Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீ தெரிந்துகொள்ளும் இன்னிசையும் நடனமும்

நீ தெரிந்துகொள்ளும் இன்னிசையும் நடனமும்

அதிகாரம் 17

நீ தெரிந்துகொள்ளும் இன்னிசையும் நடனமும்

மனிதனின் சிருஷ்டிகர் மனிதனைச் சுற்றியுள்ள இயற்கை சூழலில் இன்னிசையை அமைத்தார். பறவைகளின் தொண்டைகளிலிருந்து தோன்றும் தெளிவான இசைந்தொழுகும் இராகங்கள் மட்டுமேயல்ல, ஓடைகளின் கலகலவென்னும் ஒலி, மரங்களில் காற்றின் சலசலப்பு ஒலி, வெட்டுக்கிளியினப் பூச்சிகளின் கிறீச்சொலி, தவளைகளின் கரகரப்பான ஒலி, பூமியின் சிருஷ்டிகள் மற்றப் பலவற்றின் ஓசைகள்—ஆகிய இவையெல்லாம் தங்களில் இன்னிசை தொனியைக் கொண்டிருக்கின்றன. அப்படியானால், இசைக்கருவிகளின் உற்பத்தி மனித சரித்திரத்தின் முதல் தொடக்கக் காலத்திலிருந்தே ஆரம்பிப்பது வியப்பு தருவதாயில்லை.

2நடனத்திற்குங்கூட ஒரு பூர்வ சரித்திரம் இருக்கிறது. இஸ்ரவேலில் மோசேயின் சகோதரியாகிய மிரியாம் முன் சென்று “தம்புருகளோடும் நடனத்தோடும்” பெண்களை வழிநடத்தினாள். மேலும், மோசமான சத்துருக்களைத் தோற்கடிப்பதற்குக் கடவுள் அரசனாகிய தாவீதுக்கு உதவி செய்த பின்பு “ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல் பாடலுடன் புறப்பட்டு வந்தார்கள்.” இயேசு கிறிஸ்துவுங்கூட நடனத்தைச் சம்மதித்தார் என்று தெரிகிறது. எப்படியெனில் கெட்ட குமாரனைப் பற்றிய தம்முடைய உவமையில் சரியான கொண்டாட்டத்தின் ஒரு பாகமாக அவர் நடனத்தைக் குறிப்பிட்டார். அந்தக் கெட்ட குமாரன் திரும்பி வந்தபோது ஏற்பாடு செய்யப்பட்ட “கீத வாக்கியத்தையும் நடனக் களிப்பையும்” பற்றி இயேசு பேசினார். சில நடனங்கள் தனி ஆட்களால் அல்லது ஆண்களைக் கொண்ட அல்லது பெண்களைக் கொண்ட தொகுதிகளால் ஆடப்பட்டனவென்று பைபிள் காட்டுகிறது.—யாத்திராகமம் 15:20; 1 சாமுவேல் 18:6; லூக்கா 15:25.

3இது, எல்லா இன்னிசையும் நடனமும் கட்டாயமாக நல்லவையே என்று அர்த்தங்கொள்ளுகிறதா? அல்லது நீ செவிகொடுத்துக் கேட்கும் இசையிலும் நீ பங்குகொள்ளக்கூடிய நடனங்களிலும் தேர்ந்தெடுப்பவனாக இருக்கவேண்டுமா? எதைத் தெரிந்து கொள்வதென்பதைத் தீர்மானிப்பதற்கு எது நமக்கு உதவி செய்யக்கூடும்? இது உண்மையில் எவ்வளவு முக்கியமாய் இருக்கிறது?

நடனத்தில் தேர்ந்தெடுப்பு

4நேர்த்தியான சமுதாய சுழற்சி நடனங்களிலிருந்து கிளர்ச்சி மிகுந்த நடன வகைகள் வரையாக—மிகப் பற்பல வகையான நடனங்கள் இருக்கின்றன. லத்தீன் அமெரிக்க காங்காஸ், ரூம்பாஸ், சாம்பாஸ் எனப்பட்டவைகள் மேலும் இவற்றில் பல ஆப்பிரிக்க அடிப்படையைக் கொண்டவை. மெரெங்குவஸ், பெகூய்னஸ், பொஸ்ஸா நோவஸ் ஆகியவை மேலும் ராக்-‘என்’-ரோல், என்பதும் இதற்கும் மேலாக சமீபத்தில் தோன்றியிருக்கும் நடனவகைகளும் இருக்கின்றன. இந்த நடன வகைகள் சிலவற்றைக் குறித்ததில் ஏன் உனக்கு வெறுப்புணர்ச்சி ஏற்படலாம் என்பதற்கு நல்ல காரணம் ஏதாவது இருக்கிறதா?

