வீட்டில் உனக்குச் சலிப்புண்டாகிறதா?
அதிகாரம் 9
வீட்டில் உனக்குச் சலிப்புண்டாகிறதா?
எந்த இரண்டு குடும்பங்களும் ஒரே மாதிரியாய் இருக்கிறதில்லை, என்றபோதிலும் இந்தச் சலிப்பு பிரச்னை இன்று பல இளைஞருக்குப் பொதுவாய் இருக்கிறது. கடந்த காலத்தில் இது இவ்வாறு இவ்வளவு அதிகமாய் இருந்திருப்பதாகத் தோன்றுகிறதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பாக, குடும்பங்கள் பல காரியங்களை ஒன்றாகச் சேர்ந்து செய்தார்கள், ஆகவே மிக நெருங்க இணைக்கப்பட்டிருந்தார்கள். இன்று பல இளைஞருக்கு வீடு வெறும் ஒரு கட்டடமாக சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் ஓர் இடமாக இருக்கிறது.
2சலிப்படைவது உனக்கு எப்பொழுதாவது பிரச்னையாக இருக்கிறதா? அப்படியானால், அது, உன் வீட்டில் நீ மகிழ்ச்சியடைவதை வெகுவாய்க் குறைத்துப் போடக்கூடும். சில சமயங்களில் ஒருவேளை, நீ உன் சொந்தமாய் எங்கேயாவது சென்று உன் சொந்த வழியில் உற்சாகத்தைக் கொடுக்கும் ஒரு வாழ்க்கையைக் கண்டடைய வேண்டும் என்பது போல் நீ உணரக்கூடும்.
3ஒரு காலத்தில் இது இளமையில் இயல்பாக ஏற்படும் ஒரு வளர்ச்சியாகும். நீ வளர்ந்து முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கையில், இயல்பாகவே உன் நோக்கு நிலையை விரிவாக்குகிறாய். காரியங்களை அறிய ஆர்வமுள்ள உன் இயல்பு வளருகிறது. புதிய காரியங்களை முயன்று பார்ப்பதில் சோதனை செய்து பார்ப்பதில் நீ அக்கறையுள்ளவனாய் இருக்கிறாய். இந்த விரிவான நோக்குநிலையை நீ எப்படி வெளிப்படுத்தப்போகிறாய்? என்பதே கேள்வியாய் இருக்கிறது. வீட்டில் சலிப்புற்றுப்போகும்படி அது உன்னைச் செய்விக்க வேண்டுமா அல்லது பெற்றோரின் வழிநடத்துதலையும் கட்டுப்பாட்டையும் வெறுக்கும்படி உன்னைச் செய்விக்க வேண்டுமா? பெரும்பாலும் சலிப்படைவதன் உண்மையான காரணமென்ன, அதைப் போக்குவதற்கான பரிகாரம் என்ன?
