அதிகாரம் 42
நாம் ஏன் வேலை செய்ய வேண்டும்?
உனக்கு எது ரொம்ப பிடிக்கும், வேலை செய்வதா அல்லது விளையாடுவதா?— விளையாடுவதில் எந்தத் தவறும் இல்லை. எருசலேம் ‘நகர தெருக்கள் எங்கும் சிறுவர் சிறுமியர் விளையாடிக் கொண்டிருந்தனர்’ என பைபிள் சொல்கிறது.—சகரியா 8:5.
பெரிய போதகர், பிள்ளைகள் விளையாடுவதைப் பார்த்து மகிழ்ந்தார். அவர் பூமிக்கு வருவதற்கு முன் இப்படிச் சொன்னார்: ‘நான் திறமையான வேலையாளாக [கடவுளோடு] இருந்தேன் . . . அவருக்கு முன் எப்போதும் சந்தோஷத்தோடு இருந்தேன்.’ இயேசு பரலோகத்தில் யெகோவாவுடன் வேலை செய்து வந்தார் என்பதை கவனி. அவர் அங்கே இருந்தபோது, ‘நான் மனிதர்கள் மீது பிரியமாக இருந்தேன்’ என்றார். ஆம், ஏற்கெனவே நாம் பார்த்தபடி, சிறு பிள்ளைகள் உட்பட அனைவர் மீதும் பெரிய நீதிமொழிகள் 8:30, 31.
போதகர் உண்மையான அக்கறை காட்டினார்.—இயேசு சிறு பிள்ளையாக இருந்தபோது விளையாடியிருப்பாரா?— அவர் விளையாடியிருக்கலாம். அதேசமயத்தில், அவர் பரலோகத்தில் ‘திறமையான வேலையாளாக’ இருந்ததால் பூமியிலும் வேலை செய்திருப்பாரா?— இயேசு ‘தச்சனுடைய மகன்’ என்று அழைக்கப்பட்டார். அவர் “தச்சன்” என்றும் அழைக்கப்பட்டார். இது எதைக் காட்டுகிறது?— இயேசுவை தன் மகனாக வளர்த்த யோசேப்பு அவருக்கு தச்சு வேலையை கற்றுக்கொடுத்திருப்பார். ஆகவே இயேசுவும் ஒரு தச்சன் ஆனார்.—மத்தேயு 13:55; மாற்கு 6:3.
இயேசு எப்படிப்பட்ட தச்சனாக இருந்தார்?— அவர் பரலோகத்தில் திறமையான வேலையாளாக இருந்ததால், பூமியிலும் திறமையான தச்சனாக இருந்திருப்பார் அல்லவா?— அந்தக் காலத்தில் தச்சு வேலை செய்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? இயேசு
வெளியே சென்று ஒரு மரத்தை வெட்டி, சின்னத் துண்டுகளாக்கி, பிறகு வீட்டிற்கு சுமந்து வர வேண்டியிருந்தது. அதன்பின் அவற்றை செதுக்கி டேபிள்களையும் பெஞ்சுகளையும் மற்ற சாமான்களையும் செய்ய வேண்டியிருந்தது.இந்த வேலை இயேசுவுக்கு சந்தோஷம் தந்திருக்கும் என்று நினைக்கிறாயா?— மற்றவர்கள் பயன்படுத்துவதற்காக நல்ல நல்ல டேபிள்களையும் சேர்களையும் மற்ற சாமான்களையும் செய்து தருவது உனக்கு சந்தோஷமாக இருக்குமா?— ‘சந்தோஷத்துடன் வேலைகள் செய்வது’ நல்லது என்று பைபிள் சொல்கிறது. விளையாடும்போது கிடைக்காத ஒருவித சந்தோஷம் வேலை செய்யும்போது கிடைக்கும்.—பிரசங்கி 3:22.
