தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்வது ஏன் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது
அதிகாரம் 13
தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்வது ஏன் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது
யெகோவா ‘நித்தியானந்த தேவன்,’ நீங்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழவேண்டும் என்று அவர் விரும்புகிறார். (1 தீமோத்தேயு 1:11) அவருடைய வழியில் நடப்பதன் மூலம், நீங்கள் நன்மையடைந்து, வற்றாத ஒரு நதியைப் போன்று ஆழமாகவும் நிலையாகவும் இருக்கும் மன அமைதியை அனுபவிக்கலாம். கடவுளுடைய வழியில் நடப்பது ‘சமுத்திரத்தின் அலைகளைப்போல,’ தொடர்ந்து நீதியின் செயல்களைச் செய்துகொண்டிருக்கும்படியும் ஒருவரைத் தூண்டுகிறது. இது உண்மையான மகிழ்ச்சியை கொண்டுவருகிறது—ஏசாயா 48:17, 18.
2‘சரியானதைச் செய்வதற்காக ஆட்கள் சில சமயங்களில் துன்பமனுபவிக்கின்றனரே,’ என்பதாக சிலர் ஆட்சேபிக்கலாம். உண்மைதான், இதுவே இயேசுவின் அப்போஸ்தலருக்கு சம்பவித்தது. என்றபோதிலும், துன்புறுத்தப்பட்டாலும், அவர்கள் சந்தோஷமாய் புறப்பட்டுசென்று ‘கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள்.’ (அப்போஸ்தலர் 5:40-42, NW) நாம் இதிலிருந்து முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்வது நாம் எப்போதும் நன்றாக நடத்தப்படுவோம் என்பதற்கு உத்தரவாதமளிப்பதில்லை என்பது ஒரு பாடமாகும். “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்,” என்பதாக அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 தீமோத்தேயு 3:12) இதற்கு காரணம், தேவபக்தியாய் வாழ்பவர்களுக்கு விரோதமாக சாத்தானும் இருக்கிறான், அவனுடைய உலகமும் இருக்கிறது. (யோவான் 15:18, 19; 1 பேதுரு 5:8) ஆனால் உண்மையான மகிழ்ச்சி புறம்பான காரியங்களைச் சார்ந்திருப்பதில்லை. மாறாக, சரியானதை நாம் செய்துகொண்டிருக்கிறோம், ஆகவே கடவுளுடைய அங்கீகாரப் புன்முறுவல் நமக்கிருக்கிறது என்ற நம்பிக்கையிலிருந்து அது வருகிறது.—மத்தேயு 5:10-12; யாக்கோபு 1:2, 3; 1 பேதுரு 4:13, 14.
3எப்போதாவது தேவபக்திக்குரிய செயல்களைச் செய்வதன் மூலம் கடவுளுடைய அப்போஸ்தலர் 19:9; ஏசாயா 30:21) தேவபக்தியான வாழ்க்கை முறைதான் கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக பேசவும் செயல்படவும் நம்மை செய்விக்கிறது.
தயவைப் பெற்றுக்கொள்ளலாம் ஆனால் மற்ற சமயங்களில் அவரைப் பற்றி மறந்துவிடலாம் என்பதாக நினைக்கும் ஆட்கள் இருக்கிறார்கள். யெகோவா தேவனின் உண்மையான வணக்கம் அப்படிப்பட்டதல்ல. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வருடமும், ஒரு நபர் விழித்துக்கொண்டிருக்கும் எல்லா மணிநேரங்களிலும் அவருடைய நடத்தையை இது பாதிக்கிறது. அதன் காரணமாகவே இது ‘மார்க்கம்’ என்பதாகக்கூட அழைக்கப்படுகிறது. (4பைபிளின் புதிய மாணாக்கர்கள் யெகோவாவைப் பிரியப்படுத்த சில மாற்றங்களைச் செய்யவேண்டும் என்பதைக் காண்கையில், அவர்கள் ‘தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்வது உண்மையில் பிரயோஜனமுள்ளதா?’ என்பதாக யோசிக்கலாம். அது பிரயோஜனமாய் இருக்கிறது என்பதைக் குறித்து நீங்கள் நிச்சயமாயிருக்கலாம். ஏன்? ஏனென்றால் “தேவன் அன்பாகவே இருக்கிறார்,” ஆகவே அவருடைய வழிகள் நமக்கு நன்மை பயக்கவே இருக்கின்றன. (1 யோவான் 4:8) கடவுள் ஞானமுள்ளவராகவும் இருக்கிறார், எனவே நமக்கு எது சிறந்தது என்பதை அறிந்தவராய் இருக்கிறார். யெகோவா தேவன் சர்வ வல்லவராக இருப்பதால், ஒரு கெட்ட பழக்கத்தை விட்டுவிடுவதன் மூலம் அவரைப் பிரியப்படுத்தவேண்டும் என்ற நம்முடைய ஆசையை நிறைவேற்றுவதற்கு அவர் நம்மைப் பலப்படுத்தக்கூடியவராக இருக்கிறார். (பிலிப்பியர் 4:13) தேவபக்தியுள்ள வாழ்க்கையில் உட்பட்டிருக்கும் ஒருசில நியமங்களை நாம் சிந்தித்து அவற்றைப் பொருத்திப் பிரயோகிப்பது எவ்வாறு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது என்பதை நாம் பார்ப்போமாக.
