அப்போது அவர்கள் அறிவார்கள்
பாட்டு 112
அப்போது அவர்கள் அறிவார்கள்
1. சத்துருக்கள் உம்மை நிந்தித்தார்கள்.
வஞ்சித்து உம்ஸ்தலம் கெடுத்தார்கள்.
உம்ராஜாவால் நீதி காக்கப்படும்
சாத்தான் ராஜாங்கம் ஒழிக்கப்படும்.
(பல்லவி)
2. உம்பலத்தை சாத்தான் நிந்தித்தானே.
விரைவில் உம்வல்லமை காண்பானே.
அர்மகெதோன் யுத்தம் வந்திடுமே.
சாத்தான் சேனையைக் காணமாட்டோமே.
(பல்லவி)
3. இரக்கமற்ற மேட்டிமை மக்கள் பிறரை
ஆளநினைக்கிறார்கள்.
உம்மாகரத்தால் நொறுக்குவீரே.
உம்சினம் தூண்டுவோர் அழிவரே.
(பல்லவி)
நீரே யெகோவா என்று அறிவார்கள்.
உம்பாதை சீரென்று அறிவார்கள்.
நிறைவேற்றுவீரே உம்நோக்கம்யாவும்.
இதை அறியுமே சிருஷ்டியாவும்.