5அந்த நடனம் பால் சம்பந்த உணர்ச்சிகளை உன்னில் எழுப்பி, பால் சம்பந்த ஒழுக்கக்கேட்டை நடப்பிக்கும்படியான சோதனையைக் கொண்டு வருகிறதென்றால், நிச்சயமாகவே வெறுப்புக்குக் காரணம் இருக்கிறது. இது உனக்குப் பல பிரச்னைகளை உண்டுபண்ணக்கூடும்.

6உதாரணமாக, பூர்வ கருவள நடனங்கள் பால் சம்பந்த பெரும் காம உணர்ச்சிகளை எழுப்பிவிடுவதற்காகத் திட்டமிடப்பட்டவை, தற்கால நடனங்களில் சில இவற்றின் நினைவு தொடர்புகளை உடையனவாக இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பாக டைம் பத்திரிகை பின்வருமாறு குறிப்பிட்டது:

“டுவிஸ்ட் என்ற நடனம் முதலில் தீங்கற்ற ஒரு நடனமாக இருந்தது . . . ஆனால் [நியு யார்க்கிலுள்ள குறிப்பிட்ட ஓர் இரவு கழகத்தில்] இளைஞர்கள் இந்தத் திருகு நடனத்தைப் புதுப்பித்து ஏதோ பூர்வ கோத்திர பூப்புப் பருவ சடங்கு முறைக்கு நிகராக்கி, குறைபெருக்கிக் காட்டி கேலிக்குரியதாக்கினார்கள்.”

7சமீப ஆண்டுகளிலுள்ள பல நடனங்கள் அந்த டுவிஸ்ட் நடனத்தின் சிறிது திரிபுற்ற வகைகளாக இருந்து வருகின்றன. நடனமாடுகிறவர்கள் ஒருவரையொருவர் தொடுகிறதில்லை, ஆனால் இடுப்பும் தோள்களும் பால் சம்பந்த உணர்ச்சிகளைத் தூண்டி எழுப்புகிற முறைகளில் விரைவாகத் திருகி சுழலக் கூடும். ஓர் உடல் இந்தத் திருகு சுழற்சிகளை நடப்பிப்பதை ஓர் இளைஞன் பார்த்துக் கொண்டிருந்தால் அவனுடைய காம உணர்ச்சிகள் எளிதில் தூண்டி எழுப்பப்படக்கூடும். உதாரணமாக, ஒரு பெண், ஒருவேளை அதைப் பற்றி எதுவும் நினையாதிருக்கலாம், வெறுமென அந்த நடனத்தின் அசைவுகளால் கவனம் கவரப்பட்டவளாக இருக்கலாம். என்றபோதிலும் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களின் பேரில் அது கொள்ளும் பாதிப்பையும், அவர்கள் அவளைப் பற்றி என்ன நினைக்கக்கூடுமென்பதையும் அவள் சிந்தியாமல் அசட்டையாக இருந்துவிடக்கூடாது. நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையில் வாசகரிடமிருந்து வரும் கடிதம் குறிப்பிடுகிற பிரகாரம்: “நம்முடைய திருகு நடனக்காரரின் இளம் (மேலும் அவ்வளவு இளமையாக அல்லாத) உடல்கள் பொய்யாக நடிக்கின்றனவென்றும், அவர்களுடைய இடுப்புக்கூடும் மார்பும் வெளிப்புறத்தில் நடந்து கொள்ளுகிற முறையில் அவர்களுடைய மனம் உட்புறத்தில் நடந்து கொள்ளாதிருக்கிறதென்றும் நாம் நம்புவோமாக.”