நேர்மை மகிழ்ச்சியை விளைவிக்கிறது
5யெகோவா ‘சத்தியத்தின் தேவனாக’ இருக்கிறார். (சங்கீதம் 31:5, NW) சந்தேகமின்றி நீங்கள் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி உண்மை பேசும் ஒரு நபராக அறியப்படுவதற்கு விரும்புகிறீர்கள். நேர்மை சுயமரியாதைக்கும் நலமான ஒரு உணர்வுக்கும் வழிநடத்துகிறது. என்றபோதிலும் பாவம் நிறைந்த இந்த உலகில் நேர்மையின்மை அவ்வளவு சாதாரணமாக இருப்பதன் காரணமாக, கிறிஸ்தவர்களுக்கு இந்த நினைப்பூட்டுதல் அவசியமாயிருக்கிறது: “அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன். . . . திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, . . . நலமான வேலை செய்து, பிரயாசப்படக்கடவன்.” (எபேசியர் 4:25, 28) கிறிஸ்தவ வேலையாட்கள் நேர்மையாக முழு நாளின் வேலையைச் செய்கின்றனர். தங்களுடைய முதலாளி அனுமதி அளித்தாலொழிய, அவருக்குச் சொந்தமான பொருட்களை இவர்கள் எடுத்துக்கொள்வதில்லை. வேலையில், பள்ளியில், அல்லது வீட்டில் இருந்தாலும்சரி, யெகோவாவை வணங்கும் நபர் ‘எல்லா காரியங்களிலும் நேர்மையுள்ளவராக’ இருக்க வேண்டும். (எபிரெயர் 13:18) பொய் சொல்வதை அல்லது திருடுவதைப் பழக்கமாக்கிக்கொள்ளும் எவரும் கடவுளுடைய தயவைக் கொண்டிருக்க முடியாது.—உபாகமம் 5:19; வெளிப்படுத்துதல் 21:8.
6நேர்மையுள்ளவராக இருப்பது அநேக ஆசீர்வாதங்களை விளைவிக்கிறது. செலினா யெகோவா தேவனையும் அவருடைய நீதியுள்ள நியமங்களையும் நேசிக்கிற, ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த, ஏழ்மையான நிலையிலிருக்கும் ஒரு விதவை. ஒரு நாள் அவள் ஒரு வங்கி புத்தகத்தையும் அதிகமான பணத்தையும் கொண்டிருந்த ஒரு கைப்பையைக் கண்டெடுத்தாள். தொலைபேசி புத்தகத்தைப் பார்த்து அவளால் அதன் சொந்தக்காரரைக் கண்டுபிடிக்க முடிந்தது—அவர் பறிகொடுத்த ஒரு கடைக்காரராக இருந்தார். செலினா மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தபோதிலும் அவரைச் சந்தித்து பையிலிருந்த அனைத்துப் பொருட்களையும் திருப்பிக்கொடுத்தபோது அந்த மனிதனால் தன்னுடைய கண்களை நம்பமுடியவில்லை. “இப்படிப்பட்ட நேர்மைத்தன்மைக்கு சன்மானம் கொடுக்கப்படவேண்டும்,” என்பதாக அவர் சொல்லி அவளுக்கு பணம் கொடுத்தார். அதிக முக்கியமாக, இந்த மனிதன் செலினாவின் மதத்தைப் பாராட்டினார். ஆம், நேர்மையான செயல்கள் பைபிள் போதகத்தை அலங்கரித்து, யெகோவா தேவனை மகிமைப்படுத்தி அவருடைய நேர்மையுள்ள வணக்கத்தாருக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகின்றன.—தீத்து 2:10; 1 பேதுரு 2:12.
தாராள குணம் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது
7தாராள குணமுள்ளவர்களாய் இருப்பதில் மகிழ்ச்சி இருக்கிறது, ஆனால் பேராசையுள்ள ஆட்கள் “தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” (1 கொரிந்தியர் 6:10) பேராசையின் மிகச் சாதாரண வகை, மற்றவர்களின் நஷ்டத்தில் இலாபம் சம்பாதிக்கும் சூதாட்டமாகும். “இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவ”ர்களை யெகோவா அங்கீகரிப்பதில்லை. (1 தீமோத்தேயு 3:8) சூதாட்டம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டதாயிருந்து ஒரு நபர் விளையாட்டுக்காக சூதாடினாலும்கூட, அவர் அதற்கு அடிமைப்பட்டவராகி அநேகருடைய வாழ்க்கையை நாசமாக்கியிருக்கும் ஒரு பழக்கத்தை முன்னேற்றுவிக்கிறவராக ஆகிவிடக்கூடும். சூதாட்டமானது உணவு, உடை போன்ற அத்தியாவசியமானவற்றை வாங்க முடியாதபடி பணமில்லாதிருக்கும் சூதாட்டக்காரனுடைய குடும்பத்துக்கு அநேகமாக கஷ்டங்களைக் கொண்டுவருகிறது.—1 தீமோத்தேயு 6:10.
8தங்களுடைய அன்பான தாராள குணத்தின் காரணமாக, கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு, விசேஷமாக, தேவையிலிருக்கும் உடன் விசுவாசிகளுக்கு உதவிசெய்வதில் சந்தோஷத்தைக் காண்கின்றனர். (யாக்கோபு 2:15, 16) இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பாக, அவர் மனிதவர்க்கத்திடம் கடவுளின் தாராள குணத்தைக் கவனித்தார். (அப்போஸ்தலர் 14:16, 17) இயேசுதாமே, மனிதவர்க்கத்துக்காக தம்முடைய நேரத்தையும், தம்முடைய திறமைகளையும், தம்முடைய உயிரையும்கூட கொடுத்தார். ஆகவே, அவர் இவ்விதமாகச் சொல்ல நன்கு தகுதிபெற்றிருந்தார்: ‘வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே சந்தோஷம்.’ (அப்போஸ்தலர் 20:35) ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியில் தாராளமாக இரண்டு சிறிய காசுகளைப் போட்ட ஏழை விதவையைப் பற்றியும்கூட இயேசு உயர்வாகப் பேசினார், ஏனென்றால் அவள் “தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்.” (மாற்கு 12:41-44) பண்டைய இஸ்ரவேலரும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் சபைக்கும் ராஜ்ய வேலைக்கும் பொருளுதவி செய்வதில் சந்தோஷமுள்ள தாராள குணத்துக்கு முன்மாதிரிகளை அளிக்கின்றனர். (1 நாளாகமம் 29:9; 2 கொரிந்தியர் 9:11-14) இந்த நோக்கங்களுக்காக பொருள் சம்பந்தமான காணிக்கைகளைக் கொடுப்பதோடுகூட, தற்கால கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு சந்தோஷமாக துதியைச் செலுத்தி அவருடைய சேவையில் தங்களுடைய வாழ்க்கையைப் பயன்படுத்துகின்றனர். (ரோமர் 12:1; எபிரெயர் 13:15) மெய் வணக்கத்தை ஆதரித்து ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் உலகளாவிய வேலையை முன்னேற்றுவிப்பதற்காக தங்கள் நேரம், சக்தி மற்றும் தங்களுடைய பணம் உட்பட மற்ற வள ஆதாரங்களை பயன்படுத்துவதற்காக யெகோவா அவர்களை ஆசீர்வதிக்கிறார்.—நீதிமொழிகள் 3:9, 10.
