சரியானதைச் செய்வதற்குப் போராடுதல்
அதிகாரம் 26
சரியானதைச் செய்வதற்குப் போராடுதல்
சாத்தானுடைய உலகம் இருந்துகொண்டிருக்கும் வரையில், அதன் பொல்லாத செல்வாக்குக்கு அடிமைப்படாதபடி தங்களைக் காத்து வைத்துக்கொள்ள கிறிஸ்தவர்கள் போராட வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினான்: “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு [தந்திர செயல்களுக்கு] எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்ளுங்கள்.” (எபேசியர் 6:11-18) என்றபோதிலும், நம்முடைய போராட்டம் சாத்தானுக்கும் அவனுடைய உலகத்துக்கும் எதிராக மாத்திரமே அல்ல; கெட்டதைச் செய்வதற்கு நாடும் நம்முடைய சொந்த ஆசைகளுக்கு எதிராகவுங்கூட இருக்கிறது. பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறு வயது தொடங்கிப் பொல்லாத”வையாயிருக்கின்றன.—ஆதியாகமம் 8:21; ரோமர் 5:12.
2 முதல் மனிதனாகிய ஆதாமிலிருந்து சுதந்தரித்தப் பாவத்தினிமித்தமாக, நம்முடைய இருதயம் கெட்டதைச் செய்வதற்கு மிகுந்த ஆசை கொள்ளலாம். இந்த ஆசைக்கு நாம் இணங்கி இடங்கொடுப்போமானால், கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையில் நித்திய ஜீவனை அடையமாட்டோம். ஆகவே சரியானதைச் செய்ய நாம் போராட வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுலுக்குங்கூட இப்படிப்பட்ட ஒரு போராட்டம் இருந்தது, ‘நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிறதைக் காண்கிறேன்,’ என்று அவன் விளக்கினான். (ரோமர் 7:21-23) நீங்களுங்கூட இந்தப் போராட்டத்தைக் கடினமானதாகக் காண்பீர்கள். சில சமயங்களில் உங்களுக்குள்ளே ஒரு கடுமையான போராட்டம் நடந்து கொண்டிருக்கலாம். அப்பொழுது நீங்கள் என்ன செய்ய தீர்மானிப்பீர்கள்?
3 பூமியில் பரிபூரண நிலைமைகளின் கீழ் என்றும் வாழ்வதைப் பற்றிய கடவுளுடைய அதிசயமான வாக்குகளை நீங்கள் அறிந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இந்த வாக்குகளை நம்புகிறீர்கள், இந்த நல்ல காரியங்கள் உங்களுக்கு வேண்டுமென்று விரும்புகிறீர்கள். ஆகவே, கடவுளைச் சேவிப்பது உங்களுடைய நிலைவரமான மிகச் சிறந்த அக்கறைக்கேதுவானதென்பதை நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் இருதயத்தில் நீங்கள் கெட்டதென்று தெரிந்திருக்கிற காரியங்களை நீங்கள் ஒருவேளை விரும்பக்கூடும். சில சமயங்களில் வேசித்தனம் செய்வதற்கு, திருடுவதற்கு, அல்லது வேறு தவறான செயலில் ஈடுபடுவதற்கு உங்களுக்குக் கடுமையான ஆசை உண்டாகலாம். இந்தப் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிற சிலர், இப்படிப்பட்ட கெட்ட பழக்கச் செயல்கள் கடவுளால் கண்டனம் செய்யப்பட்டிருக்கின்றனவென்று எரேமியா 17:9.