8உனக்குத் தவறான உள்நோக்கம் எதுவும் இராத போதிலுங்கூட இப்படிப்பட்ட நடனங்களில் நீ பங்குகொள்வாயானால், மற்ற இளைஞருக்கு நீ என்ன வகையான கவர்ச்சியாக இருக்கக்கூடுமென்பதை நீ எண்ணிப்பார்ப்பது ஞானமாயிருக்கும். உதாரணமாக, உன்னிடமிருந்து அவர்கள் அடைகிற பால் சம்பந்த எழுப்புதலின் அடிப்படையின் பேரிலா, அதாவது, இறுக்கமான உடை உடுத்திக்கொண்டு தங்கள் இடுப்பை விரைவாகத் திருகி சுழற்றி பற்பல காம கருத்தறிவிப்பு சாடை காட்டுதல்களைச் செய்கிற ஆட்களிடமிருந்து அவர்கள் அடையக்கூடிய வகையான எழுப்புதலினாலேயா அவர்கள் உன்னிடமாகக் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள்? வெறுமென இந்த அடிப்படையின் பேரிலா எவரையாவது கவர நீ விரும்புகிறாய்? அல்லது நீ உண்மையில் இருக்கிறபடியான ஆளாக உன்னை விரும்புகிற வாழ்க்கையில் முக்கியமென நீ உணருகிற அந்தக் காரியங்களுக்காக, உன்னுடைய உரையாடலுக்காக உன்னை விரும்புகிற இவ்வகையான ஒருவர் உனக்கு வேண்டுமா? உனக்குக் காரியங்களைச் செய்வதில் இன்பங்கொள்ளுகிற ஒருவரிலா, அல்லது உன்னிடமிருந்து பெறக்கூடியதில் மாத்திரமே அக்கறை கொண்டிருக்கிற ஒருவரிலா, எவரில் நீ அக்கறை கொண்டிருக்கிறாய்?

9தோழர்கள் ஒருவரையொருவர் அணைத்துப் பிடித்துக் கொண்டு, உடலின் மேன்மையான அசைவுகளுக்கு இசைய பல மாதிரிகளில் காலெடுத்து வைப்பதில் அழுத்தம் வைக்கிற குழு நடனமுங்கூட, உடல் நெருங்கி தொடுவதன் காரணமாக சில சமயங்களில் பால் சம்பந்த தூண்டுதலை உண்டாக்கக்கூடும். ஆகவே, இப்படிப்பட்ட நடனங்களில் நீ பங்கு கொள்வாயானால், நடனத்திலிருந்து உணர்ச்சி சம்பந்த இன்பத்தைத் தூண்டி வளர்க்க அது போதியளவு நெருங்கியதாயில்லை என்று நீ உணரலாமென்றாலும் உன் தோழர் தகாத பிரகாரமாய் உணர்ச்சி தூண்டப்படக் கூடியவராகக்கூடுமென்பதை நீ முன் எச்சரிக்கையாய் உணர்ந்து நடந்துகொள்.

10பெரும்பான்மையான நடனங்கள் தகுந்தது என்றோ தகாதது என்றோ வகுத்து வைக்கப்படக்கூடாதவை. அவற்றில் பல வரம்பு மீறாத தகுதியான முறையிலோ அல்லது சுத்த, ஆரோக்கியகரமான பிரகாரமாய் நடந்துகொள்ளும்படி கூறும் கடவுளுடைய வார்த்தையின் அறிவுரையை மீறுகிற முறையிலோ செய்யப்படக்கூடும்.

இன்னிசையைத் தேர்ந்தெடுத்தல்

11நடனத்தைப் போலவே, நீ செவிகொடுத்துக் கேட்கும் இன்னிசையைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனமும் யோசனையும் தேவைப்படுகின்றன. ஏன்? ஏனென்றால் இன்னிசைக்கு வல்லமை இருக்கிறது. மற்ற எந்த வல்லமையைப் போலவே இதுவும் நன்மைக்காயினும் தீமைக்காயினும் சேவிக்கக்கூடும்.

12இன்னிசையின் வல்லமை எங்கிருந்து வருகிறது. மக்களில் ஏதோ ஓர் உணர்ச்சியை, மனநிலையை அல்லது ஆவியை உண்டுபண்ணும் அதன் திறமையிலிருந்து வருகிறது. இன்னிசையானது உணர்ச்சிகளைத் தணித்து அமைதிப்படுத்தக்கூடும், அல்லது அது புத்துயிரளித்து கிளர்ச்சியூட்டக்கூடும். விறுவிறுப்பான அணி இயக்க இசைக்கும் மெல்லினிமையான மாலை வரிப்பாடல் இசைக்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் அநேகமாய் “உணரக்”கூடியவர்களாக இருப்பீர்கள். இன்னிசையானது—அன்பு, கனிவு, பயபக்தி, துயரம், கோபம், பகை, காமம் ஆகிய—மனிதனின் ஒவ்வொரு உணர்ச்சி வேகத்தையும் தூண்டிவிடக்கூடும். சரித்திரம் முழுவதிலுமே மனிதர் இன்னிசையின் வல்லமையைத் தெரிந்துணர்ந்து மக்களைக் குறிப்பிட்ட வழிகளில் அசைவிக்க அதைப் பயன்படுத்தியிருக்கின்றனர். உதாரணமாக, ஃபிரென்ஞ் புரட்சியின் வெற்றிக்கு, ஓர் எழுத்தாளன் அழைக்கிற பிரகாரம் லா மார்சலே பாட்டின் “போராயுதம் தரிக்கும்படியான இரத்தத்தை உறைய செய்யும் அந்த அழைப்பே” ஓரளவுக்குக் காரணமாயிருந்ததாக அடிக்கடி சொல்லப்படுகிறது. மேலும் பள்ளிகள், விளையாட்டு போட்டிகளுக்கு முன்பாகத் தங்கள் “போர் பாடல்களை” அடிக்கடி பயன்படுத்தினர்.