மகிழ்ச்சியை முன்னேற்றுவிக்கும் மற்ற காரணங்கள்
9மகிழ்ச்சியாயிருப்பதற்கு கிறிஸ்தவர்கள் ‘தங்கள் சிந்திக்கும் திறமைகளையும்கூட காத்துகொள்ள’ வேண்டும். (நீதிமொழிகள் 5:1, 2, NW) இது அவர்கள் கடவுளுடைய வார்த்தையையும் ஆரோக்கியமான பைபிள் இலக்கியங்களையும் படிப்பதையும் தியானிப்பதையும் தேவைப்படுத்துகிறது. ஆனால் தவிர்க்கப்பட வேண்டிய காரியங்கள் இருக்கின்றன. உதாரணமாக, மதுபானங்களை அளவுக்கு அதிகமாக குடிப்பது, ஒருவரை தன் சிந்தனையின்மீது கட்டுப்பாட்டை இழக்கச் செய்யலாம். இப்படிப்பட்ட ஒரு மனநிலையில், அநேகர் ஒழுக்கங்கெட்ட நடத்தையில் ஈடுபடுகின்றனர், கோபாவேசமாக நடந்துகொள்கின்றனர், சாவுக்கேதுவான விபத்துக்களுக்கு காரணமாயிருக்கின்றனர். குடிவெறியர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை என்பதாக பைபிள் சொல்வது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை! (1 கொரிந்தியர் 6:10) “தெளிந்த புத்தியுள்ளவர்”களாக இருக்க தீர்மானித்தவர்களாய், உண்மைக் கிறிஸ்தவர்கள் குடிவெறியைத் தவிர்க்கின்றனர், இது அவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை முன்னேற்றுவிக்க உதவிசெய்கிறது.—தீத்து 2:2-6.
10சுத்தமான உடல் மகிழ்ச்சியாயிருக்க உதவுகிறது. என்றபோதிலும், அநேகர் தீங்கிழைக்கும் பொருட்களுக்கு அடிமையாகிவிடுகின்றனர். உதாரணமாக, 2 கொரிந்தியர் 7:1.
புகையிலை உபயோகத்தைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள். புகைபிடிப்பது “ஒவ்வொரு ஆண்டும் முப்பது லட்சம் ஆட்களைக் கொன்றுவிடுகிறது,” என்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை செய்கிறது. புகையிலை பழக்கத்தை நிறுத்துவதால் உடலில் தற்காலிகமாக ஏற்படும் கோளாறுகளின் காரணமாக அப்பழக்கத்தை விட்டுவிடுவது கடினமாக இருக்கக்கூடும். மறுபட்சத்தில், முற்காலங்களில் புகைபிடித்துக்கொண்டிருந்தவர்கள் மேம்பட்ட ஆரோக்கியமும் குடும்பத்தின் தேவைகளுக்கு அதிகமான பணமும் இப்பொழுது இருப்பதைக் காண்கிறார்கள். ஆம், புகையிலைப் பழக்கத்துக்கு அல்லது தீங்கிழைக்கும் மற்ற பொருட்களுக்கு அடிமையாதலை மேற்கொள்வது சுத்தமான உடலுக்கு, தெளிவான மனச்சாட்சிக்கு மற்றும் உண்மையான மகிழ்ச்சிக்குப் பங்களிக்கக்கூடும்.—திருமணத்தில் மகிழ்ச்சி
11கணவனும் மனைவியுமாக ஒன்றாகச் சேர்ந்து வாழ்பவர்கள் தங்களுடைய திருமணம் உள்ளூர் சட்டத்தின்படி சரிவர பதிவு செய்யப்பட்டிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும். (மாற்கு 12:17) அவர்கள் விவாகத்தை முக்கியமான ஒரு பொறுப்பாகவும் கருதவேண்டும். உண்மைதான், ஆதரவளிக்காமல் பிடிவாதமாக இருப்பது, அளவுக்கு மீறிய துர்ப்பிரயோகம், அல்லது ஆவிக்குரிய தன்மைக்கு முற்றிலும் ஆபத்தான நிலை போன்ற சந்தர்ப்பங்களின்கீழ் பிரிந்துபோதல் ஒருவேளை அவசியமாக இருக்கக்கூடும். (1 தீமோத்தேயு 5:8; கலாத்தியர் 5:19-21) ஆனால் 1 கொரிந்தியர் 7:10-17-ல் உள்ள அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகள் திருமண துணைவர்கள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும்படியாக ஊக்குவிக்கின்றன. உண்மையான மகிழ்ச்சிக்கு நிச்சயமாகவே அவர்கள் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். பவுல் எழுதினார்: “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக. வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.” (எபிரெயர் 13:4) “விவாகமஞ்சம்” என்ற பதம் ஒருவரையொருவர் சட்டப்படி திருமணம் செய்துகொண்டிருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பாலுறவைக் குறிக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியை திருமணம் செய்திருப்பது போன்ற வேறு எந்தப் பாலுறவும் “யாவருக்குள்ளும் கனமுள்ளதா”யிருப்பதாக வருணிக்கப்படமுடியாது. மேலுமாக, திருமணத்துக்கு முன்பாக பாலுறவு கொள்வதையும் ஒத்த பாலினப் புணர்ச்சியையும் பைபிள் கண்டனம் செய்கிறது.—ரோமர் 1:26, 27; 1 கொரிந்தியர் 6:18.
