நெஃபெஷ்; சைக்கீ
எபிரெய வார்த்தையான நெஃபெஷ், கிரேக்க வார்த்தையான சைக்கீ ஆகியவை பெரும்பாலான தமிழ் பைபிள்களில் ஆத்துமா என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால், இது சரியான மொழிபெயர்ப்பு கிடையாது. ஏனென்றால், இது அழியாத ஆத்துமா இருக்கிறது என்ற பொய் கோட்பாட்டை ஆதரிக்கிறது. நெஃபெஷ், சைக்கீ ஆகிய வார்த்தைகள் முக்கியமாக (1) நபரை, (2) மிருகத்தை, (3) ஒரு நபரின் அல்லது மிருகத்தின் உயிரை அர்த்தப்படுத்துகின்றன. (ஆதி 1:20; 2:7; 1பே 3:20) ஆகவே, இந்த மொழிபெயர்ப்பில், இந்த மூலமொழி வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன என்பதைப் பொறுத்து அவற்றை “உயிர்,” “உயிரினம்,” “மனிதன்,” “நபர்” என்று வெவ்வேறு விதங்களில் மொழிபெயர்த்திருக்கிறோம். பிணத்தைக் குறிப்பிடவும் இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.—எண் 6:6; ஆகா 2:13.