13பைபிளில் இருதயம், உணர்ச்சிவசங்களோடும் உள்நோக்கத் தூண்டுதலோடும் வெகு நெருங்கிய வண்ணமாய் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது, ஆகவே கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு அறிவுரை கூறுகிறது: “காவல் செய்யவேண்டிய மற்ற எல்லாவற்றையும்விட அதிகமாக உன் இருதயத்தைப் பாதுகாத்துக்கொள், ஏனெனில் அதிலிருந்து ஜீவ ஊற்றுகள் வெளிப்படுகின்றன.” (நீதிமொழிகள் 4:23, NW) இன்னிசையின் உணர்ச்சிவச வல்லமை உண்மையாக இருப்பதனால், நம்முடைய இருதயத்தைப் பாதுகாப்பதானது நமக்கு வேண்டிய இன்னிசையை நாம் கவனமாகத் தேர்ந்தெடுப்பதை அவசியப்படுத்துகிறது.

14இன்னிசையின் அசைவிக்கும் பாதிப்பு தற்காலிகமானதென்பது உண்மையே. என்றபோதிலும் ஒரு குறிப்பிட்ட திக்கில் தீர்மானமான உந்துவித்தலைக் கொடுக்க அல்லது குறிப்பிட்ட ஒரு கவர்ச்சிகரத்துக்கு அல்லது சோதனைக்கு எதிர்த்து நிற்கும் ஆற்றலைக் குறைக்க அது அநேக தடவைகளில் நீடிப்புள்ளதாய் இருக்கிறது. பள்ளியில் நீ இரசாயனம் (வேதியல்) படித்திருப்பாயானால் “ஊக்கிகளைப்” பற்றிக் கற்றிருப்பாய். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இரசாயனங்களை ஒன்று சேர்ப்பது பெரும்பாலும் வேறு ஏதாவது ஆக்கக் கூறுவைப் பயன்படுத்துவதன் மூலம் மாத்திரமே செய்யப்படக்கூடியதாய் இருக்கிறது, இது செயல்முறையளவில் அந்த இரசாயனங்களை ஒன்றாக்குகிறது. இந்த ஆக்கக்கூறு “ஊக்கி”யாகும். நம்மெல்லாருக்கும் சில பலவீனங்களும் தவறான மனச்சாய்வுகளும் இருக்கின்றன, ஆகவே தவறான சில காரியங்களைச் செய்யும்படி சில சமயங்களில் தூண்டப்படுகிற ஆசை உணர்வடைகிறோம். ஒருவேளை தவறான செயலைச் செய்யும்படி உன்னை ஊக்குவிக்கிற சூழ்நிலைகள் வருகின்றனவென்று வைத்துக்கொள்வோம். அந்த ஆசையும் சூழ்நிலைமைகளும் ஒன்று சேரும்படி வைக்கும் அந்த “ஊக்கி” இசையாக இருக்கலாம்—இதனால் விளையும் ஒன்று, பின்னால் நீ எண்ணி மனவேதனையடைவதற்கு ஏதுவானதாயிருக்கும். வேசித்தன இழிபொருள் இலக்கியம் ஆராயும் ஓர் அரசாங்க பொறுப்பாண்மைக் குழுவுக்காக ஆராய்ச்சி செய்கிற ஒரு பெண், தன் ஆராய்ச்சியின் அடிப்படையின் பேரில் பின்வருமாறு கூறினாள்:

15“இன்னிசை, காதலையும் பாசத்தையும் எழுப்புவதற்கு பெண் பிள்ளைகளின் உணர்ச்சிவசங்களில் கிரியை செய்வதன் மூலம், அடிக்கடி காதலுக்கு ஓர் ஊக்கியாகவும், இவ்வாறாக வளர் இளம் பருவ பெண்ணில் பால் சம்பந்த உணர்ச்சியைத் தட்டியெழுப்புவதற்கு ஒரு புறத்தூண்டுதலாகவும் சேவிக்கிறது . . . இன்னிசை இந்த உணர்ச்சியை மேலுக்குக் கொண்டுவருகிறது.”