தாங்கள் அறிந்திருக்கிறபோதிலும் இவற்றில் உண்மையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கக்கூடும். தாங்கள் சரியானதைச் செய்ய விரும்புகையில் தவறை அவர்கள் செய்கிற இந்த உண்மையானது, “இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது,” என்ற இந்தப் பைபிள் சத்தியத்தை மெய்ப்பித்துக் காட்டுகிறது.—இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறக்கூடும்
4 என்றபோதிலும், தவறு செய்தவற்கு இருக்கும் தன் கடுமையான ஆசைகளின் பேரில் ஒருவனுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லையென்று இது அர்த்தப்படுத்துகிறதில்லை. நீங்கள் உண்மையில் விரும்புகிறீர்களென்றால், உங்கள் இருதயம் உங்களைச் சரியான வழியில் நடத்தும்படி அதை நீங்கள் பலப்படுத்தக்கூடும். ஆனால் இதைச் செய்வது உங்களைப் பொறுத்திருக்கிறது. (சங்கீதம் 26:1, 11) வேறு எவரும் உங்களுக்காகப் போராடி வெற்றிபெறச் செய்ய முடியாது. ஆகவே, முதலாவதாக, உயிரளிக்கும் பைபிள் அறிவைத் தொடர்ந்து உட்கொண்டு வாருங்கள். (யோவான் 17:3) என்றாலும் இந்த அறிவை வெறுமென உங்கள் தலைக்குள் ஏற்று வருவதைப் பார்க்கிலும் அதிகம் தேவைப்படுகிறது. அது படிப்படியாக உங்கள் இருதயத்துக்குள்ளும் ஆழப் பதிந்து வரவேண்டும். படித்து வருவதை நடைமுறையில் செய்யும்படி நீங்கள் உண்மையில் விரும்பும்படியாக அவற்றைப் பற்றிய ஆழ்ந்த உணர்ச்சி உங்களுக்கு உண்டாகி வரவேண்டும்.
5 கடவுளுடைய சட்டங்களின்பேரில் இருதயப் பூர்வ மதித்துணர்வை நீங்கள் எப்படி அடையக்கூடும்? நீங்கள் அவற்றைப் பற்றி தியானிக்க, அல்லது ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். உதாரணமாக, உங்களை நீங்களே பின்வருமாறு கேட்டுக் கொள்ளுங்கள்: கடவுளுக்குக் கீழ்ப்படிவது உண்மையில் என்ன வேறுபாட்டை உண்டுபண்ணுகிறது? பின்பு அவருடைய சட்டங்களை அசட்டை செய்திருக்கிற, பின்வருமாறு எழுதின இந்த 19-வயது பெண்ணைப் போன்ற, ஆட்களின் வாழ்க்கையைக் கவனித்துப் பாருங்கள்: “எனக்கு மூன்று தடவைகள் மேக நோய் உண்டாயிருந்திருக்கிறது. கடைசி தடவை அது உண்டானபோது பிள்ளைகளைப் பெறும் என் உரிமையை நான் இழக்க வேண்டியதாயிற்று, ஏனென்றால் அறுவை மருத்துவத்தால் என் கருப்பை நீக்க வேண்டியதாயிற்று.” மக்கள் கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமற் போகையில் உண்டுபண்ணப்படுகிற தொல்லைகளையெல்லாம் கவனிக்கையில் மெய்யாகவே விசனகரமாயிருக்கிறது. (2 சாமுவேல் 13:1-19) வேசித்தனக் குற்றத்தைச் செய்துவிட்ட ஒரு பெண் தயக்கத்தோடு பின்வருமாறு சொன்னாள்: “கீழ்ப்படியாமையினால் வருகிற வேதனைக்கும் உணர்ச்சிவச முறிவுக்கும் அது சற்றேனும் தகுந்ததல்ல. அதற்காக நான் இப்பொழுது அவதிப்படுகிறேன்.”
6 என்றபோதிலும், வேசித்தனம் செய்வதும், குடித்து வெறிப்பதும், வெறிமயக்கப் பொருட்களை உட்கொள்ளுவதும் வேடிக்கை விளையாட்டாக இருப்பதாய்ச் சில ஆட்கள் சொல்வதை நீங்கள் கேட்கக்கூடும். ஆனால் வேடிக்கை விளையாட்டு எனப்படுவதெல்லாம் அப்போதைக்கானதே. உண்மையும் நிலைவரமுமான சந்தோஷத்தை நீங்கள் இழந்துபோகச் செய்யும் ஒரு நடத்தைப் போக்குக்குள் தவறாக வழி நடத்தப்பட உங்களை அனுமதியாதேயுங்கள். “பார்வோனுடைய குமாரத்தியின் மகனாக” வளர்க்கப்பட்ட மோசேயை நினைத்துப் பாருங்கள். அவன் அங்கே பூர்வ எகிப்தில் அரச குடும்பத்தின் செல்வச் செழிப்பில் வாழ்ந்தான். என்றபோதிலும், எபிரெயர் 11:24, 25, தி.மொ.) அந்த எகிப்திய அரச குடும்பத்துக்குள் இருந்து வந்ததாகத் தோன்றுகிற ஒழுக்கக்கேடான, கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையில் சந்தோஷம் அல்லது வேடிக்கை விளையாட்டு இருந்திருக்கலாம். அப்படியானால், அந்த எல்லாவற்றையும் விட்டு மோசே ஏன் விலகினான்?
