முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
பாட்டு 15
முடிவில்லா வாழ்க்கை—கடைசியில்!
1. கண்டீரோ மனக்கண்ணால்
மக்கள் ஒன்றாய் வாழ்வதை?
துக்கமில்லை. அமைதி!
வாழ்வில் துன்பம் இல்லை.
(பல்லவி)
2. மனிதர், மிருகமும்
ஒன்றாகக் கூடிவாழும்.
தேவன் தரும் உணவு,
உண்போமே பகிர்ந்து.
(பல்லவி)
3. மூப்பு இளமை பெறும்.
சிறார்மாம்சம் போலாகும்.
தொல்லை அழுகை இல்லை.
அஞ்ச தேவை இல்லை.
(பல்லவி)
4. பரதீஸ், மகிழ்வார்கள்.
தேவனைப் பாடுவார்கள்.
எந்நாளும் “நன்றி!” என்போம்.
தேவனுக்கே சொல்வோம்.
(பல்லவி)
மகிழ்ந்து பாடுங்கள்.
அதில் பங்கெடுங்கள்.
அந்நாளிலே சொல்வீர்ரே:
“முடிவில்லா வாழ்க்கை!”