மனப்பான்மை பெரும் வேறுபாட்டை உண்டுபண்ணக்கூடும்
4மெய்யாகவே, சில வீடுகளில், சமாதானமும் மனத்திருப்தியும் உண்டாவதைக்
கடினமாக்குகிற உண்மையான பிரச்னைகள் இருக்கின்றன. என்றாலும், பெரும்பாலும் உன்னுடைய சொந்த மனப்பான்மையே, உன் வீட்டு வாழ்க்கையைச் சந்தோஷமாயிருப்பதாக அல்லது சலிப்பாயிருப்பதாக நீ காண்பதைத் தீர்மானிக்கிறது. ஏன் அப்படி? ஏனென்றால் அதே மாதிரியான சூழ்நிலைமைகளுக்குள், சில இளைஞர் வாழ்க்கையில் சந்தோஷமனுபவிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள், மற்றவர்கள் அதே சந்தர்ப்ப நிலையில் சலிப்புற்றவர்களாக இருக்கிறார்கள். வேறுபாடு என்னவென்றால் சிலருக்கு தங்கள் வீட்டு வாழ்க்கையைப் பற்றி நல்ல மனப்பான்மை இருப்பதே. ஆகையால் சலிப்படைவதையும், மற்றும் பல பிரச்னைகளையுங்கூட சமாளிப்பது, பெரும்பாலும் இக்காரியங்களினிடமாகக் கொண்டுள்ள உன் சொந்த மனப்பான்மையின் பேரில் சார்ந்திருக்கிறது.5இதைப் பின்வரும் முறையில் நோக்கிப் பார்: ஒவ்வொரு குடும்பத்துக்கும் அதனதற்குரிய ஒரு தனித் தன்மை இருக்கிறது. இது ஒரு தனி ஆளால் உண்டாக்கப்படுகிறதில்லை, ஆனால் குடும்பத்தின் இந்தக் கூட்டு தனித்தன்மைக்கு ஒவ்வொருவரும் ஏதோ வகையில் தன் பங்கை அளிக்கின்றனர். உன்னுடைய குடும்பம் எவ்வாறு இருக்கிறது? உன்னுடைய
வீடு அனலுள்ள மகிழ்ச்சிகரமான இடமாய் இருக்கிறதா? ஒருவரிலொருவர் மகிழ்ச்சியடைகிறீர்களா, சாப்பாட்டு நேரங்களில் உற்சாகமூட்டும் வண்ணமாய்க் கலந்து பேசிக் கொள்கிறீர்களா, ஒன்று சேர்ந்தும் ஒருவருக்கொருவரும் காரியங்களைச் செய்வதில் இன்பத்தைக் கண்டடைகிறீர்களா? நீங்கள் ஒருவரிலொருவர் சற்றும் அக்கறையில்லாமல், ஒவ்வொருவரும் தனித்தனியே அவரவர் வழியில் செல்லுகிறீர்களா? இதில் எந்த முறையை நீ விரும்புகிறாய்?6நீ விரும்புகிறவண்ணமாய்க் காரியங்கள் இல்லை என்றால் குற்றப் பொறுப்பை மற்றவர்கள்மேல் போடுவது எளிது. ஆனால் குறை கூறுவதற்கு முன்பாகப் பின்வருமாறு முதலாவது கேட்டுக்கொள்வது நல்லது: “குடும்பத்தன்மைக்கும் ஆவிக்கும் என் பங்காக நான் என்ன செய்கிறேன்? முன்னேற்றத்தைக் கொண்டுவருவதற்கு நான் எவ்வளவு முயற்சி எடுக்கிறேன்?” ஒரு கப்பல் புயல் வீசி கொந்தளிக்கும் கடலில் கடுமுயற்சியுடன் சென்று கொண்டிருக்கையில் ஒரு கப்பலோட்டி ஒரு மூலையில் உட்கார்ந்து முறையிட்டுக் கொண்டிருப்பது எவ்வித உதவியாயும் இராது. “எல்லா கைகளும் கப்பல் தளமேடையில்” என்பதுபோல் இது இருக்கிறது; விரும்பப்படும் துறைமுகத்தை அடைவதற்கு அந்தக் கப்பலை அந்தக் கொந்தளிக்கும் கடலினூடே தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்க வைக்க எல்லாரும் துணை நின்று உதவி செய்யும் காரியமாக இது இருக்கிறது.
7சலிப்புற்ற இளைஞர்கள், செய்யும்படி தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காரியங்களின் மதிப்பைக் காண பெரும்பாலும் தவறுகின்றனர். பள்ளியிலோ, வீட்டிலோ, வேலை செய்யும் இடத்திலோ, உனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகள் என்னவாக இருந்தாலும்சரி, அவை இப்பொழுதும் வரப்போகிற நாட்களிலும், உன் வாழ்க்கையையும், மேலும் மற்றவர்களின் வாழ்க்கையையுங்கூட எப்படிப் பாதிக்கின்றன என்பதைக் காண முயற்சி செய். இதை நீ செய்யக்கூடுமானால், நியமிக்கப்பட்ட அந்த வேலைகளை ஒரு குறிக்கோளோடு நீ செய்யக்கூடியவனாய் இருப்பாய். இது வாழ்க்கையில் சலிப்புறுவதை மாற்றி வாழ்க்கையில் மகிழ்ச்சியடையும்படி செய்யக்கூடும்.