அவன் பெரியவனாக, வளர்ந்தபோது, “சொற்ப கால பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதிலும் கடவுளின் ஜனங்களோடு துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்”டான், என்று பைபிள் சொல்லுகிறது. (7 ஏனென்றால் மோசே யெகோவா தேவனில் நம்பிக்கை வைத்திருந்தான். எகிப்திய அரச குடும்பத்தில் தான் அனுபவிக்கக்கூடிய எந்தச் சொற்ப கால பாவ சந்தோஷங்களைப் பார்க்கிலும் மிக மேம்பட்ட ஒன்றைப் பற்றி அவன் அறிந்திருந்தான். பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: அவன் “இனிவரும் பலன்மேல் [கருத்தூன்றி, NW] நோக்கமாயிருந்தான்.” கடவுள் வாக்குக் கொடுத்திருந்த அந்தக் காரியங்களைப் பற்றி மோசே தியானித்தான், அல்லது ஆழ்ந்து சிந்தித்தான். நீதியுள்ள ஒரு புதிய ஒழுங்குமுறையை உண்டுபண்ணும்படியான கடவுளுடைய நோக்கத்தில் அவனுக்கு விசுவாசம் இருந்தது. மனிதவர்க்கத்தின் பேரில் யெகோவாவுக்கு இருக்கும் மிகுந்த அன்பும் கவலையும் அவனுடைய இருதயத்தைத் தொட்டு உருக்கியது. இது வெறுமென மோசே யெகோவாவைப் பற்றிக் கேள்விப்பட்டது அல்லது வாசித்திருந்தது தானே அல்ல. “அவன் காணமுடியாதவரைக் எபிரெயர் 11:26, 27, தி.மொ.) யெகோவா மோசேக்கு மெய்யானவராக இருந்தார். அவ்வாறே, நித்திய ஜீவனைப் பற்றிய அவருடைய வாக்குத்தத்தங்களும் மெய்யானவையாக இருந்தன.
காண்கிறவன்போல் உறுதியாய்ப் பற்றிக்கொண்டு,” தொடர்ந்தான் என்று பைபிள் சொல்லுகிறது. (8 உங்களைக் குறித்ததிலும் இதுவே உண்மையாயிருக்கிறதா? நீங்கள் யெகோவாவை மெய்யான ஆளாக, உங்களை நேசிக்கிற தகப்பனாகக் கருதுகிறீர்களா? பூமியில் பரதீஸில் நித்திய ஜீவனை அளிப்பதைப் பற்றிக்கூறும் அவருடைய வாக்குத்தத்தங்களை நீங்கள் வாசிக்கையில் நீங்கள்தாமே அங்கே இருந்து இந்த ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்வதாகக் காட்சிப்படுத்திக் காண்கிறீர்களா? (156-லிருந்து 162 வரையான பக்கங்களைப் பாருங்கள்.) தவறு செய்யும்படியாக வற்புறுத்தும் இந்தப் பல நெருக்கடிகளுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு யெகோவாவுடன் ஒரு நெருங்கிய உறவு நமக்கு வேண்டியதாய் இருக்கிறது. மேலும் மோசே செய்ததைப்போல் “இனிவரும் பலன்மேல் கருத்தூன்றிய நோக்கமாயிரு”க்க வேண்டும். வேசித்தனத்தில் ஈடுபடுவதற்கான இந்தச் சோதனையை எதிர்ப்பட்ட ஒரு 20 வயது இளைஞன், மோசேயின் நோக்குநிலையை உடையவனாயிருந்தான். அவன் பின்வருமாறு கூறினான்: “ஒரு சில விநாடிகள் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதற்காக, நித்திய ஜீவனையடையும் என் நம்பிக்கையை இழப்பது பெரும் விலைமதிப்புள்ள இழப்பாகும்.” இதுவே, கொண்டிருப்பதற்குச் சரியான மனப்பான்மை அல்லவா?