12வேசித்தனம் ஒருசில கணநேரங்கள் உடல் சம்பந்தமான இன்பத்தைக் கொண்டுவரக்கூடும், ஆனால் அது உண்மையான மகிழ்ச்சியில் விளைவடைதில்லை. அது கடவுளுக்கு வெறுப்பூட்டுவதாய் இருக்கிறது, மேலும் ஒரு நபரின் மனச்சாட்சியில் அழியாத தழும்பை உண்டுபண்ணிவிடக்கூடும். 1 தெசலோனிக்கேயர் 4:3-5) எய்ட்ஸ் மற்றும் பாலுறவினால் கடத்தப்படும் நோய்கள் சட்டவிரோதமான பாலுறவின் துயரமான பின்விளைவுகளாக இருக்கலாம். “உலகம் முழுவதிலும் வருடந்தோறும் 25 கோடிக்கும் மேலான ஆட்கள் வெட்டை நோயாலும் சுமார் 5 கோடி ஆட்கள் மேக நோயாலும் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது,” என்பதாக ஒரு மருத்துவ அறிக்கை சொல்கிறது. தேவையில்லாத கர்ப்பத்தின் பிரச்சினையும்கூட இருக்கிறது. உலகம் முழுவதிலும் 15 மற்றும் 19 வயதுக்குட்பட்ட 1.5 கோடிக்கு அதிகமான பெண்கள் ஆண்டுதோறும் கர்ப்பமாகிறார்கள் என்றும் அவர்களில் மூன்றில் ஒரு பாகத்தினர் கருச்சிதைவு செய்துகொள்கிறார்கள் என்றும் சர்வதேச திட்டமிடப்பட்ட பெற்றோர் ஐக்கிய ஸ்தாபனம் அறிக்கை செய்கிறது. ஒரு ஆப்பிரிக்க தேசத்தில் பருவ வயது பெண்கள் மத்தியில் ஏற்படும் எல்லா இறப்புகளிலும் 72 சதவீதம் கருச்சிதைவு கோளாறினால் ஏற்படுபவை என்பதை ஒரு ஆய்வு காண்பித்தது. வேசித்தனம் செய்பவர்களில் சிலர் நோயிலிருந்தும் கருவுறுதலிலிருந்தும் தப்பித்துவிடலாம், ஆனால் அவர்கள் உணர்ச்சிப்பூர்வமான சேதத்திலிருந்து தப்பமுடியாது. அநேகர் தங்கள் சுய மரியாதையை இழந்து தங்களைத் தாங்களே வெறுக்கவும்கூட செய்கிறார்கள்.
(13விபசாரம் ஒருவேளை மன்னிக்கப்படலாம் என்றாலும், குற்றமில்லாத துணைவரின் பாகத்தில் திருமண விலக்கு செய்வதற்கு இது நியாயமான ஒரு வேதப்பூர்வ காரணமாகும். (மத்தேயு 5:32; ஒப்பிடுக: ஓசியா 3:1-5.) இப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட நடத்தையினால் ஒரு திருமணம் முறிவடையுமேயானால், இது குற்றமற்ற துணைவர் மீதும் பிள்ளைகள் மீதும் ஆழமான உணர்ச்சிப்பூர்வமான தழும்புகளை விட்டுச்செல்லக்கூடும். மனித குடும்பத்தின் நன்மைக்காக, மனந்திரும்பாத வேசித்தனம் செய்பவர்மீதும் விபசாரக்காரர்மீதும் அவருடைய பாதகமான நியாயத்தீர்ப்பு வரும் என்பதாக கடவுளுடைய வார்த்தை சுட்டிக்காட்டுகிறது. மேலுமாக, பாலின ஒழுக்கக்கேட்டை அப்பியாசிக்கிறவர்கள் “தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று,” தெளிவாக அது காண்பிக்கிறது.—கலாத்தியர் 5:19, 21.