வேலை செய்வது நம் மனதிற்கும் உடலுக்கும் மிக நல்லது. நிறைய பிள்ளைகள் உட்கார்ந்து டிவி பார்த்தே அல்லது வீடியோ கேம்ஸ் விளையாடியே பொழுதைக் கழிக்கிறார்கள். அதனால் அவர்கள் ரொம்ப குண்டாகிறார்கள் அல்லது சக்தியே இல்லாதவர்களாக ஆகிறார்கள். ஆகவே அவர்கள் உண்மையில் சந்தோஷமாக இல்லை. மற்றவர்களையும் அவர்கள் சந்தோஷப்படுத்துவது இல்லை. சந்தோஷமாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய்?—
மற்றவர்களுக்கு எதையாவது கொடுப்பதும், உதவிகள் செய்வதும் சந்தோஷத்தைத் தரும் என இந்தப் புத்தகத்தில் 17-ஆம் அதிகாரத்தில் நாம் படித்தோம். (அப்போஸ்தலர் 20:35) யெகோவாவை ‘சந்தோஷமுள்ள கடவுள்’ என பைபிள் அழைக்கிறது. (1 தீமோத்தேயு 1:11) நீதிமொழிகளில் சொல்லப்பட்டிருக்கிறபடி, இயேசு ‘அவருக்கு முன் எப்போதும் சந்தோஷத்தோடு இருந்தார்.’ இயேசு ஏன் சந்தோஷமாக இருந்தார்?— ‘என் பிதா இதுவரைக்கும் வேலை செய்து வந்திருக்கிறார், நானும் வேலை செய்து வருகிறேன்’ என்று அவர் குறிப்பிட்டார். இதுவே, அவருடைய சந்தோஷத்திற்கு ஒரு காரணம்.—யோவான் 5:17.
இயேசு பூமியில் வாழ்ந்த காலமெல்லாம் தச்சராக இருக்கவில்லை. யெகோவா தேவன் அவருக்கு பூமியில் ஒரு விசேஷ வேலை கொடுத்திருந்தார். அது என்னவென்று உனக்குத் தெரியுமா?— ‘நான் தேவனுடைய ராஜ்யத்தை பற்றிய நல்ல செய்தியை பிரசங்கிக்க வேண்டும். இதற்காகவே அனுப்பப்பட்டேன்’ என்று இயேசு சொன்னார். (லூக்கா 4:43) இயேசு மக்களுக்கு பிரசங்கித்தபோது அவர்கள் சிலசமயம் நம்பினார்கள். அவர் சொன்னதை மற்றவர்களுக்கும் சொன்னார்கள். இந்தப் படத்தில் தெரிகிற சமாரியப் பெண்ணும் அப்படித்தான் செய்தாள்.—யோவான் 4:7-15, 27-30.
அந்த வேலையைச் செய்வது இயேசுவுக்கு எப்படி இருந்தது? அதைச் செய்ய அவர் விரும்பியிருப்பார் என்று நினைக்கிறாயா?— ‘என்னை அனுப்பியவரின் யோவான் 4:34) இஷ்டமான உணவை சாப்பிட உனக்கு ரொம்பப் பிடிக்கும்தானே?— அப்படித்தான், கடவுள் கொடுத்த வேலையை செய்வது இயேசுவுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.
விருப்பத்தை செய்து அவரது வேலையை முடிப்பதே எனக்கு உணவாக இருக்கிறது’ என்று இயேசு சொன்னார். (வேலை செய்ய கற்றுக்கொள்வது நமக்கு சந்தோஷத்தைத் தர வேண்டும்; ஏனென்றால் அந்த விதத்தில்தான் கடவுள் நம்மை படைத்திருக்கிறார். அவர் மனிதனுக்கு தந்திருக்கும் பரிசு என்ன தெரியுமா? ‘கடினமான வேலை செய்யும்போது கிடைக்கும் சந்தோஷமே’ அந்தப் பரிசு என்று அவர் சொல்கிறார். ஆகவே நீ சிறுவயதிலேயே வேலைகள் செய்ய கற்றுக்கொண்டால், உன் வாழ்நாள் பூராவும் அதிக சந்தோஷமாக இருப்பாய்.—பிரசங்கி 5:19.
பெரியவர்கள் செய்கிற வேலையையெல்லாம் சிறு பிள்ளையாலும் செய்ய முடியும் என்று அர்த்தமல்ல. ஆனால் நம் எல்லாராலும் ஏதாவது வேலையை செய்ய முடியும். உன் அப்பா அம்மா, சாப்பாட்டு செலவிற்காகவும் வீட்டு வாடகைக்காகவும் பணம் சம்பாதிக்க தினமும் வேலைக்கு போகலாம். அதேசமயத்தில் அவர்கள் வீட்டையும் சுத்தமாக, ஒழுங்காக வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது; இதற்காக நிறைய வேலை செய்ய வேண்டும் என்பதை நீ புரிந்துகொள்வது அவசியம்.