மற்றவர்களுடைய தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ளுதல்
9 அரசனாகிய தாவீது ஒரு தடவை செய்ததைப் போல், இந்தப் போராட்டத்தில் நீங்கள் உங்கள் காவலை ஒருபோதும் நெகிழ விடக்கூடாது. அவன் ஒருநாள் தன் அரமனை மாடியிலிருந்து கீழே கண்ணோட்டமிட நேரிட்டது, அப்பொழுது தூரத்தில் அழகிய பத்சேபாள் குளித்துக் கொண்டிருப்பதை அவன் கண்டான். தகாத எண்ணங்கள் தன்னுடைய இருதயத்தில் வளருவதற்கு முன்பாகப் பார்வையை அங்கிருந்து திருப்புவதற்கு மாறாக, அவன் விடாமல் பார்த்துக் கொண்டேயிருந்தான். பத்சேபாளுடன் பாலுறவுகள் கொள்ளும்படியான அவனுடைய ஆசை அவ்வளவு கடுமையாகிவிட, அவளை அவன் தன் அரமனைக்குக் கொண்டுவரச் செய்தான். பின்னால், அவள் கர்ப்பம் தரித்தவளாகி, அவன், தங்கள் விபசாரச் செயலை மறைத்துப்போட 2 சாமுவேல் 11:1-17.
முடியாமற் போனபோது, அவளுடைய கணவன் போரில் கொல்லப்படுவதற்கு ஏற்பாடு செய்தான்.—10 அது மெய்யாகவே ஒரு பயங்கர பாவமாக இருந்தது. தாவீது அதற்காக உண்மையில் தீமையை அனுபவித்தான். தான் செய்த குற்றத்திற்காக அவன் வெகுவாய்த் துக்கித்ததுமட்டுமல்லாமல், அவனுடைய வாழ்க்கையின் மீதி நாளெல்லாம் தன்னுடைய குடும்பத்தில் தொல்லைகளை அனுபவிக்கும்படி யெகோவா அவனைத் தண்டித்தார். (சங்கீதம் 51:3, 4; 2 சாமுவேல் 12:10-12) தாவீதின் இருதயம் அவன் உணர்ந்திருந்ததைப் பார்க்கிலும் அதிக திருக்குள்ளதாக இருந்தது; அவனுடைய தவறான ஆசைகள் அவனை மேற்கொண்டது. பின்னால் அவன் சொன்னதாவது: “இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.” (சங்கீதம் 51:5) என்றாலும் தாவீது பத்சேபாளிடம் செய்த அந்தக் கெட்ட காரியம் நடந்திருக்க வேண்டியதில்லை. அவன் விடாமல் அவளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததே அவனுடைய பிரச்னையாயிருந்தது; மற்றொரு மனிதனின் மனைவியின் பேரில் தன்னுடைய பாலுணர்வு சம்பந்தப்பட்ட ஆவல் வளரும்படி செய்த அந்தச் சந்தர்ப்ப நிலையை அவன் தவிர்க்கவில்லை.
11 பால் சம்பந்த தகாத உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் சந்தர்ப்ப நிலைகளுக்கு எதிராக எச்சரிக்கையாயிருக்கும்படி தாவீதின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணமாக, பால் சம்பந்தப்பட்ட காரியங்களுக்குக் கவனத்தைக் கவருகிற புத்தகங்களை நீங்கள் வாசிக்கவும், டெலிவிஷன் நிகழ்ச்சி நிரல்களையும் ஓடும் படங்களையும் பார்க்கவும் நேரிட்டால் என்ன நடக்கும்? பால் சம்பந்த ஆசைகள் அநேகமாய்த் தூண்டி எழுப்பப்படும். ஆகவே பால் சம்பந்த ஆவலை அல்லது “மோகத்தைத்” தூண்டி எழுப்பும் நடவடிக்கைகளையும் பொழுது போக்குகளையும் தவிர்த்திருங்கள். (கொலோசெயர் 3:5; 1 தெசலோனிக்கேயர் 4:3-5; எபேசியர் 5:3-5) மற்றொரு ஆளுடன் வேசித்தனத்துக்கு வழிநடத்தக்கூடிய ஒரு சூழ்நிலையில் உங்களை வைக்காதேயுங்கள். ஒரு 17 வயது இளைஞன் ஞானமாய்ப் பின்வருமாறு குறிப்பிட்டான்: “‘எப்பொழுது நிறுத்திக் கொள்ளவேண்டுமென்று எங்களுக்குத் தெரியும்’ என்று எவரும் சொல்லக்கூடும். மெய்யே, எப்பொழுது என்பதை ஒருவன் தெரிந்திருக்கலாம், ஆனால் எத்தனைபேர் அவ்வாறு செய்யக்கூடும்? அந்தச் சந்தர்ப்ப நிலையைத் தவிர்ப்பதே மேலானது.”