‘உலகத்தின் பாகமாக இல்லை’
14யெகோவாவைப் பிரியப்படுத்தி ராஜ்ய ஆசீர்வாதங்களை அனுபவிக்க விரும்புகிறவர்கள் எல்லா வகையான விக்கிரகாராதனையையும் தவிர்க்கின்றனர். கிறிஸ்துவின், அல்லது இயேசுவின் தாயாகிய மரியாளின் உருவங்கள் உட்பட சொரூபங்களை உண்டுபண்ணுவதும் வணங்குவதும் தவறு என்பதாக பைபிள் காண்பிக்கிறது. (யாத்திராகமம் 20:4, 5; 1 யோவான் 5:21) ஆகவே, உண்மை கிறிஸ்தவர்கள் விக்கிரகங்களையும் சிலுவைகளையும் சொரூபங்களையும் வழிபடுவது கிடையாது. கொடிகளுக்கு பக்தியைக் காட்டும் செயல்கள் மற்றும் தேசங்களை மகிமைப்படுத்தும் பாடல்களைப் பாடுவது போன்ற விக்கிரகாராதனையின் அதிக தந்திரமான வகைகளையும்கூட அவர்கள் தவிர்க்கிறார்கள். இப்படிப்பட்ட செயல்களைச் செய்ய கட்டாயப்படுத்தப்படும்போது, சாத்தானிடமாக இயேசு சொன்ன வார்த்தைகளை அவர்கள் நினைவுகூருகிறார்கள்: “உன் தேவனாகிய கர்த்தரைப் [“யெகோவாவைப்,” NW] பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.” (மத்தேயு 4:8-10) தம்மைப் பின்பற்றுவோர் ‘இந்த உலகத்தின் பாகமாக இல்லை,’ என்பதாக இயேசு சொன்னார். (யோவான் 17:14) அரசியல் விவகாரங்களில் நடுநிலைமையைக் காத்துக்கொண்டு ஏசாயா 2:4-க்கு இசைவாக சமாதானமாக வாழ்ந்துவருவதை இது அர்த்தப்படுத்துகிறது. அது சொல்கிறது: “அவர் [யெகோவா தேவன்] ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”
15‘உலகத்தின் பாகமாக இல்லாமல் இருப்பது’ பொய் மத உலக பேரரசாகிய வெளிப்படுத்துதல் 17:1, 5, 15) யெகோவாவின் உண்மை வணக்கத்தார் எவரும் பல்வேறு மதங்களின் வணக்கத்தில் பங்குகொள்வதன் மூலமாக அல்லது மகா பாபிலோனின் எந்தப் பகுதியோடும் ஆவிக்குரிய தோழமையை வைத்துக்கொள்வதன் மூலமாக கலப்புவிசுவாச நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டார். (எண்ணாகமம் 25:1-9; 2 கொரிந்தியர் 6:14) இதன் காரணமாக, அநேக புதிய பைபிள் மாணாக்கர்கள் தாங்கள் உறுப்பினராயிருக்கும் மத அமைப்புக்கு ராஜினாமா கடிதம் ஒன்றை அனுப்பிவிடுகின்றனர். இது வாக்களிக்கப்பட்டிருக்கும் விதமாக உண்மையான கடவுளிடமாக அவர்களை நெருங்கி வரச் செய்திருக்கிறது: “நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்”கொள்வேன். (2 கொரிந்தியர் 6:17; வெளிப்படுத்துதல் 18:4, 5) நம்முடைய பரலோக தகப்பன் இப்படி உங்களை ஏற்றுக்கொள்வதையே நீங்கள் வெகுவாக விரும்புவீர்கள் அல்லவா?
‘மகா பாபிலோனின்’ எல்லா கூட்டுறவுகளையும் துண்டித்துக்கொள்வதையும்கூட அர்த்தப்படுத்துகிறது. பூமி முழுவதிலுமுள்ள மக்கள்மீது தீங்கிழைக்கும் ஆவிக்குரிய ஆதிக்கத்தைக் கொண்டிருக்கும் வரையாக அசுத்தமான வணக்கம் பண்டைய பாபிலோனிலிருந்து பரவிவந்திருக்கிறது. தேவனை அறியும் அறிவோடு இசைவாக இல்லாத கோட்பாடுகளையும் பழக்கவழக்கங்களையும் கொண்ட எல்லா மதங்களையும் “மகா பாபிலோன்” உள்ளடக்கியதாய் இருக்கிறது. (வருடாந்தர ஆசரிப்புகளை சீர்தூக்கிப் பார்த்தல்
16தேவபக்தியுள்ள ஒரு வாழ்க்கை அநேக சமயங்களில் பாரமாக இருக்கும் உலகப்பிரகாரமான விடுமுறைநாட்களைக் கொண்டாடுவதிலிருந்து நம்மை விடுவிக்கிறது. உதாரணமாக, இயேசு என்றைக்கு பிறந்தார் என்று பைபிள் வெளிப்படுத்துவது கிடையாது. ‘இயேசு டிசம்பர் 25-ம் தேதி பிறந்தார் என்பதாக நான் நினைத்தேனே!’ என்பதாக சிலர் சொல்லக்கூடும். இது சாத்தியமில்லை, ஏனென்றால் அவர் 33 1/2 வயதாக இருக்கும்போது பொ.ச. 33-ன் வசந்தகாலத்தில் மரித்தார். மேலுமாக, அவருடைய பிறப்பின் சமயத்தில், மேய்ப்பர்கள் “வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.” (லூக்கா 2:8) இஸ்ரவேல் நாட்டில், டிசம்பர் மாத பிற்பகுதி குளிரான, மழைக்காலமாக இருக்கிறது, அந்தச் சமயத்தில் மழைக்கால வானிலையிலிருந்து பாதுகாக்கப்பட ஆடுகள் இராக்காலங்களில் மறைவிடங்களில் வைக்கப்பட்டிருக்கும். உண்மையில், டிசம்பர் 25 ரோமர்களால் அவர்களுடைய சூரிய கடவுளின் பிறந்தநாளாக ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தது. இயேசு பூமிக்கு வந்து பல நூற்றாண்டுகளான பின், விசுவாசதுரோக கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடுவதற்கு இந்தத் தேதியை ஏற்றுக் கொண்டனர். இதன் காரணமாகவே உண்மைக் கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸை அல்லது பொய் மத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்ட வேறு எந்த விடுமுறையையும் கொண்டாடுவதில்லை. யெகோவாவுக்குத் தனிப்பட்ட பக்தியைக் கொடுப்பதன் காரணமாக, அவர்கள் பாவமுள்ள மனிதர்களை அல்லது தேசங்களை பெரிதும் போற்றி வழிபடும் விடுமுறைநாட்களையும்கூட கொண்டாடுவதில்லை.
