வேத வசனங்கள்–தேவாவியால் ஏவப்பட்டது, பிரயோஜனமுள்ளது
பாட்டு 46
வேத வசனங்கள்–தேவாவியால் ஏவப்பட்டது, பிரயோஜனமுள்ளது
1. தேவவார்த்தை ஓர்ஒளி;
இருளில் வழிகாட்டி.
சுயாதீனத்தின் தீபம்;
‘விடுவிக்கும் சத்தியம்.’
2. வேத வசனம் பெற்றோம்;
தேவ அன்பை அறிவோம்.
விசுவாசம் ஞானியாக்கும்.
ஜீவவழி காட்டிடும்.
3. தேவாவி ஏவினது;
தேவைகளைப் போதித்து;
சீர்படுத்த உதவும்;
தேவசிட்சை அளிக்கும்.
4. இது பயனுள்ளது;
புத்திசொல்லும் கடிந்து.
தேவ மனிதனையும்
தகுதிபெறச் செய்யும்.