12 யோசேப்பின் முன்மாதிரியை தாவீது மனதில் வைத்திருந்திருந்தால், கடவுளுக்கு விரோதமான அந்தப் பெரிய பாவத்தை அவன் ஒருபோதும் செய்திருக்கமாட்டான். அங்கே எகிப்தில், யோசேப்பு, போத்திபாருடைய வீட்டின் விசாரணைக்காரனாக வைக்கப்பட்டிருந்தான். போத்திபார் வீட்டிலிராத சமயத்தில் பால் வெறிக்கொண்ட அவன் மனைவி, அழகிய தோற்றமுள்ள யோசேப்பைக் கற்பிழக்கச் செய்ய முயலுபவளாய்: “என்னோடே சயனி” என்று கேட்டு வந்தாள். ஆனால் யோசேப்பு மறுத்துவிட்டான். பின்பு ஒருநாள் அவள் அவனைத் திடீரென்று பற்றிப் பிடித்து தன்னோடு படுக்கும்படி செய்ய முயன்றாள். ஆனால் யோசேப்பு அவளுடைய பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ஓடிப்போனான். அவன் தன் சொந்த பால் சம்பந்த ஆசைகளைத் திருப்தி செய்வதைப் பற்றி அல்ல, கடவுளுடைய பார்வையில் சரியானதைச் செய்வதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்ததன் மூலம் தன்னுடைய இருதயத்தை உறுதியாக வைத்திருந்தான். “நான் இத்தனை பெரிய பாதகத்தை நடப்பித்துக் கடவுளுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி?” என்று அவன் கேட்டான்.—வெற்றிபெற உங்களுக்குத் தேவைப்படும் உதவி
13 இந்தப் போராட்டத்தில் வெற்றிபெற, பைபிள் அறிவு உங்கள் இருதயத்துக்குள் ஆழ பதிந்துவருவதற்கு நீங்கள் இடமளிக்க 1 கொரிந்தியர் 6:9-11, தி.மொ.
வேண்டும். இவ்வாறாக அதன்பேரில் நீங்கள் செயல்படும்படி தூண்டி இயக்கப்படுவீர்கள். என்றாலும், யெகோவாவின் காணக்கூடிய அமைப்பின் ஒரு பாகமாகும்படி, நீங்கள் கடவுளுடைய ஜனங்களோடு கூட்டுறவு கொள்வதுங்கூட அவசியம். தவறு செய்வதில் நீங்கள் எவ்வளவு ஆழமாய் உட்பட்டிருந்தாலும் சரி, இந்த அமைப்பின் உதவியைக் கொண்டு நீங்கள் மாறக்கூடும். இவ்வாறு மாறின பூர்வ கொரிந்துவிலிருந்த ஆட்களைக் குறித்து, அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு எழுதினான்: “மோசம் போகாதிருங்கள்; வேசி மார்க்கத்தார் விக்கிரகாராதனைக்காரர் விபசாரக்காரர் தற்புணர்ச்சிக்காரர் ஆண்புணர்ச்சிக்காரர் திருடர் பொருளாசைக்காரர் வெறியர் உதாசினர் கொள்ளைக்காரராகிய இவர்கள் கடவுளின் ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் நீங்கள் கழுவப்பட்டீர்கள்.”—14 இதை எண்ணிப் பாருங்கள்! அந்த முதல் கிறிஸ்தவர்களில் சிலர் முன்னால் வேசி மார்க்கத்தாராக, விபசாரக்காரராக, ஆண்புணர்ச்சிக்காரராக, திருடராக, குடிவெறியராக இருந்தனர். ஆனால் கிறிஸ்தவ அமைப்பினிடமிருந்து வந்த உதவியைக் கொண்டு அவர்கள் மாறினார்கள். அப்போஸ்தலனாகிய பவுல்தானேயும் ஒரு காலத்தில் கெட்ட காரியங்களைப் பழக்கமாய்ச் செய்து வந்திருந்தான். (1 தீமோத்தேயு 1:15) தன் உடன் கிறிஸ்தவனாகிய, தீத்துவுக்கு அவன் பின்வருமாறு எழுதினான்: “ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களுமாயிருந்தோம்.”—தீத்து 3:3.