17பைபிள் குறிப்பாக இரண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது, இரண்டுமே கடவுளை சேவிக்காத ஆட்களை உட்படுத்தியவையாக இருந்தன. (ஆதியாகமம் 40:20-22; மத்தேயு 14:6-11) பரிபூரண மனிதராகிய இயேசு கிறிஸ்துவின் பிறந்த தேதியையே வேதாகமம் வெளிப்படுத்தாதபோது, அபூரணமான மனிதர்களின் பிறந்த நாட்களுக்கு நாம் ஏன் விசேஷித்த கவனம் செலுத்த வேண்டும்? (பிரசங்கி 7:1) நிச்சயமாகவே தேவபக்தியுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அன்பு காட்ட விசேஷமான ஒரு நாளுக்காக காத்திருப்பதில்லை. 13 வயதுள்ள ஒரு கிறிஸ்தவப் பெண் குறிப்பிட்டாள்: “என்னுடைய குடும்பத்தாரும் நானும் நிறைய கேளிக்கையை அனுபவிப்போம். . . . நான் என் பெற்றோரிடம் நெருக்கமாக இருக்கிறேன், நான் விடுமுறை நாட்களை ஏன் கொண்டாடுவதில்லை என்பதாக மற்ற பிள்ளைகள் என்னைக் கேட்கும்போது, எனக்கு எல்லா நாளுமே கொண்டாட்டம்தான் என்று நான் அவர்களுக்கு சொல்லுவேன்.” 17 வயதுள்ள ஒரு கிறிஸ்தவ இளைஞன் சொன்னான்: “எங்களுடைய வீட்டில், வருடம் முழுவதும் பரிசுகளை நாங்கள் கொடுத்துக் கொள்கிறோம்.” பரிசுகள் சுய விருப்பத்தால் கொடுக்கப்படுகையில் அதிகமான மகிழ்ச்சி விளைவடைகிறது.
18தேவபக்தியுள்ள ஒரு வாழ்க்கையைப் பின்தொடருபவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் விசேஷமாக ஆசரிக்கப்பட வேண்டிய ஒரு நாள் இருக்கிறது. அது, அநேக சமயங்களில் கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பு நாள் என்பதாக அழைக்கப்படும் கர்த்தருடைய இராப்போஜனமாக இருக்கிறது. அதைக் குறித்து இயேசு தம்மைப் பின்பற்றுவோருக்கு இவ்வாறு கட்டளைகொடுத்தார்: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.” (லூக்கா 22:19, 20; 1 கொரிந்தியர் 11:23-25) இயேசு இந்தப் போஜனத்தை பொ.ச. 33, நிசான் 14-ம் தேதி இரவில் ஆரம்பித்து வைத்தபோது, தம்முடைய பாவமில்லாத மனித உடலையும் தம்முடைய பரிபூரண இரத்தத்தையும் பிரதிநிதித்துவம் செய்த புளிப்பில்லாத அப்பத்தையும் சிவப்பு திராட்ச மதுவையும் பயன்படுத்தினார். (மத்தேயு 26:26-29) இந்தச் சின்னங்களில் கடவுளுடைய பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றவர்கள் பங்கெடுக்கிறார்கள். அவர்கள் புதிய உடன்படிக்கைக்குள்ளும் ராஜ்யத்திற்கான உடன்படிக்கைக்குள்ளும் எடுத்துக்கொள்ளப்பட்டு பரலோக நம்பிக்கையைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். (லூக்கா 12:32; 22:20, 28-30; ரோமர் 8:16, 17; வெளிப்படுத்துதல் 14:1-5) என்றபோதிலும், பண்டைய யூத நாட்காட்டியில் நிசான் 14 அன்று வரும் தினத்தின் மாலையில் ஆஜராயிருக்கும் அனைவரும் நன்மைகளை அடைகிறார்கள். தெய்வீக தயவைப் பெற்றிருப்பவர்கள் நித்திய ஜீவனை அடைவதை சாத்தியமாக்கும் பாவத்தை நிவிர்த்திசெய்கிற மீட்கும் பலியின் மூலமாக யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் காண்பித்துள்ள அன்பைக் குறித்து அவர்கள் நினைப்பூட்டப்படுகிறார்கள்.—மத்தேயு 20:28; யோவான் 3:16.
வேலையும் பொழுதுபோக்கும்
19உண்மைக் கிறிஸ்தவர்கள் கடினமாக வேலைசெய்து தங்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளும் கடமையின்கீழ் இருக்கிறார்கள். இதைச் செய்வது குடும்பத் தலைவர்களுக்குத் திருப்தியான ஒரு உணர்வைக் கொண்டுவருகிறது. (1 தெசலோனிக்கேயர் 4:11, 12) நிச்சயமாகவே, ஒரு கிறிஸ்தவனின் வேலை பைபிளுக்கு முரணாக இருக்குமானால், இது அவனுடைய மகிழ்ச்சியைப் பறித்துவிடும். என்றபோதிலும், பைபிள் தராதரங்களுக்கு இசைவாக இருக்கும் ஒரு வேலையைக் கண்டுபிடிப்பது சில சமயங்களில் ஒரு கிறிஸ்தவனுக்குக் கடினமாக இருக்கிறது. உதாரணமாக, வேலைக்கு அமர்த்தப்படும் ஒரு சிலர் வாடிக்கையாளர்களை ஏமாற்றும்படியாக கேட்கப்படுகின்றனர். மறுபட்சத்தில், வேலைக்கு அமர்த்தும் அநேகர் நம்பத்தக்க ஒரு வேலையாளை இழக்க விரும்பாமல் நேர்மையான வேலையாளின் மனச்சாட்சிக்கு இடங்கொடுத்து வற்புறுத்தாதிருப்பார்கள். என்றபோதிலும், என்ன சம்பவித்தாலும், சுத்தமான ஒரு மனச்சாட்சியோடு நீங்கள் இருக்கும்படி செய்யும் ஒரு வேலையைக் கண்டுபிடிக்க நீங்கள் செய்யும் முயற்சியை கடவுள் ஆசீர்வதிப்பார் என்பதைக் குறித்து நீங்கள் நிச்சயமாயிருக்கலாம்.—2 கொரிந்தியர் 4:2.
