Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சகலமும் புதிதாக்கப்படுகிறது

சகலமும் புதிதாக்கப்படுகிறது

பாட்டு 187

சகலமும் புதிதாக்கப்படுகிறது

(வெளிப்படுத்துதல் 21:4)

1. சான்று உண்டு தேவாட்சி துவங்கிற்று,

தேவமைந்தன் மகிமையில் வீற்று.

பரமபோரில் வெற்றிகண்டாரே,

தேவசித்தம் நிறைவேற்றுவாரே.

(பல்லவி)

2. புதிய எருசலேம் கற்புள்ளவள்.

தேவாட்டுக் குட்டியின் மனைவி அவள்.

வைரங்கள் அணிந்து ஜொலிக்கிறாள்.

யெகோவாவின் ஒளிபெறுகிறாள்.-

(பல்லவி)

3. எழில் நகரில் மகிழ்வர் எல்லாரும்.

வாசல் எப்போதும் திறந்திருக்கும்.

மகிமையிலே நடந்திடுவீர்.

தேவதாசர் அவ்வொளி வீசுவீர்.

(பல்லவி)

மகிழ். மக்கள் மத்தியிலே

தேவனே வாசஞ் செய்வாரே.

கூக்குரல் வலி இனி இல்லை.

துக்கமும் மரணமும் இல்லை.

‘சகலமும் புதிது,’ என்றாரே

‘இவை உண்மை, சத்தியமே.’