8சலிப்படைவதாக நீ காண்கிற அதே வேலைகள்தாமே, எதிர்காலத்தில் வாழ்க்கையில் நீ வெற்றி காண்பதற்குப் பெரும் பங்கை வகிக்கும் பண்புகளையும் பழக்கவழக்கங்களையும் உன்னில் கட்டியமைத்து வரக்கூடும். உதாரணமாக: நீ இளைஞனாய் இருக்கிறாயென்றால், ஒரு மாதிரி ஆகாய விமானத்தை நீ எப்பொழுதாவது செய்திருக்கிறாயா? முதலாவதாக, அதன் கட்டமைப்புச் சட்டத்தின் பல துண்டுகளை நீ ஒன்றாக இணைக்கவேண்டும், பின்பு அந்தச் சட்டத்தை மூட வேண்டும். செய்து முடிக்கப்பட்ட பொருளில் இந்தச் சட்டம் வெளியே காணப்படாதிருக்கும். என்றாலும் அந்தச் சட்டம் கொடுத்த பலமும் திட்ட உருவும் இல்லாமல்,
அந்த ஆகாய விமானம் பயனற்றதாய் இருக்கும். அல்லது நீ ஓர் இளம் பெண்ணாக இருக்கிறாயென்றால், நீ எப்பொழுதாவது ஒரு சட்டை தைத்திருக்கிறாயா? அதில் நீ துணி விளிம்புகளை இணைத்து தைத்த தையல்கள், அந்த உடையைத் தைத்து முடித்தபின் ஒருவேளை வெளியில் காணப்பட்டுமிராது, என்றாலும் அந்த மறைந்து கிடந்த தையல்கள் இல்லாமல் ஒரு சட்டையே இருந்திராது.9பள்ளியில் நீ கற்கிற அல்லது வீட்டில் நீ செய்யும் வேலைகளால் கற்றுக்கொள்ளுகிற காரியங்கள் எல்லாவற்றைக் குறித்ததிலும் இது உண்மையாயிருக்கிறது. இது எதிர்கால வெற்றிக்கு அஸ்திபாரம் போடுவதற்கு உதவியாய் இருக்கக்கூடிய ஓர் எல்லா மடங்கிய மாதிரியின் ஒரு பாகமாய் இருக்கிறது. சாதாரணமான, அநேகமாய்க் கிளர்ச்சியூட்டாத வேலைகளை அல்லது அனுதின வீட்டு வேலைகளைச் செய்வதன் மூலம், திரும்பத் திரும்பச் செய்யவேண்டியதாய் இருந்தாலும், இவற்றின் மூலம் நீ சகிப்புத் தன்மையையும் தீர்மான உறுதியையும் கற்று உட்புற பலத்தை அடையக்கூடும்.
தானாக முன்வந்து முயலுவதும் விரிவான அக்கறையும்
10ஓய்வுநேர பகுதிகளின்போது, “செய்வதற்கு ஒன்றுமில்லை,” என்ற முறையீடு அடிக்கடி கேட்கப்படுகிறது. பெரும்பாலும் இந்தப் பிரச்னையானது செய்வதற்கு உற்சாகமும் பயனுமுள்ள காரியங்கள் இல்லாமல் இருப்பதல்ல, ஆனால் தானாக முன்வந்து முயலுவதும், கற்பனை செய்து பார்ப்பதும் யோசனையும் இல்லாதிருப்பதேயாகும். அல்லது நமக்கு அக்கறையூட்டக்கூடிய காரியங்களின் பரப்பெல்லை வெகு குறுகியதாக இருப்பதாய் நம்முடைய குறைகூறல் காண்பிக்கக்கூடும்.