15 பவுல் கிறிஸ்தவனானபோது, சரியானதைச் செய்வது அப்பொழுது அவனுக்கு எளிதாகிவிட்டிருந்ததா? இல்லை. தான் ஒரு காலத்தில் அடிமைப்பட்டிருந்த அந்தத் தவறான ஆசைகளுக்கும் இன்பங்களுக்கும் எதிராகப் பவுல் தன் வாழ்நாளெல்லாம் நீடித்த ஒரு போராட்டத்தைச் செய்துகொண்டிருக்க வேண்டியதாய் இருந்தது. அவன் பின்வருமாறு எழுதினான்: “மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கும் நானே ஆகாதவனாய்த் தள்ளப்படாதபடி என் சரீரத்தை ஒடுக்கி அடிமையாக்கிக்கொள்ளுகிறேன்.” (1 கொரிந்தியர் 9:27, தி.மொ.) பவுல் தன்னை ‘விட்டுக் கொடாமல் கண்டிப்பாயிருந்தான்.’ தன் உடல் தவறைச் செய்ய ஆவல் கொண்டபோதுங்கூட, சரியானதைச் செய்யும்படி அவன் தன்னை வற்புறுத்துவான். அவன் செய்ததைப்போலவே நீங்களும் செய்வீர்களானால், நீங்களுங்கூட இந்தப் போராட்டத்தில் வெற்றிபெறக் கூடும்.
16 ஏதோ கெட்ட பழக்கத்தைக் கீழடக்கி வெல்லுவதை நீங்கள் கடினமாகக் காண்கிறீர்களென்றால், யெகோவாவின் சாட்சிகளின் அடுத்த பெரிய மாநாட்டுக்கு வந்து கவனியுங்கள். அங்கு வந்திருப்பவர்களின் சுத்தமான நடத்தையும் அவர்களுடைய மகிழ்ச்சியும் சந்தேகமில்லாமல் உங்கள் மனதைக் கவரும். என்றபோதிலும் இவர்களில் பலர் ஒரு காலத்தில், வேசித்தனம், விபசாரம், குடிவெறி, ஒரே பாலினத்தவர் புணர்ச்சி, புகை பிடித்தல், போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல், திருடுதல், மோசடி செய்தல், பொய் சொல்லுதல், சூதாட்டம் ஆகியவை அவ்வளவு சர்வ சாதாரணமாயிருக்கிற இந்த உலகத்தின் பாகமாக இருந்தவர்கள். ஒரு காலத்தில் இவர்களில் பலர் இந்தக் காரியங்களைப் பழக்கமாகச் செய்து வந்தார்கள். (1 பேதுரு 4:3, 4) மேலும் சிறிய சபை கூட்டங்களில் யெகோவாவின் சாட்சிகளோடு நீங்கள் கூட்டுறவு கொள்கையில் (இதை நீங்கள் தாமதமில்லாமல் உடனடியாகச் செய்ய வேண்டும்), ஒருவேளை இப்பொழுது நீங்கள்தாமே எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கும் அதே கெட்ட பழக்கவழக்கச் செயல்களையும் ஆசைகளையும் கீழடக்கி வெல்லும்படி போராடியிருந்திருக்கிற ஆட்களுக்குள் நீங்கள் இருப்பீர்கள். ஆகவே தைரியங் கொள்ளுங்கள்! சரியானதைச் செய்யும்படியான இந்தப் போராட்டத்தில் அவர்கள் வெற்றியடைந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியே நீங்களும் கடவுளுடைய உதவியைக் கொண்டு வெற்றியடையக்கூடும்.
17 இப்பொழுது யெகோவாவின் சாட்சிகளோடு சிறிது காலமாக நீங்கள் பைபிளைப் படித்துக் கொண்டிருக்கிறீர்களென்றால், சந்தேகமில்லாமல் ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு நீங்கள் சென்றிருப்பீர்கள். இந்தக் கூட்டங்களுக்குச் செல்வதைத் தவறாத ஒரு பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட கிறிஸ்தவ கூட்டுறவிலிருந்து பெறும் ஆவிக்குரிய ஊக்கமூட்டுதல் நம்மெல்லோருக்கும் தேவை. (எபிரெயர் 10:24, 25) சபையின் முதியோர் அல்லது “மூப்பர்களுடன்” அறிமுகமாகுங்கள். அவர்களுடைய உத்தரவாதமானது, ‘தேவனுடைய மந்தையை மேய்ப்ப’தாகும். (1 பேதுரு 5:1-3; அப்போஸ்தலர் 20:28) ஆகவே, கடவுளுடைய சட்டங்களுக்கு எதிர்மாறாக இருக்கிற ஏதோ பழக்கத்தை அடக்கி வெல்லும்படி உங்களுக்கு உதவி தேவையென்றால் அவர்களிடம் சொல்வதற்குத் தயங்காதேயுங்கள். அவர்கள் அன்பாயும், தயவாயும் அனுதாபமுள்ளவர்களாயும் இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.—1 தெசலோனிக்கேயர் 2:7, 8.