20கடவுள் தம்முடைய ஊழியர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று விரும்புவதன் காரணமாக, நாம் கடினமான வேலையை புத்துயிரளிக்கும் பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு நேரங்களோடு சமநிலைப்படுத்துவது அவசியமாகும். (மாற்கு 6:31; பிரசங்கி 3:12, 13) சாத்தானின் உலகம் தேவபக்தியற்ற பொழுதுபோக்கை ஊக்குவிக்கிறது. ஆனால் கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு, நாம் வாசிக்கும் புத்தகங்கள், நாம் கேட்கும் வானொலி நிகழ்ச்சிகள் மற்றும் இசை, நாம் பார்க்கும் இசைநிகழ்ச்சிகள், திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வீடியோக்களைக் கவனமாய் தெரிந்தெடுக்கிறவர்களாக இருக்கவேண்டும். நாம் கடந்த காலங்களில் தெரிந்துகொண்ட பொழுதுபோக்குகள் உபாகமம் 18:10-12, சங்கீதம் 11:5 மற்றும் எபேசியர் 5:3-5 போன்ற வேதவசனங்களிலுள்ள எச்சரிக்கைகளுக்கு முரணாக இருக்குமேயாகில், நாம் சரிப்படுத்துதல்களைச் செய்தால் யெகோவாவைப் பிரியப்படுத்துகிறவர்களாகவும் மேலுமதிக மகிழ்ச்சியுள்ளவர்களாகவும் இருப்போம்.
உயிருக்கும் இரத்தத்துக்கும் மரியாதை
21உண்மையான மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்வதற்கு, யெகோவாவைப் போலவே நாம் மனித உயிரைப் பரிசுத்தமானதாக கருதவேண்டும். நாம் கொலைசெய்வதை அவருடைய வார்த்தை தடைசெய்கிறது. (மத்தேயு 19:16-18) உண்மையில், இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய நியாயப்பிரமாணம் பிறவாது கர்ப்பத்திலுள்ள சிசுவை—அழிக்கப்படுவதற்குரிய ஒன்றாக அல்ல—மதிப்புள்ள ஒரு உயிராக அவர் கருதுவதைக் காண்பிக்கிறது. (யாத்திராகமம் 21:22, 23) அதைப் போலவே, புகையிலையைப் பயன்படுத்துவது, போதை வஸ்துக்களினால் மற்றும் மதுபானத்தினால் நம்முடைய உடலை துர்ப்பிரயோகம் செய்வது அல்லது அனாவசியமாக ஆபத்துக்களுக்கு உட்படுவது ஆகியவற்றின் மூலமாக நாம் உயிரை மலிவான ஏதோவொன்றைப்போல் கையாளக்கூடாது. உயிரை ஆபத்துக்குள்ளாக்கும் எந்த முயற்சிகளிலும் ஈடுபடவோ அல்லது பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை அசட்டை செய்யவோ கூடாது, இவை இரத்தப்பழியை விளைவிக்கக்கூடும்.—உபாகமம் 22:8.
22ஆத்துமா அல்லது உயிரை இரத்தம் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதாக யெகோவா நோவாவிடமும் அவருடைய குடும்பத்திடமும் சொன்னார். ஆகவே, அவர்கள் எந்தவிதமான இரத்தத்தையும் சாப்பிடக்கூடாது என்பதாக கடவுள் தடைசெய்தார். (ஆதியாகமம் 9:3, 4) நாம் அவர்களுடைய சந்ததியாராக இருப்பதன் காரணமாக, அந்தச் சட்டம் நம் எல்லாரையும் கட்டுப்படுத்துவதாக இருக்கிறது. இரத்தம் தரையிலே ஊற்றப்படவேண்டும், அது மனிதனின் சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படக்கூடாது என்பதாக யெகோவா இஸ்ரவேலரிடம் சொன்னார். (உபாகமம் 12:15, 16) மேலும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பின்வருமாறு அறிவுறுத்தப்பட்டபோது இரத்தத்தின்பேரிலான கடவுளுடைய சட்டம் திரும்பச் சொல்லப்பட்டது: ‘இரத்தத்திற்கு . . . விலகியிருக்கவேண்டும்.’ (அப்போஸ்தலர் 15:28, 29) உயிரின் பரிசுத்தத்தன்மைக்கு காட்டும் மரியாதையின் காரணமாக, தேவபக்தியுள்ள ஆட்கள் இரத்தமேற்றுதல்களை ஏற்றுக்கொள்வது கிடையாது, இப்படிப்பட்ட ஒரு செயல் உயிரைக் காப்பதாக இருக்கும் என்பதாக மற்றவர்கள் வற்புறுத்தினாலும் அதைச் செய்வதில்லை. யெகோவாவின் சாட்சிகளுக்கு ஏற்கத்தகுந்ததாய் இருக்கும் அநேக மாற்றுசிகிச்சை மருத்துவ முறைகள் மிகவும் பயனுள்ளதாக நிரூபித்து, இரத்தமேற்றுதலினால் வரும் ஆபத்துக்களுக்கு ஒருவரை உட்படாதிருக்கும்படி செய்கின்றன. இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தம் மாத்திரமே உண்மையில் உயிர் காப்பதாக இருப்பதை கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள். அதில் விசுவாசம் வைப்பது மன்னிப்பையும் நித்திய ஜீவனின் எதிர்பார்ப்பையும் கொண்டுவருகிறது.—எபேசியர் 1:7.
23தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்வது முயற்சியைத் தேவைப்படுத்துவது தெளிவாக இருக்கிறது. அதன் விளைவாக குடும்ப அங்கத்தினர்கள் அல்லது அறிமுகமானவர்கள் பரிகாசம் செய்யலாம். (மத்தேயு 10:32-39; 1 பேதுரு 4:4) ஆனால் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்வதால் வரும் எந்தக் கஷ்டங்களையும்விட வெகுமதிகள் மிகவும் அதிகமாயிருக்கின்றன. அது சுத்தமான மனச்சாட்சியை விளைவித்து யெகோவாவின் உடன் வணக்கத்தாரோடு ஆரோக்கியமான தோழமையை அளிக்கிறது. (மத்தேயு 19:27, 29) மேலுமாக கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகில் என்றுமாக வாழ்வதைக் கற்பனை செய்துபாருங்கள். (ஏசாயா 65:17, 18) பைபிள் புத்திமதியோடு இணக்கமாயிருந்து இவ்விதமாக யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துவதில் என்னே சந்தோஷம் இருக்கிறது! (நீதிமொழிகள் 27:11) தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்வது மகிழ்ச்சியைக் கொண்டுவருவதில் எந்த ஆச்சரியமுமில்லை!—சங்கீதம் 128:1, 2.
உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்
தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்வது மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கு ஒருசில காரணங்கள் யாவை?
தேவபக்தியாக வாழ்வது என்ன மாற்றங்களைத் தேவைப்படுத்தலாம்?
நீங்கள் ஏன் தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ விரும்புகிறீர்கள்?
[கேள்விகள்]
1. யெகோவாவின் வழி மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது என்று நாம் ஏன் சொல்லலாம்?
2. கிறிஸ்தவர்கள் சில சமயங்களில் மோசமாக நடத்தப்பட்டாலும் ஏன் சந்தோஷமாயிருக்கலாம்?
3. யெகோவாவின் வணக்கம் ஒரு நபரின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கவேண்டும்?
4. கடவுளுடைய வழியின் பிரகாரம் வாழ்வதற்காக மாற்றங்களைச் செய்வது ஏன் பிரயோஜனமாயிருக்கிறது?
5. பொய் சொல்லுவதையும் திருடுவதையும் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது?
6. தேவபக்தியுள்ள ஒரு நபரின் நேர்மை எவ்விதமாக யெகோவாவுக்கு மகிமையைக் கொண்டுவரக்கூடும்?
7. சூதாடுவதில் என்ன தவறு இருக்கிறது?
8. தாராள குணத்துக்கு இயேசு என்ன நேர்த்தியான முன்மாதிரியை வைத்தார், நாம் எவ்வாறு தாராள குணமுடையவர்களாக இருக்கலாம்?
9. மதுபானங்களை அளவுக்கு அதிகமாக குடிப்பதில் என்ன தவறு இருக்கிறது?
10. (அ) கிறிஸ்தவர்கள் ஏன் புகையிலையைப் பயன்படுத்துவதில்லை? (ஆ) அடிமைப்படுத்தும் பழக்கங்களை விட்டுவிடுவதால் என்ன நன்மைகள் வருகின்றன?
11. சட்டப்பூர்வமான மற்றும் நிலையான கனத்துக்குரிய திருமணத்தைக் கொண்டிருப்பதற்கு என்ன தேவைப்படுகிறது?
12. வேசித்தனத்தின் ஒருசில மோசமான விளைவுகள் யாவை?
13. விபசாரத்தினால் என்ன கூடுதலான பிரச்சினைகள் உண்டாகின்றன, வேசித்தனம் செய்பவராயும் விபசாரக்காரராயும் தொடர்ந்திருப்பவர்களுக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?
14. (அ) தேவபக்தியுள்ள ஒரு நபர் தவிர்க்க வேண்டிய ஒருசில வகையான விக்கிரகாராதனைகள் யாவை? (ஆ) யோவான் 17:14 மற்றும் ஏசாயா 2:4-ல் என்ன வழிநடத்துதல் அளிக்கப்பட்டிருக்கிறது?
15. மகா பாபிலோன் என்பது என்ன, அதைவிட்டு வெளியேறுவதற்கு அநேக புதிய பைபிள் மாணாக்கர்கள் என்ன செய்கின்றனர்?
16. உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏன் கிறிஸ்மஸ் கொண்டாடுவதில்லை?
17. தேவபக்தியுள்ள ஆட்கள் ஏன் பிறந்த நாட்களை கொண்டாடுவதில்லை, எப்படியிருந்தாலும் கிறிஸ்தவப் பிள்ளைகள் ஏன் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கின்றனர்?
18. எந்த ஒரே ஒரு வருடாந்தர ஆசரிப்பை ஆசரிக்குமாறு இயேசு தம்மைப் பின்பற்றுவோருக்குக் கட்டளையிட்டார், அது நமக்கு எதை நினைப்பூட்டுகிறது?
19. வாழ்க்கையின் தேவைகளுக்காக சம்பாதிப்பதில் கிறிஸ்தவர்கள் என்ன சவாலை எதிர்ப்படுகின்றனர்?
20. பொழுதுபோக்கை தெரிவு செய்வதில் நாம் ஏன் கவனமாய் தெரிந்தெடுக்கிறவர்களாக இருக்கவேண்டும்?
21. உயிருக்கு மரியாதை, எவ்விதமாக கருக்கலைப்புப் பற்றிய நம்முடைய கருத்தையும், நம்முடைய பழக்கங்கள் மற்றும் நடத்தையையும் பாதிக்க வேண்டும்?
22. (அ) இரத்தம் மற்றும் அதன் உபயோகம் குறித்த கடவுளின் கருத்து என்ன? (ஆ) யாருடைய இரத்தம் மாத்திரமே உயிர் காப்பதாக இருக்கிறது?
23. தேவபக்தியுள்ள ஒரு வாழ்க்கை முறையின் ஒருசில வெகுமதிகள் யாவை?
[பக்கம் 124, 125-ன் படம்]
ஆவிக்குரிய நடவடிக்கைகளை ஓய்வு நேரங்களோடு சமநிலைப்படுத்துவது தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ்பவர்களின் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கிறது