தவறில் இருப்பதையோ ஒருபோதும் ஒப்புக்கொள்ளாத எவராவது ஒருவரை நீ அநேகமாய்த் தெரிந்திருக்கலாம்—ஒருவேளை உடன் மாணாக்கன் அல்லது உபாத்தியாயருங்கூட அவ்வாறு இருந்திருக்கலாம். இப்படிப்பட்ட ஒருவனைப் பற்றி நீ எவ்வாறு உணருகிறாய்? இப்படிப்பட்டவன் ஒரு நாள் தானாக வந்து, “நான் வருந்துகிறேன்; நான் தவறில் இருந்ததை நான் காண்கிறேன்,” என்று சொன்னால் அவனைப் பற்றிய உன் எண்ணம் உயருமா அல்லது குறையுமா?
2மெய்யாகவே, நாம் எல்லாரும் தவறுகளைச் செய்கிறோம் அல்லவா? நம்மில் எவரும் பரிபூரணமாக அல்லது குற்றமற்றவராக இல்லை. பைபிள் இதை நமக்குச் சொல்லுகிறது. நம்முடைய முதல் தகப்பனாகிய ஆதாமின் கீழ்ப்படியாமையின் காரணமாக, எல்லா மனிதரும் பாவமாகிய, அபூரணத்தைச் சுதந்தரித்தவர்களாகப் பிறந்திருக்கிறோமென்று அது காட்டுகிறது. “ஒரே மனுஷனாலே [ஆதாமால்] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும் எல்லா மனுஷரும் பாவஞ் செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது,” என்று பைபிள் விளக்குகிறது.—ரோமர் 5:12.
3சில தவறுகள் ‘அறியாமையினால்’ செய்யப்படுகின்றன. ஆனால் எல்லாம் அப்படியில்லை. பல தவறுகள் அக்கறையில்லாமையினால் செய்யப்படுகின்றன. உதாரணமாக, ஆகாய விமானத்திலுள்ள பெண் மேலாளர், நீரில் மிதக்க வைக்கும் சட்டைகளை அல்லது விமானத்தின் பிராணவாயு ஏற்பாட்டை எப்படி உபயோகிப்பது என்று விளக்குகையில் ஒரு பயணி கவனம் செலுத்தாமல் இருக்கலாம். இதன் விளைவாக ஏதோ திடீர் நெருக்கடிநிலை ஏற்படுகையில் இந்த ஏற்பாடுகளைப் பயன்படுத்தத் தவறி, தன் உயிரை இழப்பானாகில், இது வெறுமென அவனுக்குத் தெரியாததனால் அல்ல, அதற்கு மாறாக, அவன் தெரிந்துகொள்வதற்கு அக்கறை கொள்ளாததனாலேயே ஏற்பட்டதாகும்.
4ஆகையால் எல்லாத் தவறுகளையும் எளிதான பிழை என்பதாகக் குறிப்பிட முடியாது. வேண்டுமென்றே அறியாமையிலிருப்பது அடிக்கடி காரணமாயிருக்கிறது. இதற்கும் மிக மோசமாக ஒருவன், தவறு என்று தான் அறிந்திருக்கிறதை செய்யக்கூடும்—பின்பு ஏதோ விவாதம் செய்து தன் குற்றத்தை மழுப்பிவிடக்கூடும்.
5இதெல்லாம் சிட்சைக்குரிய தேவையைக் காட்டுகிறது, இது திருத்தத்தை உட்படுத்துகிறது. நாம் இளைஞராக இருந்தாலும்சரி, முதியோராக இருந்தாலும்சரி நம் எல்லாருக்கும் திருத்தம் அவசியமாய் இருக்கிறது. உண்மையில், சிட்சை அல்லது திருத்தம் இல்லாதிருந்தால் மனித வாழ்க்கையின் எந்தத் துறையிலும் முன்னேற்றம் இருக்கமுடியாது. மக்கள் அதே தவறுகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பார்கள், அதே தவறான அபிப்பிராயங்களைத் தொடர்ந்து நம்பிக்கொண்டிருப்பார்கள், அறிவிலோ திறமையிலோ ஒருபோதும் முன்னேறாமல் இருந்து கொண்டிருப்பார்கள்.