11தானாக முன்வந்து முயலும்படி, முக்கியமாய் வீட்டில் அவ்வாறு செய்யும்படி ஊக்கமூட்டுவதற்கு இந்தத் தற்போதைய ஒழுங்குமுறை அதிகம் செய்கிறதில்லை. இன்று இளைஞருங்கூட, சுறுசுறுப்பாய்ச் செயலில் பங்குகொள்ளுகிறவர்களாக இருப்பதற்கு மாறாக உட்கார்ந்து பார்ப்பவர்களாக இருப்பதற்கே பழக்கப்பட்டவர்களாகியிருக்கின்றனர். நீயுங்கூட இவ்வாறே வீட்டில் பேரளவான நேரத்தை, ஓடும் படங்கள், டெலிவிஷன் நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பதில், பதிவு செய்யப்பட்ட இசைகளைக் கேட்டுக் கொண்டிருப்பதில் அல்லது ஏதாவது விளையாட்டுப் போட்டியில் மற்றவர்கள் விளையாடுவதைக் கவனித்துக்கொண்டிருப்பதில் செலவிடுகிறாயா?
12காரியங்களை நீயே செய்வதைப் பார்க்கிலும், அல்லது காரியங்களை எப்படிச் செய்வது என்று கற்றுக்கொள்வதைப் பார்க்கிலும் இது மிகவும் எளிதே. ஆனால் காலம் செல்லச் செல்ல இதுவுங்கூட சலிப்புண்டாக்குவதாய் இருக்கும். இது, பொழுதுபோக்குக்காக நீ மற்றவர்கள்மேல் வெகுவாய்ச்
சார்ந்திருக்கும்படி செய்கிறது; வாழ்க்கையை உற்சாகமுள்ளதாக்க நீயே காரியங்களைச் செய்யக்கூடாதவனாக ஆக்கிவிடுகிறது. குழந்தைகளுக்கு இது சரிதான்—ஆனால் முழு வளர்ச்சிக்கு வளர்ந்து கொண்டிருக்கும் இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது சரியல்ல.13உன் அக்கறைக்குரிய பரப்பெல்லை எவ்வளவு விரிவாக இருக்கிறது? பயனுள்ள செயல்களும் ஆராய்ந்தறிவதற்கு இருக்கும் அறிவு எல்லைகளுமானவற்றின் பட்டியல் ஏறக்குறைய வரம்பற்றதாய் இருக்கிறது. வாசிப்பதற்கு, டெலிவிஷனைக் கவனித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் அதிக முயற்சி தேவைப்படுகிறது. என்றாலும் வாசிப்பது அதைப் பார்க்கிலும் மிக உயர்ந்த ஆதாயப் பங்குகளை அளிக்கிறது. புத்தகங்களில் எழுதப்பட்டிராத செயல் துறையோ, தனித் துறையோ, தொழில் துறையோ, இடமோ, மக்களோ, மிருகங்களோ இல்லை. நீ எவ்வளவு அதிகமாய் வாசிக்கிறாயோ அவ்வளவு அதிகமாய் உன்னுடைய வாசிக்கும் இன்ப அனுபவமும் பெருகும், அறிவை உட்கிரகிக்கும் உன் திறமையும் மேம்படும். ஆனால் வெறுமென ‘நேரத்தைக் கொல்லுவதற்காக’ வாசிப்பது போதுமானதல்ல. எது பயன் மதிப்புள்ளதாய் இருக்கப்போகிறது என்பதை நீ தீர்மானிக்க வேண்டும். அப்பொழுது நீ மனதில் ஓர் இலக்குடன், அதாவது, காரியங்களைச் செய்யும்படி உன்னைத் தகுதியாக்குவதன் மூலம் இப்பொழுதும் எதிர்காலத்திலும் உன் வாழ்க்கையை வளமாக்கக்கூடிய ஓர் இலக்குடன் நீ வாசிக்கலாம்.