18 தவறு செய்யும்படியாக நம்மைத் தூண்டி வற்புறுத்துதல் சாத்தானுடைய உலகத்திலிருந்து மட்டுமேயல்ல, நமக்குள்ளிருக்கும் நம்முடைய சொந்த பாவத் தன்மையினிடமிருந்தும் வருகிறது. ஆகவே கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாயிருப்பது ஓர் அன்றாடகப் போராட்டமாயிருக்கிறது. ஆனால் இந்தப் போராட்டம் என்றுமாகத் தொடர்ந்திருக்காதென்பது ஆ, எவ்வளவு நல்லதாயிருக்கிறது! சீக்கிரத்தில் சாத்தான் விலக்கப்பட்டுப் போவான். அவனுடைய பொல்லாத உலகம் முழுவதும் அழிக்கப்படும். பின்பு, சமீபமாயிருக்கிற கடவுளுடைய புதிய ஒழுங்குழுறையில், நம்முடைய வாழ்க்கைப் போக்கை மிகவும் எளிதாக்கும் நீதியுள்ள நிலைமைகள் நிலவியிருக்கும். கடைசியாக பாவ அறிகுறி தடங்கள் யாவும் போய்விட்டிருக்கும். சரியானதைச் செய்வதற்குப் போராடும் இந்தக் கடினமான போராட்டம் இனிமேலும் அங்கே இராது.
19 அந்தப் புதிய ஒழுங்குமுறையின் இந்த ஆசீர்வாதங்களைப் பற்றி தவறாமல் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருங்கள். ஆம், “இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவைத் தரித்துக்கொள்ளுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:8) நம்முடைய மனப்பான்மை, பின்வருமாறு சொன்ன இந்த இளம் பெண்ணினுடையதைப் போன்று இருப்பதாக: “யெகோவா எனக்குச் செய்திருக்கிற மேலும் எனக்கு வாக்குக் கொடுத்திருக்கிற எல்லாவற்றையும் பற்றி நான் சிந்தனை செய்கிறேன். அவர் என்னைக் கைவிட்டு விடவில்லை. அவர் எத்தனையோ பல வழிகளில் என்னை ஆசீர்வதித்திருக்கிறார், மிகச் சிறந்ததையே அவர் எனக்கு விரும்புகிறார் என்பது எனக்குத் தெரியும், நான் அவரைப் பிரியப்படுத்தவே விரும்புகிறேன். நித்திய ஜீவனுக்காக எத்தகைய முயற்சியும் தகுதியானதே.” நாம் உண்மையுடன் நீதியை நாடித் தொடருவோமானால், தம்மை நேசிக்கிறவர்களுக்கு ‘யெகோவா செய்திருக்கிற அந்த எல்லா வாக்குத்தத்தங்களும்’ உண்மையாய் நிறைவேறும்.—யோசுவா 21:45, NW.
[கேள்விகள்]
1. எந்த இரண்டு காரியங்களுக்கு எதிராகக் கிறிஸ்தவர்கள் போராட வேண்டும்?
2. (எ) நாம் ஏன் தவறு செய்வதற்கு அடிக்கடி மிகுந்த ஆசையுள்ளவர்களாக இருக்கிறோம்? (பி) தவறான ஆசைகளுக்குக் எதிராக நாம் ஏன் போராட வேண்டும்?
3. (எ) பலருக்கு உள்ளத்தில் என்ன போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது? (பி) பலர் தாங்கள் சரியானதைச் செய்ய விரும்புகையில் தவறைச் செய்கிற இந்தக் காரியத்தால் எந்தப் பைபிள் சத்தியம் மெய்ப்பித்துக் காட்டப்படுகிறது?
4. (எ) இந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவதோ தோல்லியடைவதோ யார் பேரில் சார்ந்திருக்கிறது? (பி) சரியானதைச் செய்வதற்கான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கு என்ன தேவைப்படுகிறது?