நீ என்ன வேலை செய்தால் முழு குடும்பத்திற்கும் உபயோகமாக இருக்கும்?— டேபிளில் எல்லாவற்றையும் எடுத்து வைக்கலாம், பாத்திரங்களை கழுவலாம், குப்பையைக் கொட்டிவிட்டு வரலாம், உன் ரூமை சுத்தப்படுத்தலாம், உன் விளையாட்டுச் சாமான்களை எடுத்து அடுக்கி வைக்கலாம். நீ ஏற்கெனவே இது போன்ற வேலைகளை செய்து கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட வேலைகள் உண்மையில் குடும்பத்திற்கு உபயோகமாக இருக்கும்.
அவை எந்த விதத்தில் உபயோகமாக இருக்கும் என்று பார்க்கலாம். நீ விளையாடி முடித்தவுடன் விளையாட்டுச் சாமான்களையெல்லாம் எடுத்து வைக்க வேண்டும். அது ஏன் முக்கியம் என்று நினைக்கிறாய்?— வீட்டை சுத்தமாக வைத்திருக்க அது உதவும். யாருக்காவது அடிபட்டுவிடாமல் இருக்கவும் அது உதவும். நீ அதை எடுத்து வைக்காவிட்டால் உன் அம்மா கையில் எதையாவது தூக்கிக்கொண்டு வரும்போது ஒருவேளை அதை மிதித்து, கால் தடுமாறி கீழே விழுந்து அடிபடலாம். ஆஸ்பத்திரிக்குக்கூட போக வேண்டியிருக்கலாம். எவ்வளவு கஷ்டம் பார்த்தாயா?— ஆகவே விளையாடி முடித்தவுடன் விளையாட்டு சாமான்களை நீ எடுத்து வைப்பது எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும்.
பிள்ளைகளுக்கு வேறு வேலைகளும் உண்டு. உதாரணத்திற்கு பள்ளிப் படிப்பு
உண்டு. பள்ளியில் நீ வாசிப்பதற்கு கற்றுக்கொள்கிறாய். சில பிள்ளைகளுக்கு அது பிடிக்கும், ஆனால் மற்ற பிள்ளைகளுக்கோ அது ரொம்ப சிரமம். முதலில் அது சிரமமாக தெரிந்தாலும் நன்றாக வாசித்துப் பழகிவிட்டால் உனக்கு சந்தோஷமாக இருக்கும். வாசிக்க கற்றுக்கொண்டால், ஆர்வம் தரும் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ளலாம். கடவுளுடைய புத்தகமான பைபிளைக்கூட நீயே வாசிக்கலாம். ஆகவே நீ பள்ளிப் பாடங்களை நன்றாக செய்யும்போது அது உண்மையிலேயே உபயோகமாக இருக்கும் இல்லையா?—சிலர் வேலையென்றாலே நழுவப் பார்ப்பார்கள். அப்படிப்பட்ட ஒருசிலரை உனக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் கடவுள் நம்மை வேலை செய்வதற்காக உண்டாக்கியிருப்பதால் அதை சந்தோஷமாக செய்ய நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பெரிய போதகர் தன் வேலையை எந்தளவு சந்தோஷமாக செய்தார் தெரியுமா?— தனக்குப் பிடித்தமான உணவை சாப்பிடுவது போல் சந்தோஷமாக தன் வேலையை செய்ததாக சொன்னார். அவர் எந்த வேலையைப் பற்றி அப்படி சொன்னார்?— யெகோவா தேவனைப் பற்றியும் நித்திய ஜீவனைப் பெறும் வழியைப் பற்றியும் மற்றவர்களுக்கு போதிக்கும் வேலையைப் பற்றியே சொன்னார்.
ஆகவே சந்தோஷமாக வேலை செய்ய நமக்கு உதவும் குறிப்புகளை இப்போது கவனி. ‘இந்த வேலையை ஏன் செய்ய வேண்டும்?’ என்று உன்னையே கேட்டுக்கொள். ஒரு வேலை ஏன் முக்கியமானது என்பதை தெரிந்துகொள்ளும்போது அதை இன்னும் ஆர்வமாக செய்ய முடியும். அடுத்ததாக, பெரிய வேலையானாலும் சரி சின்ன வேலையானாலும் சரி அதை நன்றாக செய். அப்போது பெரிய போதகரைப் போலவே நீயும் உன் வேலையில் சந்தோஷத்தைப் பெறுவாய்.
நன்கு வேலை செய்பவராக இருக்க பைபிள் நமக்கு உதவும். இது சம்பந்தமாக நாம் இப்போது சில வசனங்களை வாசிக்கலாம். நீதிமொழிகள் 10:4; 22:29; பிரசங்கி 3:12, 13; கொலோசெயர் 3:24.