14நிச்சயமாகவே, மற்றவர்கள் சில காரியங்களைச் செய்வதில் மகிழ்ச்சியடைவார்கள், ஆனால் நமக்கு அவற்றைச் செய்வதில் மகிழ்ச்சியிராது. மரம், உலோகம் ஆகியவற்றில் வேலை செய்யக் கற்றுக்கொள்வது சிலருக்கு மகிழ்ச்சி தரும், மற்றும் சிலருக்குப் புகைப்படம் சம்பந்தப்பட்ட வேலை அல்லது தோட்ட வேலை ஆகியவை விருப்பமாயிருக்கும். சில பெண்களுக்குச் சமைப்பது அல்லது அப்பம் சுடுவது பிரியமாயிருக்கும், மற்றும் சிலருக்கு தையல் அல்லது முடி அலங்காரம் செய்தல் விருப்பமாயிருக்கும். எப்படியிருந்தாலும் வீட்டிலோ மற்ற இடங்களிலோ புதிய காரியங்களைச் செய்ய கற்றுக்கொள்வதும், திறம்பட்டதன்மை வாய்ந்த வேலையைச் செய்யும்படி திறமையை விருத்தி செய்வதும் மனத் திருப்தியைக் கொண்டுவரும், வாழ்க்கையை உற்சாகமுள்ளதாக வைத்துவரும்.
15உன்னுடைய சொந்த அக்கறையில் ஏதாவது செய்வதைப் பற்றி உற்சாகங் கொள்வது உனக்குக் கடினமாகக் காண்பாயானால், வேறு
எவருக்காவது எதையாவது செய்யலாமல்லவா? இதை வீட்டிலேயே தொடங்கலாமே. உனக்காகச் செய்கையில் ஒருவேளை உனக்கு கவர்ச்சிகரமாக இராத ஒரு வேலை மற்றொருவருக்காக—குடும்ப அங்கத்தினர் ஒருவருக்காக ஒரு நண்பனுக்காக, முக்கியமாய் தேவையில் இருக்கிற ஒருவருக்காக—அதைச் செய்கையில் உண்மையான உற்சாகமூட்டுவதாக இருக்கக்கூடும். இது மிக ஆழ்ந்த வண்ணமாய்த் திருப்தியைக் கொடுக்கக்கூடும், மேலும் இப்படிப்பட்ட வாய்ப்புகளுக்கு முடிவே இல்லை. எதையாவது செய்யும்படி கேட்கப்படும்வரையில் காத்திராதே. நீ செய்வது மற்றொரு ஆளால் எதிர்பார்க்கப்படாதிருக்கையில், அந்தக் கூடுதலான ஆச்சரியம் உன்னுடைய மகிழ்ச்சியையுங்கூட வெகுவாய்ப் பெருகச் செய்யும். இதைச் செய்து பார்.16பின்வரும் இது மற்றவர்களுக்குக் காரியங்களைச் செய்வதன் மூலம் நீ பலனடையக்கூடிய மற்றொரு முறையாகும். ஒரு புதிய ஒழுங்கைப் பற்றிய கடவுளுடைய வாக்கில் உண்மையாய் உள்ளக் கிளர்ச்சியடைந்திருக்கிற இளைஞர்கள், இந்த நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது தங்கள் வாழ்க்கைக்கு மேலுமாக அர்த்தத்தைக் கூட்டுவதாகக் காண்கின்றனர். சத்தியத்திற்காகப் பசியுள்ளவர்களாய் இருக்கிறவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர்களாக இருப்பது நிறைவாய்ப் பலன் தருவதாய் இருக்கிறது. சத்தியத்தை வேண்டாமென்று தள்ளுகிறவர்கள் இவர்களைப் பார்க்கிலும் அதிக எண்ணிக்கையானவர்களாக இருக்கிறபோதிலும் இது இந்த வேலையின் ஊக்கமூட்டும் தூண்டுதலை மந்தமாக்குகிறதில்லை. அதற்குப் பதிலாக இதை இன்னும் சவாலுள்ளதாக்குகிறது. இதற்குச் சகிப்புத் தன்மையும் விசுவாசமும் வேண்டும். சலிப்பை மேற்கொள்வதற்கு இவை பெரும் அடிப்படைகளாக இருக்கின்றன.