5. கடவுளுடைய சட்டங்களின் பேரில் இருதயப் பூர்வ மதித்துணர்வை நீங்கள் எப்படி அடையக்கூடும்?
6. (எ) தவறானதைச் செய்வதிலிருந்து வரக்கூடிய இன்பம் ஏன் பயனுடையதல்ல? (பி) எகிப்தில் மோசே என்ன வகையான வாழ்க்கையை அனுபவித்திருக்கக்கூடும்?
7. மோசே அந்த எகிப்திய அரச குடும்பத்தில் “சொற்ப கால பாவ சந்தோஷங்களை அனுபவிப்பதை” விட்டு ஏன் விலகினான்?
8. (எ) சரியானதைச் செய்வதற்கான போராட்டத்தில் வெற்றிபெற நமக்கு என்ன தேவை? (பி) ஓர் இளைஞனால் வெளிப்படுத்திக் கூறப்பட்டபடி, என்ன நோக்குநிலையை நாம் கொண்டிருப்பது ஞானமாயிருக்கும்?
9. சரியானதைச் செய்வதற்கான போராட்டத்தில் அரசனாகிய தாவீது எவ்வகையில் தவறினான்?
10. (எ) தன்னுடைய பாவத்துக்காக தாவீது எப்படித் தண்டிக்கப்பட்டான்? (பி) தாவீது விபசாரக் குற்றத்துக்குள் வீழ்வதை எது தவிர்த்திருக்கக்கூடும்?
11. (எ) தாவீதின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ள வேண்டும்? (பி) என்ன நடவடிக்கைகள் “மோகத்தைத்” தூண்டி எழுப்பக்கூடுமென்று நீங்கள் சொல்வீர்கள்? (சி) ஓர் இளைஞன் சொன்ன பிரகாரம் ஞானமுள்ளவன் எதைத் தவிர்க்கிறான்?
12. யோசேப்பின் என்ன முன்மாதிரியை நாம் மனதில் வைக்க வேண்டும்?
13, 14. (எ) இந்தப் போராட்டத்தில் வெற்றிபெற என்ன தேவைப்படுகிறது? (பி) கொரிந்துவில் கிறிஸ்தவர்களானவர்கள் என்ன மாற்றத்தைச் செய்தார்கள், எதன் உதவியைக்கொண்டு? (சி) பவுலும் தீத்துவும் ஒரு காலத்தில் என்ன வகையான ஆட்களாக இருந்திருந்தார்கள்?
15. (எ) சரியானதைச் செய்வது பவுலுக்கு எளிதாக இருக்கவில்லை என்று எது காட்டுகிறது? (பி) பவுலின் முன்மாதிரியிலிருந்து நாம் எப்படிப் பயனடையலாம்?
16. சரியானதைச் செய்வதற்கான போராட்டத்தில் வெற்றிபெற தற்கால என்ன முன்மாதிரிகள் நமக்கு உதவி செய்யக்கூடும்?
17. (எ) இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றியடைய வேண்டுமானால் எந்தக் கூட்டுறவு வேண்டியதாயிருக்கிறது? (பி) பிரச்னைகள் இருக்குமானால் யாரிடமிருந்து நீங்கள் உதவி பெறக்கூடும்?
18. இந்தப் போராட்டத்தில் தளராமல் போராட எந்த எதிர்கால எதிர்பார்ப்பு பலத்தை அளிக்கிறது?
19. யெகோவாவைப் பிரியப்படுத்த எத்தகைய முயற்சியும் எடுக்க நீங்கள் ஏன் மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும்?
[பக்கம் 219-ன் படம்]
பூர்வ எகிப்தின் வாழ்க்கை முறையில் இன்பமனுபவித்தல் இருந்த போதிலும், மோசே ஏன் அதை வேண்டாமென்று தள்ளிவிட்டான்?
[பக்கம் 220, 221-ன் படங்கள்]
தாவீது விடாமல் பார்த்துக் கொண்டேயிருந்தான்; ஒழுக்கக் கேட்டுக்கு வழி நடத்தின அந்தச் சந்தர்ப்ப நிலையை அவன் தவிர்க்கவில்லை
[பக்கம் 222-ன் படம்]
போத்திபாரின் மனைவி அவனை ஒழுக்கக் கேட்டில் ஈடுபட வைக்க முயன்றபோது யோசேப்பு விட்டு ஓடிப்போனான்