16இன்னிசை அளிக்கிற தூண்டுவிசை, தற்காலிகமாய் இருக்கிறபோதிலும், நீடித்திருக்கப்போகும் ஒரு வாழ்க்கைப் போக்குக்கு அல்லது முறைமைக்கு அல்லது அதனாலுண்டாகும் விளைவுகளுக்கு உன்னை உட்படுத்துவதற்குத் தேவையான எல்லாமாக அது சேவிக்கலாம். ஆகவே இசை உட்பட்டிருக்கையில் தெளிந்துணர்வைப் பிரயோகிப்பது உனக்குப் பயனுள்ளதாக இருக்குமல்லவா?

தீர்மானிப்பதற்குரிய பிரச்னை

17உண்மையில், எந்த இன்னிசை நல்லது கெட்டது என்று உடனடியாக அடையாளங் கண்டுகொள்ளச் செய்யும் ஒரு பட்டியலை ஒருவருமே உனக்குக் கொடுக்க முடியாது. காரணம் என்னவென்றால் நடைமுறையில் எல்லா வகைகளான இன்னிசைகளுக்குள்ளும் “எல்லாம் நல்லது” அல்லது “எல்லாம் கெட்டது” என்று நிலையாகக் குறிப்பிட்டு வைப்பதற்கு எதுவும் இல்லை. குறிப்பிட்ட இன்னிசையில் தனிப்பட்ட மதிப்பை தெரிந்துணருவதற்கு நீ உன் மனதையும் இருதயத்தையும் பயன்படுத்தி, ஏற்கெனவே ஆலோசித்தவற்றைப் போன்ற நியமங்களால் வழிநடத்தப்பட வேண்டும். உன்னுடைய தெரிந்துகொள்ளுதலானது நீ எவ்வகையான ஆள் என்பதைக் குறித்து மற்றவர்களுக்கு ஓரளவு சொல்லுகிறது.

18“வாயானது போஜனத்தை ருசி பார்க்கிறதுபோல செவியானது வார்த்தைகளைச் சோதித்துப் பார்க்கிறதல்லவா?” என்று யோபு வெகு காலத்திற்கு முன்பாகக் கேட்டான். (யோபு 12:11) அப்படியே, உன் செவியும் இன்னிசையைச் சோதித்துப் பார்க்கக்கூடும். வார்த்தைகள் இல்லாமலே, ஒரு குறிப்பிட்ட இசை எவ்வகையான மனநிலையை அல்லது ஆவியை உண்டுபண்ணும்படி திட்டமிடப்பட்டிருக்கிறது, எவ்வகை நடத்தையை ஊக்குவிக்கிறது என்பதை நீ பெரும்பாலும் சொல்லக்கூடும். சீனாய் மலையிலிருந்து கீழிறங்கி இஸ்ரவேலின் பாளையத்தை அணுகுகையில் மோசேயின் செவியில் விழுந்த இன்னிசையைக் குறித்ததில் அவ்வாறே இருந்தது. அவன் யோசுவாவிடம் சொன்னபடி: “அது ஜெயதொனியாகிய [வெற்றிப்பாட்டு] சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய [புலம்பல் பாட்டு] சத்தமும் அல்ல; [வேறு] பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது.” அந்தப் பாடல் உண்மையில் கட்டுப்பாடற்ற, விக்கிரகாராதனைக்குரிய ஒழுக்கக்கேட்டு நடத்தையைப் பிரதிபலித்தது.—யாத்திராகமம் 32:15-19, 25.