6ஆனால் சிட்சையானது வெறும் திருத்தத்தைப் பார்க்கிலும் அதிகத்தைக் குறிக்கிறதென்பது உனக்குத் தெரியுமா? அது, உருப்படுத்துகிற, பலப்படுத்துகிற, அல்லது மேம்பட்டதாக்குகிற பயிற்றுவிப்பாகவுங்கூட இருக்கலாம். சிட்சையானது, திருத்தத்தையும் எதிர்காலத்துக்கான முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு தகுந்தபடி கொடுக்கப்படுகிறது.
இதை ஏற்பது ஏன் கடினமாய் இருக்கிறது
7சிட்சை அவ்வளவு பயன் தருவதாய் இருக்கிறதென்றால், ஏன் பெரும்பாலர் அதை ஏற்பதை அவ்வளவு கடினமாகக் காண்கின்றனர்? உண்மையில் இது, முதலிடத்தில் சிட்சையை நமக்கு அவசியப்படுத்துகிற அதே காரணத்தினிமித்தமாகவே, அதாவது, நம்முடைய அபூரணத்தினிமித்தமாகவேயாகும். சிட்சையானது நம்மை எளிதில் சங்கட உணர்ச்சியடைய வைக்கும் அல்லது அது நம்முடைய பெருமைக்குப் பங்கமிழைக்கக்கூடும். என்றபோதிலும், அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு விளக்கியிருக்கிறபடி காட்சியில் மறுபக்கத்தைக் கவனி: “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.”—எபிரெயர் 12:11.
8மனத்தாழ்மையானது சிட்சையிலிருந்து பெரும்பான்மையான வலியை எடுத்துப்போடுகிறது. என்றபோதிலும், பலர், பெருமையும் பிடிவாதமும் சிட்சையை எதிர்க்கும்படி தங்களைச் செய்விக்க இடங்கொடுக்கிறார்கள். ஆனால் திருத்தம் அல்லது கடிந்துகொள்ளுதல் நல்ல நீதிமொழிகள் 1:7, NW.
அடிப்படையைக் கொண்டிருக்கையில் அதை ஏற்க பிடிவாதமாய் மறுத்துவிடுகிறவன், மற்றவர்களின் கண்களில் தன்னை வெறுமென முட்டாளாகக் காணப்படும்படியே செய்கிறான். “ஞானமும் சிட்சையுமே வெறும் மூடர் புறக்கணித்திருப்பவை,” என்று கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது.—9இதற்கு எதிர்மாறாக: “ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்,” என்று நாம் வாசிக்கிறோம். ஏன்? ஏனென்றால் திருத்துதலின் மூலமாக, தான் மேலும் “ஞானத்தில் தேறுவான்,” என்று அவனுக்குத் தெரியும்.—நீதிமொழிகள் 9:8, 9.
நீ எப்படிப் பிரதிபலிப்பாய்?
10மெய்யான கேள்வியானது: உன் வாழ்க்கையைக் கொண்டு நீ என்ன செய்ய விரும்புகிறாய் என்பதே. நோக்கமின்றி வெறுமென போகிற போக்கில் சென்றுகொண்டிருக்கவே நீ விரும்புகிறாயா? அல்லது பயனுள்ள ஓர் எதிர்காலத்தை நோக்கி உழைத்துக்கொண்டிருக்க நீ மனமுள்ளவனாய் இருக்கிறாயா? இந்தக் காரியத்தை நீ எப்படிக் கருதுகிறாய்? “உன் எதிர்காலத்தில் நீ ஞானமுள்ளவனாகக் கூடும்படி, அறிவுரைக்குச் செவிகொடுத்து சிட்சையை ஏற்றுக்கொள்,” என்று ஆலோசனை கூறுகிற, கடவுளுடைய வார்த்தையை நீ ஒப்புக்கொள்ளுகிறாயா?—நீதிமொழிகள் 19:20, NW.
11உன் கருத்து என்னவாக இருந்தாலும், வாழ்க்கையில் ஏதோ சமயத்தில் நீ சிட்சையைக் கட்டாயமாகப் பெறுவாய். இது கடவுளுடைய ஏற்பாடு என்பதை நீ மனதில் வைத்திருப்பாயானால் அதை ஏற்பதை அதிக இன்பமாகவும் எளிதாகவும் நீ காண்பாய். அவர் நம்மை நேசிப்பதனாலும் நாம் முன்னேற்றமடைய நமக்கு உதவி செய்ய விரும்புகிறதனாலுமே சிட்சை அளிக்கிறார். ஆகையால் சிட்சையை வெறுக்கிற எவனும் செயல்முறையளவில், ‘கடவுளுடைய வார்த்தையைத் தனக்குப் பின்னாக எறிந்து போடுகிறான்,’ என்று பைபிள் சொல்லுகிறது.—சங்கீதம் 50:17.
