யெகோவாவின் நட்பைப் பெறுதல்
பாட்டு 217
யெகோவாவின் நட்பைப் பெறுதல்
1. யெகோவாவே, யார்உம் மெய் நட்பைப்பெறுவான்?
யார்உம் கூடாரத்தில் விருந்தினனாய் தங்குவான்?
தேவனை அஞ்சாது சேவிக்கும் உத்தமன்;
இதய சுத்தத்துடன் சத்தியம் பேசுகிறவன்.
யெகோவாவே யார் உம் நட்பைப்பெற்றுக்கொள்வான்?
யார் பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்?
தன் அயலான் எரிச்சல்கொள்ளாதபடி பேசுகிறவன்.
(பல்லவி)
2. யெகோவா, உம்மோடு யார்வாசம் பண்ணுவான்?
நீர் தங்க விரும்பும் உம்நண்பனாய் யார் இருப்பான்?
வேதனைகளிலும் சொல்தவறாதவன்;
சத்தியத்தை இடைக்கட்டி நேர்மையாய் நடப்பவன்.
யெகோவா நாங்கள் உம்நட்பை வாஞ்சிக்கிறோம்.
நீர் விரும்புவதை உம்வார்த்தையில் வாசிக்கிறோம்.
நாங்கள் வழிகளைச் சீரமைத்துக்கொண்டால் நீர்எங்கள்நண்பர்
(பல்லவி)
3. யெகோவா உம்மோடு தங்கவிருப்பமே.
உம்சமாதானம் எல்லாப்புத்திக்கும் மேலானதே.
கிறிஸ்துமூலம் உண்மைவணக்கம் ஸ்தாபித்தீர்.
திரளானோர் வணக்கத்திற்குப் பாத்திரரானீர்.
உன்னததேவனே, உம்நட்பைக் காக்கிறோம்.
எங்கள் வாழ்க்கை கெடாதபடி காத்துக்கொள்கிறோம்.
உமதுயர்ந்தபர்வதத்தில் ஒரேசேனையாய் நிற்கிறோம்.
(பல்லவி)
யெகோவாவே, நாங்கள் என்றும் உம்நண்பர்கள்.