19சமீபகால உதாரணங்களைக் கவனியுங்கள். உதாரணமாக, இலக்கிய நலம் வாய்ந்த இன்னிசை, பொதுவாய் மதிப்பு வாய்ந்த, சில சமயங்களில் கம்பீரமான தொனியை உடையதாய் இருக்கிறது. அதில் பெரும்பாகம் ஒருவருடைய எண்ணங்களில் ஒருவாறு பெருந்தன்மை வாய்ந்த பாதிப்பைக் கொள்ளலாமென்றாலும், அதில் ஓரளவு வாழ்க்கையின் கீழ்த்தரமான அல்லது தன்னல பாகத்தைக் கையாளுவதாயும் அதை மேன்மைப்படுத்துவதாயுங்கூட இருக்கிறது. பிரசித்திப்பெற்ற இலக்கிய இன்னிசை இயற்றியவர்கள் ஒழுக்கக்கேடான, நெறிதவறிய வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. “வாழ்க்கையின் மேன்மையான காரியங்களை” மதித்துணருபவர்கள் என்று சொல்லப்படுகிற நேயருக்காக அவர்கள் பொதுவாய் எழுதினபோதிலும், அவர்களுடைய ஏறுமாறான நோக்கங்களும் ஏறுமாறான உணர்ச்சிவசனங்களும் இன்னிசை சிலவற்றில் வார்த்தைகளுடனோ வார்த்தைகளில்லாமலோ வெளிப்படுத்திக் காட்டப்படுவது அநேகமாய்த் தவிர்க்க முடியாததாய் இருக்கிறது. ஆகவே, நாம் நம்முடைய மனதின் மற்றும் இருதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால் “வினைமையான” இன்னிசை என்றழைக்கப்படுவதையுங்கூட சந்தேகம் எதுவுமில்லாமல் ஒப்புக்கொள்ள முடியாது.

20இலக்கிய இசைப்பாட்டுகளிலிருந்து இன்னிசை பகுப்பின் மற்ற முனையில், ஓசையில் இழுப்பிசையாக்கும் பேரொலி மற்றும் குலுக்கு இசையை (ஜாஸ் அண்ட் ராக் மியூஸிக்) நாம் காண்கிறோம். இங்கேயுங்கூட இனிமை வாய்ந்ததாயும் மிதமானதாயும் இருக்கிற ஓரளவு இசையை ஒருவன் காணக்கூடும். ஆனால் இதில் சில, கட்டுப்பாடற்றதாயும் உரத்தக் கரகரப்பொலியுடையதாயும் இருக்கின்றன. இதன் காரணமாகவே இசைக்கலை அறிஞர்தாமேயும், “மென்மையான” ஜாஸ் அண்ட் ராக் இசையையும் “கொந்தளிப்பான” “கடினமான” அல்லது “காரமான” ஜாஸ் அண்ட் ராக் இசையையும் வேறுபடுத்திக் காட்டுகிறார்கள். இசை என்ன வகையான நடத்தையை முன்னேற்றுவிக்கிறதென்பதை நீ சொல்லக்கூடியவனாய்[வளாய்] இருக்க வேண்டும்—உன் செவியும் உன் மனதும் இருதயமும் இதை உனக்குச் சொல்லவேண்டும். குறிப்பிட்ட ஓர் இசையின் சொற்கள் அல்லது தொனி சில சமயங்களில் அவ்வளவு வெளிப்படையாய் இருப்பதனால் மக்கள் அதைக் குறிப்பிட்ட மாதிரியான நடத்தையோடு அல்லது வகையான ஆட்களோடு சுலபமாய் இணைக்கிறார்கள். உதாரணமாக, பைபிள் “மதுபானம் பண்ணுகிறவர்களின் பாடல்” “வேசியின் பாடல்” என்பவற்றைப் பற்றி பேசுகிறது. (சங்கீதம் 69:12; ஏசாயா 23:15, 16) இந்நாளைப் பற்றியதென்ன?

21உதாரணமாக, செய்தித்தாளில் நீ இசையரங்கு நிகழ்ச்சி அல்லது விழாக் கொண்டாட்டத்தைப் பற்றி வாசித்து, அதில் மக்கள் கூச்சலிடுதல், இளம் பெண்கள் மயக்கமடைந்து விழுதல், போதை மருந்துகளின் உபயோகம், அந்த அரங்கம் பாழாக்கப்படாதபடி போலீஸ் கொண்டுவரப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது ஆகியவற்றைப் பற்றி அந்த அறிக்கைச் சொல்வதாகக் காண்கிறாயென்றால்—அந்த நிகழ்ச்சியில் என்ன வகையான இசை உட்பட்டிருந்ததென்று நீ நினைக்கிறாய்? பிரசித்திப்பெற்ற ஓர் இளம் இசைப் பாடகன் அல்லது இசைக் கலைஞன் மட்டுக்குமீறி போதை மருந்தை உபயோகித்ததினால் செத்ததாக நீ கேள்விப்படுகிறாயென்றால்—அவன் அல்லது அவள் என்னவகையான இசையில் தனிப்பயிற்சி பெற்றிருப்பானென்று நீ நினைக்கிறாய்?