12சிட்சையானது சரியானபடியே ஓர் அதிகாரப்பூர்வ தோற்றத்திலிருந்து வருகிறது. இளைஞருக்குச் சிட்சை கொடுப்பதற்கு மிகச் சிறந்த நிலையில் யார் இருப்பதாக நீ நினைக்கிறாய்? பெற்றோருக்கே கடவுள் இந்த வேலையைக் கொடுத்திருக்கிறார், ஏனெனில், தங்கள் பிள்ளைகளின் உயிருக்கு அவர்கள் உத்தரவாதமுள்ளவர்களாக இருக்கிறார்கள். கிறிஸ்தவ சபைக்குள், கடவுள் ஆவிக்குரிய “மூப்பரை” ஏற்படுத்தியிருக்கிறார், இவர்கள் “ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்தி சொல்லவும், தீத்து 1:5-9.
எதிர் பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் வல்ல”வர்களாக இருக்கிறார்கள்.—13உன் பெற்றோரிடமிருந்து வரும் சிட்சைக்கு நீ எப்படிப் பிரதிபலிக்கிறாய்? இளைஞர் பலர் அதை எதிர்த்து மனக்கசப்படைகிறார்கள், சிறிது காலத்திற்காவது அவ்வாறு செய்கிறார்கள், அதன் காரணமாக வீட்டைவிட்டுச் சென்றுவிடுமளவுக்குங்கூட செல்கிறார்கள். எவரோ உனக்கு அறிவுரை கொடுத்ததன் அல்லது கண்டித்ததன் காரணமாக நீ மனக் கசப்புற்றிருக்கிறாயென்றால், சற்று நின்று, உன்னை நீயே பின்வருமாறு கேட்டுக்கொள்: இதைச் செய்ய அவர்கள் ஏன் நேரத்தையும் முயற்சியையும் எடுத்தார்கள்? எல்லாருடைய விஷயத்திலும் அப்படியல்லவென்றாலும் பெரும்பாலரின் காரியங்களில் கண்டிப்பது அவர்களுக்கு இன்பமாய் இல்லை என்பது உனக்குத் தெரியும். உன்னைப் பற்றிப் போதிய அக்கறை அவர்களுக்கு இருப்பதனாலேயே அதைச் செய்ய அவர்கள் முயற்சி எடுக்கிறார்கள். இதுதானேயும் அவர்கள்
சொல்வதைப் பற்றிக் கவலையுடன் யோசிக்கும்படி உன்னைச் செய்விக்க வேண்டும்.14நம்முடைய தவறுகளை ஒப்புக்கொள்வதற்குப் பலம் வேண்டியதாய் இருக்கிறதென்பது உண்மையே. மேலும் சிட்சையை ஏற்பதற்கு மனத்தாழ்மை வேண்டியதாய் இருக்கிறது, முக்கியமாய் அது கேட்கப்படவில்லை என்பதாக நீ உணருவாயானால் அவ்வாறு இருக்கிறது. ஆனால் அதை எதிர்த்து வெறுப்பைக் காட்டாமல் அமைதியாய் ஏற்றுக்கொள்வாயானால், நீ அதால் அநேகமாய்ப் பலனடைவாய், இது சிக்கல் நிலையை அகற்றும்.
15மேலும் சிட்சை அளிக்கிறவர்கள் உனக்குக் “கால்கட்டுப்போட்டு” வாழ்க்கைப் பெரும் பாதையில் நடப்பதில் உன்னைக் கட்டுப்படுத்தி வைக்க அநேகமாய் முயலுகிறதில்லை என்பதையும் நினைவில் வைப்பாயாக. அதற்கு மாறாக, நீ முன்னேற்றமடைய உனக்கு உதவி செய்ய அவர்கள் அநேகமாய் முயன்று கொண்டிருக்கலாம். ஞானமான சிட்சை, தீங்கான விபத்துக்களினின்று உன்னைப் பாதுகாக்கிறது, பிரச்னைகளால் உன்னைக் கட்டுப்படுத்தி, உன் பாதையைக் கடினமாக்கக் கூடிய காரியங்களில் சிக்கிக்கொள்ளாதபடி உன்னைக் காத்து வைக்கிறது. நீ திருத்தத்தை ஏற்றுக் கொள்வாயானால், பைபிள் உனக்குப் பின்வருமாறு வாக்குக் கொடுக்கிறது: “நீ அவைகளில் நடக்கும்போது, உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய். புத்திமதியை [சிட்சையை, NW] உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.”—நீதிமொழிகள் 4:10-13.
