லீபனோன் மலைத்தொடர்
லீபனோன் தேசத்தில் இருக்கிற இரண்டு மலைத்தொடர்களில் ஒன்று. இந்த மலைத்தொடர் மேற்கில் இருக்கிறது, இதற்கு எதிராக இருக்கிற மலைத்தொடர் கிழக்கு லீபனோன் மலைத்தொடர் என்றழைக்கப்படுகிறது. நீளமான, செழிப்பான ஒரு பள்ளத்தாக்கு இந்த இரண்டு மலைத்தொடர்களையும் பிரிக்கிறது. இந்த மலைத்தொடர் மத்தியதரைக் கடலோரத்திலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது; இதன் மலைச் சிகரங்களின் உயரம் சராசரியாக 1,800-லிருந்து 2,100 மீட்டர் வரையாக (6,000-லிருந்து 7,000 அடி வரையாக) இருக்கிறது. பூர்வ காலங்களில், உயர்ந்தோங்கிய தேவதாரு மரங்கள் லீபனோன் முழுவதும் ஏராளமாக இருந்தன. சுற்றியுள்ள தேசங்களில் இந்த மரங்களுக்கு அதிக மதிப்பு இருந்தது. (உபா 1:7; சங் 29:6; 92:12)—இணைப்பு B7-ஐப் பாருங்கள்.