22நீ ஒருவேளை அறிந்திருக்கலாம், பல இளைஞர் ‘ராக்’ இசையினிடமாகக் கவர்ந்திழுக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அதன் உணர்ச்சிப் பாடல்கள், தங்களைச் சுற்றியுள்ள உலகத்தின் உண்மை நிலைகளையும் பிரச்னைகளையும் விவரிக்கின்றனவென்று அவர்கள் நம்புகிறார்கள். ஒருவேளை மக்கள் பாராட்டும் எந்த வகையான இசையைப் பார்க்கிலும் அதிகமாக ராக் இசை, வளர்ச்சி பிரச்னைகள், சந்ததி இடைவெளி, போதை மருந்துகள், பால், சமுதாய உரிமைகள், கருத்துவேறுபாடு, வறுமை, போர், இன்னும் இவற்றைப்போன்ற விவாதப் பொருட்களின்பேரில் ஒரு செய்தியை நன்றாக அறிவுறுத்த முயற்சி செய்யலாம். சமுதாய அநீதிகளின்பேரில் பல இளைஞரின் மனக்குறையையும் மேம்பட்ட ஓர் உலகத்திற்காக அவர்கள் கொண்டுள்ள புதுக் கருத்துக்களையும் அது வெளிப்படுத்திக் காட்ட முயற்சி செய்யலாம். ஆனால் பொதுவான பாதிப்பு என்னவாக இருந்துவந்திருக்கிறது? இளைஞர் பெரும்பான்மையருக்கு அது என்ன செய்திருக்கிறது? அதன் தத்துவங்கள் என்ன உண்மையான பிரச்னைத் தீர்ப்புகளை அவர்களுக்கு நிறைவேற்றியிருக்கின்றன? இப்படிப்பட்ட இசை உண்மைகளைச் சரியான நிலைக்குக் கொண்டுவரும்படி திட்டமிடப்பட்டிருந்தால் அதில் ஏன் அவ்வளவு பெரும்பாகம் போதை மருந்து சம்பந்தப்பட்டதாயிருக்கிறது, ஏன் சில உணர்ச்சிப் பாடல்கள் போதை மருந்துகள் உட்கொள்ளுகிறவர்களுக்கு மாத்திரமே விளங்கத்தக்கவையாக இருக்கின்றன? இவை ஆழ்ந்து யோசிக்கவேண்டிய கேள்விகள்.

23ஆகையால் நீ எந்த இன்னிசையைத் தெரிந்து கொள்ளுகிறாய் என்பது சாதாரண காரியமல்ல. பொதுவாக மக்கள் பாராட்டுவதை, பெரும்பான்மையருக்குக் கவர்ச்சியூட்டுவதாக இருப்பதைத் தெரிந்துகொண்டு, வெறுமென கும்பலோடு ஒத்திணங்கிச் செல்வதன் மூலம், மற்றவர்கள் உனக்காகத் தீர்மானிக்க நீ விடலாம். அல்லது கடவுளுடைய வார்த்தையில் காணப்படுகிற நிலைத்திருக்கும் மேம்பட்ட உன்னத ஞானத்தால் வழிநடத்தப்பட்டு, உனக்காக நீயே யோசித்து தெரிந்துகொள்வதில் கவனத்தைப் பயன்படுத்தலாம். பிரசங்கி 7:5 பின்வருமாறு சொல்லுகிறது: “ஒருவன் மூடரின் பாட்டைக் கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.” “மூடத்தனம்” என்று பைபிள் பேசுகிற இது வெறும் மனசம்பந்த மடமையை அல்ல, ஒழுக்கச் சம்பந்தமான மூடத்தனத்தை, ஆம், எதிர்காலத்தில் வெறும் தொந்தரவையே கொண்டுவரக்கூடிய ஒரு போக்கைப் பின்பற்றுவதைக் குறிக்கிறது.

24சத்தியமாயும் சரியானதாயும் இருக்கிறதற்கு எதிர்மாறாகச் சொல்லுகிற சில சொற்கள் அடங்கிய அல்லது புலனுணர்ச்சியைத் தூண்டும், கட்டுப்பாடற்ற தொனியைக் கொண்டுள்ள இசைக்கு நீ செவிகொடுத்துக் கேட்டு அதே சமயத்தில் அதனால் பாதிக்கப்படாமல் இருக்கலாம் என்பதாக நீ ஒருவேளை உணரக்கூடும். நீ பங்குகொள்ளும் நடனத்தைக் குறித்ததிலும் நீ அவ்வாறே உணரக்கூடும். என்றாலும் மற்றவர்கள் பேரில் நீ எவ்வகை செல்வாக்குச் செலுத்துகிறவனாய்[வளாய்] இருக்கிறாய்? மற்றவர்கள் இடறுவதற்குத் தான் காரணமாவதைத் தவிர்க்கக்கூடுமானால் மாம்சம் சாப்பிடுவதைப் போன்ற சரியான காரியங்களையுங்கூட தான் செய்யாமல் விட்டுவிட மனமுள்ளவனாக இருப்பதாய்ச் சொன்ன அப்போஸ்தலனாகிய பவுலைப்போல் நீ உணருகிறாயா? நீ தெரிந்துகொள்ளுகிற இன்னிசை எவ்வகையான ஆட்களோடு உன்னை அடையாளங் காட்டுகிறது?