16நிச்சயமாகவே, மற்றவர்கள் உன்னைத் திருத்துவதற்கு நீ காத்திருக்க வேண்டியதில்லை. சுயக்கட்டுப்பாட்டை நீ அனுசரித்து வரக்கூடும். விழிப்பாய் இருப்பதன்மூலம், உன் சொந்தத் தவறுகளில் பலவற்றை நீ கண்டுணர்ந்து அவற்றைத் திருத்திக் கொள்ள நீ நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளலாம்.
17சிட்சையை ஏற்றுக்கொள்பவனாய் இருப்பதிலிருந்து பல பயன்கள் உண்டாகின்றன. நேர்மையான முறையில் தவறுகளை ஒப்புக்கொள்வது உனக்குள் மேம்பட்ட நல்லுணர்ச்சியைக் கொடுக்கிறது. அது, சரியானதற்கு உன் இருதயத்தையும் மனதையும் பலப்படுத்துகிறது. இது மற்றவர்களுடன் நல்ல உறவுகளை உண்டாக்குகிறது; நீ நேர்மையும் மனத்தாழ்மையும், சமநிலையுமுள்ளவனாக இன்றுள்ள மற்ற மிகப் பலரிலிருந்து புத்துயிர்ப்பூட்டும் வண்ணம் வேறுபட்டவனாக இருப்பதாய் அவர்கள் உன்னை ஏற்பார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக யெகோவா தேவனுடன் நல்ல உறவுக்குள் உன்னைக் கொண்டு வருவதற்கும் அங்கே உன்னை நிலைத்திருக்க வைப்பதற்கும் இது இன்றியமையாததாய் இருக்கிறது. மேலும் இது நிலைவரமான சந்தோஷ எதிர்காலத்தையும் உனக்கு நிச்சயப்படுத்தக்கூடும். ஆம், “போதக சிட்சையே ஜீவ வழி.”—நீதிமொழிகள் 6:23.
[கேள்விகள்]
1-4. (எ) நாம் எல்லாரும் ஏன் தவறுகளைச் செய்யும் மனச் சாய்வை உடையவர்களாக இருக்கிறோம்? (பி) அறியாமையைத் தவிர வேறு எதுவும் தவறுகளைச் செய்வதற்குக் காரணமாய் இருக்கிறது?
5, 6. (எ) திருத்தம் ஏன் இளைஞருக்கும் முதியோருக்கும் பயன் தருவதாய் இருக்கிறது? (பி) சிட்சையின் நோக்கமென்ன? (நீதிமொழிகள் 1:1-4)
7-9. (எ) சிட்சையை ஏற்பது ஏன் பெரும்பாலும் கடினமாய் இருக்கிறது? (பி) இதை எப்படி மேற்கொள்ள முடியும்?
10-12. (எ) நீதிமொழிகள் 19:20-ல் காட்டப்பட்டிருக்கிறபடி சிட்சை நம்முடைய வாழ்க்கையை எப்படிப் பாதிக்கக்கூடும்? (பி) கடவுள் நம்மை ஏன் சிட்சிக்கிறார்? (எபிரெயர் 12:5, 6) (சி) நமக்குச் சிட்சை கொடுப்பதற்கு அதிகாரம் பெற்றிருப்பவர் யார்?
13-17. சிட்சையை எதிர்த்து மனக்கசப்பு அடைகிறோமென்றால், நம்முடைய சிந்தனையைத் திரும்ப சரிப்படுத்திக்கொள்ளும்படி நமக்கு உதவி செய்யக்கூடிய என்ன எண்ணங்களை நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்? (நீதிமொழிகள் 4:1, 2; 13:24; 15:32)
[பக்கம் 95-ன் படம்]
நீங்கள் திருத்தப்படும்போது எப்படி பிரதிபலிக்கிறீர்கள்?