17கடவுளுக்கும் அவரைச் சேவிக்கிறவர்களுக்கும் செய்ய வேண்டிய நம்முடைய சேவையைப்பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு சொல்லுகிறான்: “நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக, நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம்.” (கலாத்தியர் 6:9) இவ்வாறே, ஏதோ உண்மையான நோக்கமும் மதிப்புமுள்ள திறமைகளை முன்னேற்றுவிக்க நீ தேடுகையில், உன் பிரயாசங்களின் பலனை அறுக்கத் தொடங்கும்வரையில் நீ விடா முயற்சியுடன் உழைக்க வேண்டும்.
18பின்பு, நாளடைவில், வேறு என்ன திறமைகளை முன்னேற்றுவிக்கலாமென்பதை ஆராய்ந்து விரிவாக்கலாம்—இதன் விளைவாக நீ அதிக மேம்பட்ட, மேலும் உற்சாகமும் பயனுமுள்ள ஆளாவாய். நீ அருகில் இருந்துகொண்டிருப்பதில் உன் பெற்றோரும் வீட்டிலுள்ள மற்றவர்களும் மகிழ்ச்சியடைவார்கள், வீட்டில் இருப்பது உனக்கும் சலிப்பு உண்டாக்காது.
[கேள்விகள்]
1-3. (எ) இன்று பல வீடுகளில் சலிப்புக்குக் காரணமாயிருப்பது எது என்பதாக நீ நினைக்கிறாய்? (பி) உன் வீட்டைவிட்டு வெளியில் அக்கறைகளை வளர்க்கத் தொடங்குவது கட்டாயமாகத் தவறுதானா?
4-6. (எ) ஒருவனுடைய சொந்த மனப்பான்மைதானே அவன் சலிப்புற்றிருக்கிறானா இல்லையா என்பதைப் பேரளவாக எப்படித் தீர்மானிக்கிறது? (பி) உன் வீட்டில் ஆவியை அல்லது பொது மனநிலையை முன்னேற்றுவிக்க நீ தானே என்ன செய்யக்கூடும்? (பிலிப்பியர் 2:3, 4)
7-9. நாம் செய்ய வேண்டியதாய் இருக்கிற எந்த வேலையிலும் சலிப்பை அடக்கி ஆட்கொள்வதற்கு எது நமக்கு உதவி செய்யக்கூடும்?
10-12. (எ) “செய்வதற்கு ஒன்றும் இல்லை” என்று ஒருவன் சொல்லுகையில் சாதாரணமாய் அந்த ஆளின் பங்கில் எது குறைவுபடுகிறது? (பி) என்ன வகையான பொழுதுபோக்கு இந்தக் குறைவுக்குக் காரணமாயிருக்கிறது?
13, 14. உன் பங்கில் நீ தானாக முன்வந்து முயற்சி எடுக்கவேண்டியதாய் இருக்கிற நீ விரும்பி அனுபவிக்கும் சில செயல்கள் யாவை?
15-18. (எ) மற்ற ஆட்களுக்காகக் காரியங்களைச் செய்வதை ஒருவன் பழக்கமாக்கிக் கொள்கையில் அவனுடைய சொந்த வாழ்க்கைத்தானே எப்படிப் பாதிக்கப்படுகிறது? (அப்போஸ்தலர் 20:35) (பி) மற்ற ஆட்களுக்காக ஒரு கிறிஸ்தவ இளைஞன் செய்யக்கூடிய மிக அதிக பயனுள்ள காரியங்களில் ஒன்று என்ன? (மத்தேயு 24:14; 1 தீமோத்தேயு 4:16) (சி) பயனுள்ள எந்தப் பிரயாசத்திலும், ஏன் விடா முயற்சி முக்கியமானது?
[பக்கம் 68-ன் படம்]
கடலில் கொந்தளிப்பு முழு ஒத்துழைப்பைத் தேவைப்படுத்துகிறது. வீட்டில் கொந்தளிப்பு ஏற்படும்போது நிலைமையை அமைதியான திசை நோக்கித் திருப்பிட உதவுகிறீர்களா?