25அப்படியானால் நீ செவிகொடுத்துக் கேட்கும் இன்னிசையையும், நீ ஈடுபடும் நடனங்களையும் பற்றிய உன்னுடைய தெரிவு, நீ வெறுமென “நல்ல நேரத்தில்” தான் அக்கறையுடையவனாய்[ளாய்] இருக்கிறாயா அல்லது கடவுளுடைய தயவுக்குள் நித்தியமாய் வாழும் ஒரு நல்ல வாழ்க்கையில் அக்கறையுள்ளவனாய்[ளாய்] இருக்கிறாயா என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

[கேள்விகள்]

1-3. (எ) நம்முடைய இயற்கைச் சுற்றுப்புறச் சூழலில் சிருஷ்டிகர் இன்னிசையை அமைத்திருக்கிறார் என்பது எவ்வகையில் உண்மையாயிருக்கிறது? (பி) நடனத்தைப் பற்றி பைபிள் சம்மதத்தோடு பேசுகிறதென்பதைக் காட்ட உதாரணங்கள் கொடு.

4-6. (எ) எது சில நடனங்களை கிறிஸ்தவர்களுக்கு வெறுப்புக்குரியதாகச் செய்யக்கூடும்? (கொலோசெயர் 3:5, 6) (பி) தற்கால நடனங்கள் சில ஏன் பூர்வ கருவள நடனங்களுக்கு ஒப்பிடப்பட்டிருக்கின்றன?

7-10. (எ) இப்படிப்பட்ட நடனத்தில் ஒருவன் பங்குகொண்டால், எந்த அடிப்படையின்பேரில் மற்றவர்கள் அந்தத் தனி ஆளிடம் கவர்ந்திழுக்கப்படுவார்கள்? எதிர் பாலினத்தவரை இந்த அடிப்படையின்பேரில் கவர்ந்திழுக்க நீ விரும்புகிறாயா? (பி) குழு நடனத்திலுங்கூட ஏன் எச்சரிக்கை தேவைப்படுகிறது?

11, 12. இசை எப்படி வல்லமையைச் செலுத்துகிறது? உதாரணங்களைக் கொடு.

13-16. (எ) ஒருவன் இசையைத் தேர்ந்தெடுப்பதோடு நீதிமொழிகள் 4:23-ல் உள்ள அறிவுரை எப்படிச் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது? (பி) இசை எப்படி ஓர் “ஊக்கி”யாக இருந்து, சில சமயங்களில் நிலையான தீங்கு விளைவிக்கக்கூடும்?

17, 18. ஒரு பகுதி இன்னிசையைக் கேட்பதன் மூலம் அது உனக்கு நன்மைக்கான ஒன்றா அல்லது தீமைக்கான ஒன்றாவென்று நீ எப்படித் தீர்மானிக்கக்கூடும்?

19-22. (எ) இலக்கிய நலம் வாய்ந்த இன்னிசையை விரும்புகிறவர்கள் எதற்கு எதிராகத் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்? (பி) ஜாஸ் அண்ட் ராக் இசையில் சிலவற்றின் பாதிப்பைக் குறித்ததில், என்ன உண்மைகள் ஆழ்ந்து யோசிப்பதற்குத் தகுந்தவையாக இருக்கின்றன?

23-25. (எ) இன்னிசையின் சம்பந்தமாக, பிரசங்கி 7:5-ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரையின் குறிப்பு என்ன? (பி) இன்னிசையையும் நடனங்களையும் தேர்ந்தெடுக்கையில் யாரை நாம் கவனத்தில் வைக்கவேண்டும்? ஏன்? (1 கொரிந்தியர் 10:31-33; பிலிப்பியர் 1:9, 10) (சி) இசையையும் நடனத்தையும் குறித்ததில் நாம் தெரிவு செய்வது ஏன் சாதாரண காரியமல்ல?

[பக்கம் 124-ன் படம்]

நடனம் ஒரு நீண்டகால சரித்திரத்தைக் கொண்டிருக்கிறது